கதையாசிரியர் தொகுப்பு: தங்க.ஜெய்சக்திவேல்

2 கதைகள் கிடைத்துள்ளன.

கரோனா கால பயணம்

 

 வழக்கமான பயணமாக இருக்கவில்லை அந்தப் பயணம். இப்பொழுது நினைத்தாலும் மனது நடுங்குகிறது. காரணம் கரோனா. ஊர் பேர் தெரியாத இடத்தில் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும். அப்படியான ஒரு அனுபவம் தான் அது. இந்த அனுபவத்தினை யாருக்கும் சொன்னால் புரியாது, அனுபவித்தால் தான் புரியும். இப்படியான அனுபவம் யாருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. காரணம் எனது அந்தப் பயணம் மிக நீண்டது. இந்தியாவில் கரோனா காய்ச்சல் தொடங்கும் முன்னரே நான் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். அதுவும் 16,000 கி.மீ பயணம்.


மார்ஷல் ரோடு

 

 அந்த ரோட்டுக்கு பெயர் ‘மார்ஷல் ரோடு’ எக்மோரில் உள்ளது. இப்பொழுது அந்த ரோட்டுக்கு பெயர் வேறு. ராஜரத்தினம் ஸ்டேடியம் வந்தபின் அந்த ரோட்டுக்கும், அந்த பெயரே நிலைத்துவிட்டது. வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று அந்த ரோட்டில் இருந்தது என நண்பன் ரவி கூற கேட்டு அங்கு சென்றேன். அவன் அந்த தகவலை என்னிடன் கூறியதற்கு காரணம் உள்ளது. நான் வானொலித் தொடர்பான எதைப் பார்த்தாலும் என்னிடம் கூறு என்று கூறியிருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் அவனிடம்