கதையாசிரியர் தொகுப்பு: தேவன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

மதுரஸா தேவி

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தினசரிப் பத்திரிகைகளில் சில தினங்களாக ஓர் ஆச்சரியமான விஷயம் “அடிபட்டுக்கொண்டிருக்கிறது. தேச சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள், மனிதவர்க்கத்தின் பண்டைய வாழ்வைச் சோதனை செய்பவர்கள், கற்பனை மன்னர்கள் ஆகியவர்களின் மூளையை மிகவும் குழப்பியுள்ள செய்தி அது. நேபாளத்தின் எல்லைக் கோட்டுக்கு அருகிலே, ரூப்கந்த் ஏரியின் சுற்றுப்புறத்தில், ஏராளமான மனித எலும்புகள் நாலு புறமும் சிதறிக் கிடக்கின்றன என்பதே அந்தச் செய்தி. ஆயிரக் கணக்கான வருஷங்க ளாக


வைத்தியம்

 

 தேவன் மருமகனுக்கு எழுதிய கடிதம் எனது அன்புள்ள சிரஞ்சீவி விச்சு, நான் சென்ற வாரம் எழுதிய கடிதத்தைப் பார்த்த பின்னர், உன் மனத்திலே என்ன தோன்றுகிறது என்பதை என்னால் ஊகிக்க முடியும். ”எழுத்தாளனாகும் வழிகளைப் பற்றி இந்த மாமா பெரிய வார்த்தைப் பந்தலைப் போட்டுவிட்டு, ‘என்னத்தை எழுதுவது’ என்பதைப் பற்றியே சொல்லவில்லையே!” என்று நீ நினைப்பாய். வாஸ்தவம். எழுத்தாளன் வெற்றி அதிலும்கூட இருக்கிறது! சரியான ஒரு ‘ஸப்ஜெக்ட’ அகப்பட்டு, அவன் எழுத்தும் சரளமாக அமைந்து விட்டால், அப்புறம்


நாகப்பன்

 

 நாகப்பனுடைய தொழில் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ளக் கூடியதுமல்ல; நாலு பேர் அறியச் செய்யக் கூடியதுமல்ல, அவன் செய்தது திருட்டுத் தொழில். அவனுடைய ஆயுளில் எத்தனையோ பொருள்களை எவ்வளவோ சிரமப்பட்டுக் களவாடியிருக்கிறான்; ஆனால் அவனுடைய மனைவியின் இதயத்தைக் கொள்ளை கொள்வது மட்டும் அவனுக்கு அசாத்தியமாகவே இருந்து வந்தது. அவளுடைய வசவுகளுக்கும் பிரசங்கங்களுக்கும் எல்லையே இல்லாமல் இருந்தது. பேசும்போதே அவளுக்கு ஒரு கால் மூச்சு நின்றுவிடுமோ என்று அவன் வியந்தது உண்டு. அன்று அவன் சோறு தின்ன உட்கார்ந்த பொழுதே


உபாத்தியாயர்கள்

 

  ஒரு பழைய காலத்துக் கதை உண்டு; ஒரு சமயம் ஒரு பைராகிக்கும் ஒரு பிராம்மணனுக்கும் சண்டை வந்ததாம். பிராம்மணன், ”படவா, ராஸ்கல், காமாட்டி, அயோக்கியா” என்று தெரிந்தவரையில் வைது பார்த்தான். பைராகியோ அவன் பாஷையில், ”ஹி,ஹ¤, ஹை” என்று சரமாரியாய்ப் பொழிந்தான். பிராம்மணனுக்குச் சிறிது நேரத்திற்குள் வசவுகள் ஆகிவிட்டன; சளைத்தவனாகவும் காட்டிக் கொள்ளக்கூடாது. ”அடே! மோர்க் குழம்பே, வெண்கலப் பானையே, கற்சட்டியே, பொடலங்காய்ப் பொரிச்ச கூட்டே, முள்ளங்கிச் சாம்பாரே…!” என்று ஆரம்பித்து அடுக்கினான். பார்த்தான் பைராகி.


விளம்பர வாழ்க்கை

 

 சுப ஜனனம் இன்று காலை ஏழு மணிக்கு ராவ் பகதூர் ராஜாராமின் மனைவியார் ஸ்ரீமதி மீனாட்சி பாய்க்கு ஒரு புருஷப் பிரஜை ஜனனமாகியிருக்கிறது. தாயும் சிசுவும் §க்ஷமமாக இருக்கிறார்கள் என்று உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது. நர்ஸ் தேவை குழந்தைகளைப் பராமரிக்க அநுபவமுள்ள நடுத்தர வயதுள்ள நர்ஸ் தேவை. வேறு அலுவல்கள் எதுவும் இல்லாமல் குடும்பத்துடன் வந்து தங்கியிருக்க சம்மதப்படுபவர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். மாதச் சம்பளம் ரூ.15, காலை 7 மணி முதல் 10 மணி வரையில்


அட நாராயணா!

