கதையாசிரியர் தொகுப்பு: போதிபாலன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

கல் நூல்

 

 1 அன்புமிக்க நண்பா, இன்றைக்கு, அதுவும் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த குறிப்பு உன்னை மட்டுமல்ல உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்த போகிறது. அதற்கான உறுதியான சான்றுகளை அண்மையில் ஆய்வுக்குறிப்புகளில் இருந்து கண்டடைந்து விட்டேன். லிபிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த வேளையில், அதற்கு பிறகான புனைவியம் குறித்த எனது தேடல் நீ அறிந்ததே. ஆனால் தற்போது நம் மொழியில் பண்டைய இன குழுவினர் செய்த காரியம் உலக மனித பரிணாம வரலாற்றில் இது வரை யாரும் செய்யாத


பயணிகள் நிழற்குடை

 

 மூச்சிரைக்க மெல்ல நடந்து வந்து தனது வீட்டின் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற போது என்றைக்கும் இல்லாத அளவிற்கு கரியமுதனுக்கு வியர்த்துக் கொட்டியது. தனது சட்டையின் இடது கீழ்புறத்தில் வைத்திருந்த பையில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். காலை நேரத்து வெயிலும், இதமான குளிரும் கலந்து அவருடைய உடலுக்குள் வினோத உணர்வுகளை தோற்றுவித்தது. அவர் நிமிர்ந்து பார்த்தார். மிகப் பெரிய மைதானத்தைப் போன்ற அகன்ற வீதியுடைய நான்கு வழிச்சாலை பரந்து அவரது


சுழலும் வீடுகள்

 

 கத்தியால் குத்தி பெண் படுகொலை / கணவனை கொல்ல தீட்டம் தீட்டிய பெண் கள்ள காதலர்களால் பலியான பயங்கரம் என்ற தலைப்பிடப்பட்டு செய்தி ஒன்று பத்திரிக்கைகளில் வெளியானது சென்னை கொசப்பாக்கம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர் விநாயக மூர்த்தி. (வயது 42) இவரது மனைவி வசந்தா (வயது 28). விநாயக மூர்த்தி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று நடந்த விபரம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது – விநாயக மூர்த்தி மதுரையைச் சேர்ந்தவர்.


புகுஷிமாவும் கண்வலியும்

 

 கொஞ்சம் கொஞ்சமாக அலுவலக ஏசி அறையையும் மீறி அவனது கண்ணின் கற்கட்டி வலி கூடத் தொடங்கியிருந்தது. காலையில் வீட்டை விட்டு கிளம்பும் போதே அவள் அவனிடம் வாஞ்சையுடன் தெரிவித்த கவலை அவனது வலியை சற்று குறைத்ததைப் போல தோன்றினாலும் அந்த வலி அத்தனை எளிதில் அவனை விட்டு நீங்கிவிடும் என்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. விரைந்து சென்று அவளது குளிரான அணைப்பிற்குள் தன்னை பொதிந்து கொண்டு தீராத ஓய்விற்குள் பாய்வதற்கு அவனது உடலும் மனமும் அல்லாடியபடி இருந்ததை அவனது