கதையாசிரியர் தொகுப்பு: சாம் குருபாதம்

6 கதைகள் கிடைத்துள்ளன.

வாலிபர்கள் ஜாக்கிரதை

 

 அன்று ஒரு புதுப்படம் ரிலீசானது. ஆட்டு மந்தை போல் ஆண்கள் கூட்டம் அலைமோதியது. அமைதிச்சீட்டு விலை ஆறு மடங்கு அதிகமாய் விற்றது. அப்படியிருந்தும் மக்கள் வெள்ளத்தால் அரங்கம் நிறைந்து வழிந்தது. ஆர்வத்தோடு ஓடிவந்த வாலிபன் காட்சன், அரங்கத்தின் வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் “ஹஷஸ்புள்” (HOUSE FULL) என்ற போர்டைப் பார்த்ததும் ஏமாந்து சோர்ந்து போனான். அந்தக் கூட்டத்தில் ஒரு ஓரத்தில் ஒரு கண்ணியமான வாலிபப் பெண், படித்தப் பெண், பணக்கார வீட்டுப்பெண், பளிச் பளிச் என்று மின்னும்


முறை மாப்பிள்ளை

 

 அண்ணி, என் மகள் கிரேனாப்புக்கு என்ன குறைச்சல்? பி.ஏ. பட்டதாரி. ஒத்தைக்கு ஒரு மகள். அவள் சின்ன வயதில் நீங்க உங்கள் அண்ணன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கிளி மாதிரி இருக்கிற எங்கள் அண்ணன் மகள் கிரேனாப்பு தான் என் மகன் யோசேப்புக்கு என்று ஆயிரம் தடவை சொன்னீங்க. இப்போது உங்க மகன் இஞ்சினியர் ஆனதும் மனம் மாறிவிட்டீர்களே. அண்ணன் மகள் வேண்டாம் என்று சொல்வது அண்ணன் வீட்டில் அணுகுண்டு போட்டது போலிருக்கிறது. கிரேனாப்பு என்ற கிளி,


திடீர் கல்யாணம்

 

 “என்னடா, பாபு. இப்பதாண்டா உனக்கு 23. அதற்குள் கலியாணக் கார்டு கொண்டு வந்து விட்டாயே” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் நண்பன் நவீன். “சே! சே! இது எங்க அண்ண ன் கலியாணக் கார்டுடா. என் கலியாணக் கார்டு இப்படியாடா இருக்கும். என் கலியாணக் கார்டு பார்த்தாலே, இது கோடீஸ்வர மாப்பிள்ளை என்று சொல்லுமளவுக்கு பட்டு ரிபன் கட்டி, பந்தாவாக அனுப்புவேன்.” “இது மாதிரி பட்டிக்காட்டு கல்யாண மண்டபத்தில் வைத்து நடப்பதெல்லாம் ஒரு கல்யாணமாடா? புளியங்கொம்பு மாதிரி ஒரு


திடீர் மாப்பிள்ளை

 

 “ஏங்க, நாம் பார்த்த மாப்பிள்ளைகளிலேயே, இதுதான் வாட்ட சாட்டமாகவும், முகம் லட்சணமாகவும், நடையும் உடையும் பார்த்தால், நம் சொந்தக்காரர்களே கண் போட்டுவிடும் அளவுக்கு சூப்பர் மாப்பிள்ளை .” “தொழில் அதிபர் என்ற உங்கள் அந்தஸ்துக்கும், ஆஸ்திக்கும் குடும்ப கௌரவத்துக்கும் ஏற்ற மாப்பிள்ளை இதுதான். நம்ம பொண்ணு ஆனந்தி மீனாவுக்கு அச்சில் வார்த்ததுபோல் சூப்பர் ஜோடி பொருத்தம்.” “பி.ஏ. படித்த நம்ம பொண்ணுக்கு பி.எ.. மாப்பிள்ளை எதிர்பார்த்த நமக்கு, எம்.ஈ. மாப்பிள்ளை கிடைத்தது நம்ம பொண்ணு யோகம்தான். சும்மா


மாப்பிள்ளை பெஞ்ச்

 

 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. பனங்காட்டுப்புரம் என்கிற ஒரு குக்கிராமம். மதிய ஆராதனைக்கு 12 மணி க் கு , முதல் மணி அடித்தது. தெருத்திண்ணையிலிருந்த ஒரு பாட்டி, “அன்னா, கோயிலுக்கு மணி அடிச்சிட்டாகளே, சீக்கிரம் குளிச்சிச் சாப்பிட்டுப் புறப்படுங்க” என்று விரட்டும் சத்தம் வீதியில் கேட்டது. பன்னிரண்டரை மணிக்கு இரண்டாம் மணி அடித்தது. உடனே ஆலய ஒலிப்பெருக்கியின் சத்தம் ஊர் முழுவதும் கேட்டது. “சபை மக்களுக்கு ஓர் அன்பான அறிவிப்பு. இன்று நமது ஆலயத்திற்கு வெளிநாட்டுப் பிரசங்கியார்


பைபிள் ஒரு பணப்பயிர்

 

 வீட்டு சேவல் கூவியது. விடிவெள்ளி மறைந்தது. அடிவானம் சிவந்தது. ஆதவன் உதித்தது. இருள் அகன்றது. இடியாப்பசத்தம் கேட்டது. அதிகாலை எழுந்து ஆறரை மணிக்கு வழக்கம் போல் வீடு சந்திக்கப் புறப்பட்டார் சபை போதகர் பொவனெர்கேஸ் கோபால். வாசல் பெருக்கி, முற்றம் தெளித்து,வரவேற்ற வீடு ஒன்றைக் கண்டு, காலிங் பெல் போட்டார் போதகர். ஓடி வந்து, கதவைத் திறந்து கனம் பண்ண முந்திக் கொண்டாள் வாலிபப்பெண் ஜமீல்ராணி. அண்ணன் ஆகாய் லவ்சன் இஞ்சினியரிங் கடைசி செமஸ்டர் தேர்வுக்காய் படித்துக்