கதையாசிரியர் தொகுப்பு: ச.நேசம்

1 கதை கிடைத்துள்ளன.

சொந்த பூமி

 

 “”ஏப்புள்ள நேசம்…நேசம்…எங்க நிக்க, சீக்கிரம் வாயேன்” எனப் பொண்டாட்டியை அவசர அவசரமாக கூப்பிட்டுக் கொண்டிருந்தார் முத்து. “”எதுக்கியா இப்படி கத்துதிய, தெருவே வீட்டுல என்னமோ நடக்குதுன்னு கூடிறாம, நானு மாட்டுச் சாவடியில நிக்கது ஒங்க கண்ணுக்கு தெரியலியாங்கும்” என மாட்டுச் சாணியை பனைமட்டையால் ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு வீட்டின் முற்றத்தில் நின்றுகொண்டிருந்த முத்துவின் பக்கத்திற்கு வந்தாள் நேசம். முத்துவின் முகத்தில் தெரிஞ்ச அவசரத்தையும் நேசம் கவனிக்காமல் இல்லை. என்ன வெசயம் என்பதுபோல நேசம் முத்துவின் முகத்தைப்