கதையாசிரியர் தொகுப்பு: தஞ்சாவூர்க்கவிராயர்

3 கதைகள் கிடைத்துள்ளன.

மனைப் பாம்பு

 

 மலைப்பாம்பு தெரியும்; அதென்ன மனைப்பாம்பு என்று, உங்களில் சிலர் வினவக் கூடும். குறிப்பாக நகரவாசிகள். பாம்பு பார்க்க ஆசைப்படும் குழந்தைகளைப் பாம்புப் பூங்கா கூட்டிப் போனால், விதவிதமான பாம்புகளைப் பார்க்கலாம். எல்லாமே கம்பித் தடுப்புக்குள் வாழ்கின்ற பரிதாப ஜீவன்கள். கண்ணாடிப் பெட்டிகளுக்குள் கருநாகங்கள். கட்டு விரியன்கள். மலைப்பாம்பு குட்டிகள். ராஜநாகங்கள். சுதந்திரம் இல்லாது போனால் பாம்பென்ன, மனிதன் என்ன எல்லாம் ஒன்றுதான். அடுக்கு மாடிகளிலும், புறாக் கூண்டு வீடுகளிலும் சிறைப்பட்டிருக்கும் நகரவாசிகளுக்கும் நகர முடியாமல் படுத்துக் கிடக்கும்


பொர்மாநெக்கும் தமிழ்ப் பெண்டிரும்

 

 ஒரு வெள்ளைக்காரனுடன் ஒரே வீட்டில் குடியிருந்த அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்? எனக்குக் கிடைத்தது. 25 வருடங்களுக்கு முந்தைய கதையைச் சொல்கிறேன். தஞ்சாவூர் மேல வீதியில் பாலோபா சந்தில் குடியிருந்தோம். தஞ்சாவூர் சந்துகள் பிரசித்தி பெற்றவை. புராதனத் தன்மைகொண்டவை. விசித்திரமான மராட்டியப் பெயர்களுடன் கூடிய தஞ்சாவூர் சந்துகளில், தலைமுறை தலைமுறையாக மனிதர்களும் மாடுகளும் வசித்து வருகிறார்கள். அழகான பெண்களும், அசிங்கமான சாக்கடைகளும், தண்ணென்ற குளிர்ச்சியும்கொண்ட எந்தச் சந்தில் நுழைந்தாலும் ஒரே மாதிரி தோற்றத்துடன் திகைப்பை உண்டு பண்ணும்.


வானவில் தரைதொடல் தகுமோ?

 

 வானத்தின் மீது ஒரு பெரிய குடையைக் குபுக்கென்று விரித்த மாதிரி இருட்டிக்கொண்டு குவிந்தன மேகங்கள். இருட்டிக்கொண்டு வருகிற மேகங்களைப் பார்க்கும்போது, எங்கோ படித்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கைதான் ஞாபகத்துக்கு வரும். மேற்கு வங்காளத்தில் காமார்புகூர் என்ற சிற்றூர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை வயல்கள். வரப்பின் மீது ராமகிருஷ்ணர் போகிறார். மேலே வானம் கும்மென்று இருட்டிக்கொண்டு வருகிறது. அண்ணாந்து பார்க்கிறார். மேகங்களின் இருட்டுப் பின்னணியில் வெள்ளை வெளேர் என்ற கொக்குகள் கூட்டமாகப் பறந்து போகின்றன. அந்தக்