கதையாசிரியர் தொகுப்பு: சியாமினி இராசரத்தினம்

1 கதை கிடைத்துள்ளன.

பாவமா? பாடமா?

 

 அந்த அதிபர் அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் திடுக்கிட்டு விட்டேன். “இருங்கோ, நீங்க தானே மதுமிதாவுடைய அப்பா?” அந்தக் குரல் எனக்குப் பரிச்சயமானது. பத்து வருடங்களிற்கு முன்பு என் காதுக்குள் சிணுங்கலாய், செல்லமாய்த், தேனாய் இனித்துக்கொண்டு என் உள்ளத்தை நனைத்த அந்தக் குரலை, அந்தக் கண்களை, அந்தப் பார்வையை, சட்டென்று நான் அடையாளம் கண்டுகொண்டேன். என் லாவண்யா. பிரபல பாடசாலையொன்றில் எனது மகள் மதுமிதாவினுடைய தரம் 06 க்கான அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தேன். அது தொடர்பாக அதிபருடன் கதைப்பதற்குச் சென்றிருந்தேன். ஆனால்