கதையாசிரியர் தொகுப்பு: சு.இரமேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

நகரத்து நாய்கள்

 

 புறப்படும்பொழுது எதுவும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பேருந்தில் ஏறியவுடன் இதுபோன்ற உணர்வுகளுடன் பயணம் செய்வதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. கீழே இறங்கிவிடலாமா என்ற எண்ணம் எப்பொழுதும் போல சற்றுத் தாமதமாகவேத் தோன்றியது. எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டவை சில இருக்கத்தான் செய்கின்றன. முழுமையான பயணம் எனக்கு எப்பொழுது கடைசியாக வாய்த்ததென்று மனம் ஆராய முற்பட்டது. மெதுவாகச் சுழிய ஆரம்பித்த நீர், வழிந்து மனதில் சொட்ட ஆரம்பித்தது. வெண்மை படர்ந்து, மனம் கரித்தது. பயணத்தின் இறுக்கம் இதனை ஸ்தூலமாகக் காட்டியது. என்னுடைய இயல்பு