 

 காலையில் நான் பேப்பர் படிக்க உட்காருவதும், “ஸார்!” என்று கூப்பிட்டுக் கொண்டு அடுத்த வீட்டு நாராயணசாமி ஐயர் வருவதும் சரியாக இருக்கும். ஆசாமி வந்து விட்டால் நான் பேப்பர் படித்தாப் போலத்தான்! அவர் கையில் அதைக் கொடுத்து விட்டுச் ‘சிவனே’ என்று உட்கார்ந்து விட வேண்டியதுதான்! இதுதான் தொலையட்டும். இன்னும் கேளுங்கள்.   சாயந்திரம் ஆபீஸிலிருந்து வருகிறோமா? சற்று விச்ராந்தியாக சம்சாரத்தோடு பேசிக் காலங் கழிக்கலாமென்று ஆவல் இருக்குமா, இராதா? நமக்கு இல்லாவிட்டாலும் சம்சாரத்துக்காவது இருக்கும் அல்லவா?


நாய்களைப் பற்றிய சில சிந்தனைகள்

 

 நானும் என் ராஜமும் மைத்துனியின் கல்யாணத்திற்குச் சென்று விட்டு உத்தமர் கோவிலிலிருந்து ரயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். ஏதோ ஒரு ஸ்டேஷனில் (பெரிய மனுஷர்களைப் போல் இந்த இடத்தில் எனக்கும் ஞாபகம் வர மறுக்கிறது!) பிளாட்பாரத்தின் எதிர்ப் புறமாக இரண்டு சின்னப் பயல்கள் வண்டிக்குள் தாவினார்கள். எட்டு, ஒன்பது வயதுக்குள்தான் இருக்கும்; அரையில் மிக அழுக்கான – ஜலத்தில் நனையாத – வஸ்திரம்தான் உடுத்தியிருந்தார்கள். நாங்கள் இருப்பதையே அவர்கள் லட்சியம் செய்யவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவுடன் அவர்களில்


சில விளையாட்டுக்கள்

 

 (சின்ன ராஜாமணி சொன்னபடி) லீவ் நாள் வரப்போறதுன்னு நினைச்சுண்டாலே எனக்குச் சந்தோஷம் தாங்கல்லே. நடுக் கிளாஸ்லே ‘டட்டட் டோய்!’ன்னு கத்துவோமான்னு தோண்றது. ஆனால், நான் அப்படிக் கத்தல்லை. ஏன்னா, வாத்தியார் ஏதாவது நினைத்துக்கொள்வார். அவர், ”என்னடாலே! என்ன ஆனந்தம் தாங்கல்லே! வீட்டுக் கணக்கைப் பார்த்தவுடனே அப்படியிருக்கோ?” இன்னுட்டு இரண்டு தீட்டுத் தீட்டிடுவார். அப்பா ஒரு நாளைக்கு என்னை ‘டென்னிஸ் கோர்ட்’டுக்கு அழைத்துக்கொண்டு போயிருந்தார். அதுமுதற் கொண்டு எனக்கும் டென்னிஸ் ஆட வேண்டுமென்ற ஆசை வந்துடுத்து. ஆனால் கோபாலக்


அலமுவின் சுயசரிதை

 

 [ஸ்ரீமதி அலமு தன் சுய சரிதையை எழுதியிருக்கிறாள். அவளுக்கு எழுதுவதற்கான அவகாசம் அதிகமாய்க் கிடையாதாகையால், இந்தச் சரித்திரத்தின் நடை ஒரு மாதிரியாயிருந்தாலும் நீங்கள் மன்னித்துக் கொள்ளவும். அவளுடைய வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களைப்பற்றிய குறிப்புகள் அவ்வப்போது அவள் வைத்திருந்தபோதிலும், அவைகளை அவள் லக்ஷ்யம் செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே, அவள் முக்கியமாகத் தன்னுடைய ஞாபக சக்தியின் பேரிலும், கற்பனை சக்தியின் பேரிலுமே பூராவாக நம்பிக்கை வைத்திருக்கிறாள். அலமு தன் கதையை எழுத ஆரம்பித்துவிட்ட சமாசாரம் கேள்விப்பட்ட அவளுடைய பழைய சிநேகிதிகளுக்கிடையே


விச்சுவுக்குக் கடிதங்கள்

 

 என் அன்பார்ந்த விச்சு, உன் அருமையான கடிதம் கிடைத்தது. ‘அருமை’ என்ற பதத்தை நான் ரொம்ப ரொம்ப யோசனை செய்து உபயோகிக்கிறேன். குழந்தாய்! ‘என் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி’ நீ அந்தக் கடிதத்தில் ஐந்து தடவைகள் திரும்பத் திரும்ப ‘அருமை’யாக எழுதியிருப்பது ஒன்று. இரண்டாவது, நீ மதுரையில் உன் தகப்பனார் வீட்டுக்கு விடுமுறை தினங்களை ஆனந்தமாகக் கழிப்பதற்குச் சென்று, அங்கிருந்து கோடைக்கானலுக்குப் போய் மாசம் ஒன்றரை ஆகியும் கூட, மாமாவுக்கு அருமையாக எழுதும் முதல் காகிதம்