கதையாசிரியர் தொகுப்பு: ஜம்புநாத்

1 கதை கிடைத்துள்ளன.

குவா… குவா!

 

 பூந்தமல்லி வரதர் கோயில் தாயார் சந்நிதி பின்னால், ‘பிள்ளையார் பந்து’ ஆட்டத்தின் சுண்டல் இடைவேளையின்போது தான் ரங்கன் அந்த எக்குத்தப்பான கேள்வியைக் கேட்டான்… ‘‘டேய் சீனு, கொழந்தைங்க எப்பிடிடா பொறக்குது?’’ எல்லாம் தெரிந்தவன்போல், சீனு சட்டென்று பதில் சொன்னான்… ‘‘இது தெரியாதா? ஆகாசத்திலேர்ந்து தொப்புனு விழும்டா!’’ ‘‘ஆ…ஆ… கதை… கதை உட்றே! ஆகாசத்திலேர்ந்து மழைதாண்டா விழும்!’’ வாசலில், பெருமாள் புறப்பாட்டை அறிவிக்க அதிர்வேட்டு போடத் தொடங்கிவிட்டார்கள். ‘சர்ர்ர்ர்ர்ர்ர்… ட-மா-ல்!’ ‘‘ரங்கா, சரியாத் தெரியலேடா! ஆனா ஒண்ணு… எல்லாக்