கதையாசிரியர் தொகுப்பு: ந.பிரபாகரன்

1 கதை கிடைத்துள்ளன.

வட்டங்களுக்கு வெளியே

 

 ஜீப் வேகமாக மேடுகளில் ஏறிக் கொண்டிருந்தது. காளியண்ணன் கண்களை மூடி, சீராக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கையில் எனக்கு கொஞ்சம் பொறாமையாகதான் இருந்தது. இவன் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்கலாம் என்று மனம் பொருமியது. காளியண்ணனுடன் ஆசானைப் பார்க்கப் போகிறேன் என்று வைதேகியிடம் சொன்னவுடன் அவளிடமிருந்து வந்த முதல் வார்த்தையே நிராகரிப்புத்தான். “அவன்கூட போக வேண்டாம். நமக்கு அவனால எதுவுமே நல்லது நடக்கலை. அவன் சகவாசம் எப்பவுமே உங்களுக்கு பிரச்சனைதான். இப்பதான் பிரச்சனை எல்லாம் தீர்ந்து,