கதையாசிரியர் தொகுப்பு: ஜே.செல்லம் ஜெரினா

16 கதைகள் கிடைத்துள்ளன.

நிறம் மாறும் மனசு!

 

 “”அய்யா உங்களைப் பார்க்க ஒரு அய்யா வந்திருக்காக… மேனேஜர் அய்யா உங்களை கையோட அழைச்சிட்டு வரச் சொன்னாங்க…” என்ற காமாட்சியின் பின்னாலேயே நடந்தார் அவர். “”அய்யா கிட்ட ஒண்ணு கேட்கலாமுங்களா” “”கேளேன் காமாட்சி” “”ஏன்யா, நீங்க இந்த இல்லத்தை விட்டுட்டுப் போறீங்களாமே… நிஜமா…” அவர் சிரித்துக் கொண்டே, “” நீ சொல்லு காமாட்சி இருக்கட்டுமா… போகட்டும்மா?” “”நீங்க தா முடிவு பண்ணனும். ஆனா, ஒண்ணு, நீங்க இல்லைன்னா… இந்த இல்லத்துலே… இந்த இல்லத்துலே…” என்று எதையோ சொல்ல


பூங்சிறகுகளின் உயிர்ப்பு!

 

 அந்த பிரபலமான, “டிவி’ சேனலின், பிரபலமான புரோகிராம் அது. படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் இயக்குனர் ராதா, நிகழ்ச்சியின் போக்கில் கவனமாக இருந்தாள். இந்த முறை, “டாபிக்’கே வித்தியாசமானது. திருநங்கைகள், தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்பும், முன்பும், சம்பந்தப்பட்ட குடும்பத்தாரின் உணர்வுகள், பிரச்னைகள், நடவடிக்கைகள் – இது தான் கான்செப்ட். நிகழ்ச்சி சூடு பிடித்துக் கொண்டிருந்தது. இதோ… இதோ… மைக், சரவணமுத்துவிடம் வந்து விட்டது. மைக்கை கையில் வாங்கியதுமே, அவன் கதற ஆரம்பித்து விட்டான்.


புதியதோர் ஆரம்பம்!

 

 மொபைல் போன் கதறியது; ஓடிவந்து எடுத்தாள் தாமரை. “”ஹலோ தாமரை… வீட்டுல தானே இருக்க?” “”ஆமாண்ணே… சொல்லுங்க.” “”ஒண்ணுமில்லே… பசங்க ஸ்கூல்லே என்னவோ பிரச்னையாம், போன் வந்தது. நான் குழந்தைகளை அழைச்சிட்டு வந்திடறேன். வீட்லயே இரும்மா.” “”என்னண்ணா பிரச்னை?” “”வந்து சொல்றேன்,” போன் கட்டாகி விட்டது. “என்ன பிரச்னையாயிருக்கும்! கும்பகோணம் தீவிபத்து மாதிரி, அய்யோ…’ அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. மீண்டும் போன்; கணவரின் நம்பர் ஒளிர்ந்தது. “”ஹலோ… என்னங்க.” “”தாமரை… நான் ஸ்கூலுக்கு போய் குழந்தைகளை அழைச்சிட்டு


காதல் என்பது காவியமானால்…

 

 “அன்புள்ள நந்தினி அம்மாவுக்கு…’ என துவங்கிய, அந்த கடிதத்தை, இரண்டாவது முறையாக படிக்க ஆரம்பித்தாள் நந்தினி; கண்கள் கலங்கின. சுயபச்சாதாபத்தில் மனசு சுருங்கியது. தன்மேலேயே எரிச்சலும், கோபமும், “சுறுசுறு’ என்று எழுந்தது. “ச்சே… எத்தனை மோசமான ஜென்மம் நான். அவர் அத்தனை சொல்லியும் கூட, அதைக் காதிலேயே வாங்கல்லையே… அம்மா, அண்ணன் எல்லாரும் தான், தலைப்பாடா அடிச்சுக்கிட்டாங்க… “அவசரப்படாதே… வேண்டாம்’ன்னு, நான் எங்க கேட்டேன்? “ஆத்திரம் கண்ணை மறைச்சுது… எனக்கு கர்வம். “நான், கறந்த பால் மாதிரி


சில நேரங்களில் சில தீர்ப்புகள்!

 

 “”ஏங்க… நம்ம புள்ளை என்ன வீண் செலவு செய்யவா பணம் கேட்கறான்; வீடு வாங்கத் தானே… கையிலே வெண்ணையை வச்சுகிட்டு, வீணா அலைவானேன்? பாங்க்ல கிடக்கிற பணத்தை எடுத்து வந்து, சிவசு கிட்டே குடுங்க. அவன் அலையறதை காண சகிக்கலைங்க,” என்ற சரயுவை முறைத்தார் பாலசுப்ரமணியம். “”என்னடி பேசுற… அதத்தூக்கி குடுத்துட்டு, நாம தெருவுலே நிக்கணுமா?” “”நாம ஏங்க தெருவுக்கு போறோம்… நாம பெத்த புள்ளங்க; நம்மள காப்பாத்துவான். புள்ளை, படாத பாடு படறான்… நாயா பேயா


புதிதாய் பிறந்தநாள்!

