கதையாசிரியர் தொகுப்பு: சி.சு.செல்லப்பா

17 கதைகள் கிடைத்துள்ளன.

தீர்மானம்

 

 சந்தானம் கையை விரித்துப் பிடித்திருந்த புஸ்த கத்தின் வரிகள் ஒரு குறிப்பு இல்லாத பார்வையில் மிதந்து சென்று கொண் டிருந்தன. எங்கெல்லாமோ சிதறிக்கிடந்த சிந்தனைகள் அத்தனையும் ஒருமிக்கச் சேர்ந்து வந்து அமிழ்த்தினதுபோல ஒரே ஜடமாக உட்கார்ந்திருந்தான். எதிரே மேஜைக்கு மேலாகச் சுவரில் உயரே பதித்திருக்கும் கடியாரம் தன் முறை வேலைப்படி மூன்றுதரம் அடித்துவிட்டு, அவனை உஷார்ப் படுத்தியதுங்கூட அவன் காதுகளில் விழவில்லை; இல்லை விழுந்தும் அவன் பொருட் படுத்தின தாகத் தெரிய வில்லை. இன்னும் ஒரு மணி


மூடி இருந்தது

 

 நாளை! நாளை எனக்கு விடுதலை. நான் எதிர் பார்க்கா மல் அது என் அருகில் வந்து விடவில்லை. வாஸ் தவமாக! மாதங்கள், வாரங்கள், நாட்கள், மணிகள், நிமிஷங்கள், ஏன் வினாடிகளும்கூட -அவைகள் ஒவ்வொன் றின் கால அளவையும், கணக்குப் போட்டுப் போட்டுப் பார்த்து விட்ட பிறகு தான் என்னை நெருங்கி வந்தன. எப்படி அந்தக் கடைசி மின் வெட்டு நேரம், சாசுவதமான விடு தலையைத் தரும் கணப் பொழுது, சாவு என்பது உயிர் வாழ்க்கை முழுதும் கண்


வாழ்க்கை

 

 “போயும் போயும் நிலம் வந்து வாங்கினோமே, பாழாய்ப்போன ஊரிலே! குடி தண்ணிக்கு வழி இல்லை. எடுத்துக்கிட்டு வாடா அரிவாளை, பெட்டியிலே இருந்து” என்ற வார்த்தைகளுக்கு முன்பு நடந்த விஷயங்கள் வருமாறு: பட்டுப் பட்டுப் பழகிப்போன மிராசுதார் மாமா வுக்கே தாங்க முடியாத வெப்பம். அறுப்புக் களம். பட்டுப் படைக்கிற வெயில். நிழலின் சாயை பர்லாங்கு தூரத்துக்கு விழாத ஒரு பொட்டலிலே – சுடுகாட்டிலே என்று கூடச் சொல்லலாம் – அறுகங்கட்டை வெளியிலே களம் கூட்டி இருந்தாள் பள்ளி.


ஒரு சந்தர்ப்பத்தில்

 

 சாய்வு நாற்காலியில் முதுகு படியாமல் உட்கார்ந்து ஷண்முகம் நேர் எதிர் ஜன்னலுக்கு வெளியே விறைத்துப் பார்த்துக்கொண் டிருந்தான். அதன் முதுகுப் பிடியில் ஒரு கை வைத்து மற்றொரு கையால் புடைவைத் தலைப்பை வாய் நுனியில் பொத்தினபடி சௌந்தரம் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். இருவரும் வாய் கொடுத்துப் பதில் வாங்கி வெகு நேரம் ஆகிவிட்டது. அந்தப் பொழுது எப்படிக் கழிந்து கொண்டிருந்தது என்பது அவர்களுக்கே நினைவில்லை. சௌந்தரம் மட்டும் நடுநடுவே கண்ணீரை அடக்கி மீண்டும் ஏதோ பேச விரும்பினவளைப்போல வாயை


முறைமைப் பெண்

 

 அழகுவின் கல்யாணம் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அன்றைக் கல்யாண காரியம் முடிந்து, அழகுவும் அங்கம்மாளும் படுக்கப் போகும் சமயம், அவர்கள் வீட்டுக் கதவு தடதடவென்று இடிக்கப்பட்டது. இந்நேரத்திற்குப் பிறகு யார் வந்து கதவைத் தட்டுவார்கள் என்று சந்தேகித்து , “யாரது?” என்று கேட்டுக்கொண்டே அங்கம்மாள் கதவைத் திறக்கப்போனாள். “நான் தான் அங்கி, கதவைத்திற” என்று வெளியிலிருந்து ஒரு முரட்டுக்குரல் பதில் அளித்தது. அந்தக் குரலைக் கேட்டதும், தாயும் மகளும் ஏக காலத்தில் திடுக்கிட்டு


