கதையாசிரியர் தொகுப்பு: தமிழ் தரணி

4 கதைகள் கிடைத்துள்ளன.

நோன்பு பிறை!

 

 மாலை நேர தொழுகைக்கு பின், கிராமத்திலிருக்கும் மசூதியின் வெளிப்புறத்தில் நின்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன சுல்தான் பாய் பிறை தெரியுதா? என குரல் கொடுத்தவாறே வந்தார் உமர் பாய். வாங்க பாய்.. இன்னும் தெரியல என்றார் சுல்தான் பாய். இன்று பிறை தெரிந்தால் நாளை முதல் நோன்பு நோற்க வேண்டும். அந்த ஆர்வம் அனைவரின் முகத்திலும் தெரிந்தது. சிறிது நேரத்தில் அதோ அங்கே பிறை தெரியுது என சிறுவன்


போலி போராளி!

 

 ஒருநாள் இரவு போலீஸ் பெரும்படையுடன் போய் அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்த முயன்றனர். திடீரென்று எங்கிருந்தோ வந்த கதிரவன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசுடன் போராடினார், போலீஸ் அவரை கண்மூடித்தனமாக தாக்கி இழுத்து கொண்டுப் போனது. அரசியல்வாதி கதிரவனுக்கு பாராட்டு விழா… ஊரெங்கும் பேனர்,கட் அவுட் என அமர்க்களப் படுத்தியது. இதை பேருந்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த இரு நண்பர்களில் ஒருவர் மற்றவரிடம் கேட்டார்… “யாருப்பா இது?.இவ்வளவு பெரிய பாராட்டு விழா நடக்கிறது?” என்று கேட்டார். “ஓ இவரைப்


அம்மாவின் தாலி..!

 

 சில நாட்களாக அம்மா படுத்தப்படுக்கையாக இருக்கிறாள் என்று மாமாவிடம் இருந்து வந்த தகவலை கேட்டு தான் பணிபுரியும் திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டான் கார்த்தி. பேருந்து புறப்பட தன் அம்மாவின் நினைவுகளில் மூழ்கினான். சிறு வயதில் தந்தை இறந்துவிட கார்த்தி மற்றும் அவன் அண்ணன் அருண் இருவரையும் அம்மாதான் வளர்த்தாள். அம்மாவின் அன்புடன் கண்டிப்பும் சேர்ந்து இருக்க கார்த்திக்கும் அவன் அம்மாவிற்கும் தினமும் சண்டைதான். படிப்பு முடிந்தவுடன் அருணுக்கு அரசு உத்தியோகம் கிடைக்க பின்பு அருணுக்கு திருமணம்


உண்மை..!

 

 “அப்பா எனக்கு கொஞ்ச நாளாக வயிற்று வலி தாங்க முடியவில்லை. என்னால் வாழ முடியவில்லை. நான் சாகப் போகிறேன்” என தன் மகள் கவிதா பதட்டமாக போனில் பேச பதறி அடித்து ஓடினார் ஆசிரியர் கதிரவன். தன் மகள் எரிந்த நிலையில் பிணமாய் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துப் போனார். ஆசிரியர் கதிரவனுக்கு ஒரே மகள் கவிதா. 10 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் தன் மனைவி இறந்துவிட மகள் கவிதாவை msc வரை படிக்க வைத்தார்