 

 உள்ளுக்கும், வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்த மகேஸ்வரியை நிறுத்தியது அம்மாவின் குரல்… “”என்ன மகி… உள்ள வந்து உட்காரு. மாப்பிள்ளை, குழந்தையோட உன் மாமியார் வீட்டுக்குத் தானே போயிருக்கார். முன்னே, பின்னே தான் ஆகும். ஏன் இப்படி நிலை கொள்ளாம தவிக்கிறே?” “”போம்மா… உனக்கொண்ணும் தெரியாது. சாயந்திரம் கிளம்பினார்; நாலு மணி நேரமாச்சு. நான், உன் பேரனை விட்டு பிரிஞ்சதே இல்லைம்மா. இந்த வீட்டுக்கு தனியா வந்ததுலேருந்து, இதே வேலையாப் போச்சு. ஞாயித்துக்கிழமை ஆனா போதும், சனிக்கிழமை ராத்திரியில


மனசே… மனசே… கதவைத்திற!

 

 அனு, ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்… இந்த வேதனையை சுமக்க மனதிலும், உடலிலும் தெம்பில்லை எனத் தோன்றியது. உண்மையை, நந்துவிடம் சொல்லி விட்டால், நிம்மதியாகவாவது இருக்கலாம் என்ற எண்ணம், அவளை தூண்டியது. மொபைல் போனில், குறுஞ்செய்தியில் வந்த முகவரியை, மீண்டும் சரி பார்த்து, ஆட்டோவை விட்டு இறங்கினாள். எதிரே, நிறைய மரங்கள் சூழ, அந்தக் கட்டடம் உள்ளடங்கி நின்றது… “சிலு சிலு’வென லேசான காற்று, வேப்பம்பூ மணத்தை ஏந்தி வந்து, நாசியில் மோதியது. பக்க வாட்டிலிருந்து, “அனு…


புதிய விடியல்!

 

 அறைக்குள் தடுமாறிக் கொண்டே நுழைந்த பிரசன்னா, கட்டிலை நெருங்குகையில் நிதானித்தான்… “யார்… யார் இது?’ பால்கனியில் எரிந்த ஜீரோ வாட் பல்பின் ஒளிக்கீற்று, மூடிய கண்ணாடிக் கதவு வழியே லேசாக கசிந்து கொண்டிருந்தது அறை முழுவதும். கண்களை இடுக்கி பார்த்தான்… யாரோ படுத்திருப்பது, கோட்டோவியம் போல புலப்பட்டது. யோசனையுடனேயே, லுங்கிக்கு மாறியவன், “அட ஜென்னி… 8 மணி போல வந்தவள், சாப்பிட்டுக் கூட இருக்க மாட்டாளே…’ என நினைத்தான். “”ஹேய்… நீ ஆபிஸ் கெஸ்ட் அவுசுக்கு வந்திட்டேன்னு


தவமாய் தவமிருந்து..

 

 “”இங்கே பாருங்க மாமா… உங்க புள்ளை மாதிரி எல்லாம், என்னாலே வழவழா, கொழகொழன்னு பேச முடியாது. விழாவிலே தர்ற, ஐந்து லட்ச ரூபாயும் அப்படியே முழுசா வீடு வந்து சேரணும். “அங்கே தானம் பண்ணிட்டேன்; இங்கே இனாம் குடுத்திட்டேன்…’ன்னு இங்க வந்து நிக்க வேணாம்; வேற இடம் பார்த்துக்கிடலாம்!” மூத்த மருமகள் பவானி, நிர்தாட்சண்யமாய் முடிவைச் சொல்லி விட்டாள். “”அண்ணி… அதுல எனக்கு ஒரு வைரத்தோடு வாங்கித் தந்திடுங்க… அது, எங்கப்பா எழுதி, சம்பாதிச்சது; எனக்கும் அதுல


அழகழகாய் வீடு கட்டி…

 

 தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் கோபாலன். மனசுக்குள், “எங்களுக்கு வேணாம்… எங்களுக்கு இங்க சரிப்படாது… வசதி போறாது. வேற வீடு வாங்கறதா முடிவு பண்ணிட்டோம். இந்த வீட்டை வித்துட்டு, எங்களுக்கு சேர வேண்டியதை கொடுங்க. எங்க வழிய நாங்க பார்த்துப்போம்!’ என்று, ஜெயந்தியும், ஸ்ரீதரும் பேசியவையே மீண்டும், மீண்டும், “ரீவைண்டு’ ஆகின. “வீட்டை வித்துட்டா நாங்கள் எங்க இருக்கறது ஜெயந்தி?’ கேட்டாள் அலுமேலு. “இதென்ன கேள்வி அத்தை? எங்களோட ஆறு மாசமும், செந்திலோட ஆறு மாசமும் இருங்களேன்!’