முதல் கடிதம்

 

 “கோமு! உனக்கு அத்திம்பேர் கடுதாசி போட் டிருக்கார்; இதோ பார்” என்று பல் அத்தனையும் காட்டிக் கொண்டு ஒரு கவரை அவள் கையில் திணித்தான் கிட்டு. கோமதிக்குக் கல்யாணம் நடந்தது போன மாதம், வயது இப்பொழுது தான் பதினொன்று நிரம்பிப் பன்னிரண்டு நடப்பு. இருந்தாலென்ன? குழந்தை தானே? இந்த வயதிற்குள் அப்படி என்ன உலக அனு பவத்தைக் கண்டுவிட்டாள்? பாண்டி, சோழி , கட்டம் முதலியன ஆடுவதில் தான் அவளுக்கு அனுபவம் அதிகம். தூங்கும் பொழுது இந்த


வீரமும் வகையும்

 

 ஒரு நாள் தங்கிய இடத்தில் மறுநாள் தங்காமல் உத்தர பாரதம் முழுவதையும் சுற்றி மறைந்து திரிந்து கொண்டிருந்தான் ஒரு வாலிபன். தன் உண்மைப் பெயரை வெளியிடவே அவனுக்குப் பயமாக இருந்தது.. கொளுத்துகிற உச்சி வெயில் . புழுதியில் கால் பட்டால் துள்ளி விழச் செய்தது. சாலை நாவல் மரத்து மந்திகள் கிளையோடு கிளையாக ஒட்டிக்கிடந்தன. வெயிற் பறவைகளான காகங்கள் கூட வெப்பம் தாங்காமல் ஜலக் கரையோர ஈர நப்பில் கால் வைத்துச் சூடாற்றிக்கொண் டிருந்தன. மேய்ச்சல் மாடுகள்


நொண்டிக் குழந்தை

 

 1 மாலை வெயில் மங்கிக்கொண் டிருந்தது. பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பிய குழந்தைகள், புஸ்தகங்களை வீசி எறிந்துவிட்டுத் தெருவில் ஒரு வீட்டுவாசல் முன் கூடி, எல்லை கடந்த உற்சாகத்துடன் தங்களுக்கு வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டில் ஈடுபட்டன. திடீரென அவர்களிடையே தகராறுகளும் அபிப்பிராய பேதங்களும் முளைத்து எழுந்து மறைவது மிகவும் வேடிக்கையாக இருந்தது. திண்ணையில் உட்கார்ந்து ஞானம் மற்றக் குழந்தை களின் உற்சாக ஓட்டங்களில் லயித்துப்போய் ஸ்வா ரஸ்யமாகப் பார்த்துக் கொண் டிருந்தான். அடுத்த திண்ணையில் தான் மீனா உட்கார்ந்து


மார்கழி மலர்

 

 சூரியன் இன்னும் முழுதும் உதிக்கவில்லை. மார்கழிப் பனியின் மூட்டம் இன்னும் அடர்ந்து பரவிக் கிடந்தது. தெரு முழுவதும் பனிபெய்து தரை. ஈரம் அடைந்து ஜலம் தெளித்தது போல் இருந்தது. கிராமாந்தரக் குழந்தைகளுக்கு உள்ள இயல்பில் சச்சி வெகு சீக்கிரம் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டாள். தூக்கக் கண்களைத் துடைத்துக் கொண்டு பனிக்குப் பாதுகாப்பாகப் பாவாடை முனையைத் தோள் மீது போர்த்திக்கொண்டு வாசற் பக்கத்துக்கு வழக்கம் போல் வந்தாள். இரட்டை வரிசையாக அமைந்த சிறு தெருவின் இரண்டு கோடிகளையும் அவள் ஒரு


பாத்தியதை

 

 1 “அண்ணா , இன்னும் எத்தனை மையில் தூரம் இருக்கிறது பட்டணம்?” “கையில் ‘கெய்டை’ வைத்துக்கொண்டு என்னையா கேட்கிறாய்?” “இல்லை, அண்ணா! நீ கொடுத்த பக்கம் தவறி விட்டது. புரட்டினால் புதிசு புதிசா எதெல்லாமோ வருகிறது. எடுத்துக் கொடேன்” என்று கெஞ்சுதலாக என் பக்கம் ‘கெய்டை’ நீட்டினாள் ஜானகி. பக்கத்தையும் எடுத்துக் கொடுத்து, சிறு குழந்தைகளுக்கு மணி பார்க்கக் கற்றுக்கொடுப்பது போல், ‘கெய்ட்’ பார்க்கச் சொல்லிக் கொடுத்தேன். ஜானகியை முதல் முதலாகப் புருஷன் வீட்டுக்கு அழைத்துச் சென்று