கதையாசிரியர் தொகுப்பு: ஞானபாரதி

1 கதை கிடைத்துள்ளன.

முத்த ஈரம்

 

 ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு, தொலைக்காட்சியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே வந்தான் பாலா. ஒரு சேனலில் பாடல் காட்சியில் காதலனும் காதலியும் முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தது. அடுத்த நொடியில், திடீரென ஒரு ஏக்கம் கலந்த சோகம் அவனுள் இழைந்தோடியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்த சோகம் அவனைத் தாக்கியது. இந்த சோகம் அவனுக்குள் அடிக்கடி வராது என்றாலும், இந்த சோகம் அவனுக்குள் இருப்பதை அவன் அடிக்கடி உணர்ந்திருக்கிறான். ‘தான் முத்தம் கொடுக்கவோ, தனக்கு முத்தம் கொடுக்கவோ யாரும்