கதையாசிரியர் தொகுப்பு: சீ.முத்துசாமி

3 கதைகள் கிடைத்துள்ளன.

குரல்

 

 கனகுசுந்தரம் என்கிற கனகு நோயுற்றிருந்தான். தூக்கலான புற அடையாளங்கள் ஏதும் புலப்படாத ஒருவித நுட்பமான நோய் அது. எனவே கனகு நோயுற்றிருந்த விஷயம் அவனைச் சுற்றியிருந்த உறவுகளுக்கோ நண்பர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை. இது நோய் என்கிற வரையறைக்குள் வைத்து எண்ணப்பட ஏதுவான உடல் ரீதியான குறைபாடுகள் இல்லாத காரணத்தால்- கனகுவிற்கு தான் நோயுற்று இருக்கும் உண்மை தெரியாமலேயே காலம் கடந்து போனது. கால ஓட்டத்தில் அது அவனது இயல்பின் ஒரு பகுதியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த காரணத்தாலும், அதனை


காத்திருப்பின் கரையும் கணங்களும் சில பதிவுகளும்

 

 இருள் கவியும் மாலை நேரம். முக்கிய வேலையொன்று பாக்கியிருந்தது. இருளின் அடர் போர்வை மறைப்புக்காகக் காத்திருந்த வேளை. உயிரின் வேர்களை அசைத்துப் பார்க்கும் இம்சை மிகுந்த காத்திருப்பின் வலி மிகுந்த கணங்களின் நகர்வு. அதன் அசுரப் பிடியிலிருந்து விலகி தப்பித்து ஓடும் பிரயத்தனமாக மனதையும் கண்ணையும் வேறு திசைக்கு திருப்ப எதிர்வீட்டு இரும்பு கேட்டை ஒட்டி வலதுபுறம் நிற்கும் மாமரம். அடர் பச்சையில், மாலை நேர மந்த மஞ்சல் வெயிலின் தொடலைத் துறந்து இருண்டு கிடந்தது அதன்


வெளி!

 

 வாசலில் வந்து நின்றவன் எதிரில் பரந்து விரிந்து விச்ராந்தியாய்க் கிடந்த வெளியை வெறித்தான். கொஞ்ச காலமாகவே இந்த உலகம் தனக்குள் உருமாறி புத்துரு கொண்டு மிரட்டுவதை அவன் மருண்டு பார்த்து குழம்பிக் கிடக்கிறான். வேட்டை நாயாக காதைச் சிலுப்பி தன்னை இரவு பகலாக துரத்தி வரும் அந்த மாயப் பிசாசைக் கண்டு பதுங்க இடம் தேடுகிறான். எங்கும் காரிருள். தீக்குச்சி ஒன்று கிடைத்தால் போதும். இருளுள் அலையும் விரல்களில் இருள் மட்டுமே. அதன் தொடக்கப் புள்ளி எது?