கதையாசிரியர் தொகுப்பு: பூர்ணம் விசுவநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

செல்லம்மாளின் மறுமணம்

 

 ‘டக் டக்’ என்ற பூட்ஸ் சத்தம் , அந்த ‘ ஸ்பெஷல் வார்’டில் நிறைந்திருந்த அமைதியை மிகைப்படுத்திக் காட் டிற்று. அந்தச் சத்தம் நாலாம் நம்பர் அறையை நெருங்கிய போது செல்லம்மாளின் கட்டிலைச் சுற்றி நின்று கொண்டி ருந்த எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். டாக்டர், படுக்கையருகே சென்று ஒரு முக்காலியில் அமர்ந்து செல்லம்மாளின் உடல் நிலையைச் சோதித்துப் பார்த்து விட்டு, ஒன்றும் பேசாமல் அப்படியே கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தார். பிறகு, மீண்டும் ஒரு தடவை செல்லம்மாளின் நாடியைப் பிடித்துப்