கதையாசிரியர் தொகுப்பு: க.ராஜம்ரஞ்சனி

5 கதைகள் கிடைத்துள்ளன.

ஆனந்தம்

 

 மூலம் : ஆண்டன் செகாவ் | தமிழில்: க. ராஜம் ரஞ்சனி அப்பொழுது நள்ளிரவு மணி பன்னிரெண்டு. மித்யா குல்டாராவ் உற்சாகமான முகத்துடனும் கலைந்த கேசத்துடனும் தன் பெற்றோரின் அடுக்குமாடி வீட்டில் நுழைந்து எல்லா அறைகளுக்கும் துரிதமாய் ஓடினான். அவனது பெற்றோர் படுக்கைக்குச் சென்றுவிட்டனர். அவனது சகோதரி படுக்கையில் நாவலின் கடைசி பக்கத்தை முடித்துக் கொண்டிருந்தாள். பள்ளியில் பயிலும் அவனது சகோதர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். “நீ எங்கிருந்து வர்ற?” அவனது பெற்றோர் திகைத்தனர். “என்ன விசயம்?” “ ஓ..


மௌனத்தின் உள்ளிருக்கும் மௌனங்கள்

 

 ‘அவங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. ஞாபகத்துக்கு வர மாட்டுது…’ மெதுவாய் முணுமுணுத்துக் கொண்டேன். ‘யாரு?’ முணுமுணுப்பு காதில் விழ என் பார்வை நிலைக்குத்தியிருந்த மளிகை கடையை நோக்கியவள், ‘லைட் யெல்லொ சாரி கட்டிருக்காங்களே அவங்களா?’ என்ற கேள்வியோடு என்னை நோக்கினாள். ‘ம்ம்… ஆமா… எனக்கு படிச்சு கொடுத்த டீச்சர் மாதிரி தெரியுது’ ‘ஓ.. உனக்கு அவங்கள தெரியுமா? ரொம்ப பேரு அவங்கள டீச்சருனுதான் சொல்லிருக்காங்க’ ‘எங்க எதிர்த்த வீடு தள்ளி இரண்டாவது வீட்லதான் இருக்காங்க. இவங்க


துளசிப்பாட்டி

 

 திடீரென விழிப்புநிலைக்குத் தள்ளப்பட கட்டிலில் புரண்டவாறே அறையைச் சுற்றிலும் பார்த்தேன். சுவரின் மீது சாய்ந்திருந்த கடிகாரம், அறையின் வலது புற ஓரமாயிருந்த சன்னல், அதன் எதிர்ப்புறமாயிருந்த இருந்த மேசை, துணிகளைத் தன்னுள்ளே புதைத்துக் கொண்டு விழாமல் நிற்கும் அலமாரி, காற்றைத் திசை திருப்பியவாறு அயராமல் சுழன்று கொண்டிருந்த மின்விசிறி. மெல்ல வல புறமாய் திரும்பிப் படுத்தேன். மேசையின் மீதிருந்த புத்தகங்கள் அடுக்கப்படாமல் இருப்பது தெரிந்தது. ஒரு வாரத்திற்கும் மேல் மேசை பயன்படுத்தபடாமல் இருப்பது மேசையின் மீது படிந்திருந்த


அதிர்ஷ்டம்

 

 ‘நேத்து உனக்கு எத்தன தடவ போன் பண்ணினேன். கெடைக்கவே இல்ல’ கடைக்குள் நுழையும்பொழுதே சொல்லிக்கொண்டு வந்தவர் சாமியின் எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்தார். ‘என் போன் பழுதா இருக்கு. அதான் செய்ய கடையில குடுத்துருக்கேன். ஏன்? என்ன விஷயம் ராஜா?’ சூடான மைலோவுக்கு ஆர்டர் தந்துவிட்டு சாமியிடம் திரும்பினார். ‘நம்ம மூணு முருகேசன் ரொம்ப சீரியஸா ஆஸ்பிட்டலுல இருக்காரு. அத சொல்றதுக்குதான்..’ ராஜாவின் முகத்தில் கவலை இளையோடியதைக் கவனிக்கமுடிந்தது. ‘ஆமாவா? முந்தா நாளுதான நம்மகூட ஒக்கார்ந்து சாப்பிட்டாரு.


புறங்களின் அகங்கள்

 

 ரத்னா கீதா ரொம்ப நல்ல பொண்ணு. இவ என்னோட ஃப்ரண்டா கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். எனக்கு அடிக்கடி ஹெல்ப் பண்றா. டென்ஷனா இருந்தாகூட பக்கத்துல வந்து மனசுக்கு சந்தோசமா பேசிட்டு போறா. வேலையிடத்துல போட்டி, பொறாமைனு மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டுருக்கேன். ஆனா கடவுள் எனக்கு வேலை இடத்துல நல்ல கூட்டாளிய குடுத்ததுக்கு நன்றி சொல்லனும். போன வாரம் கூட உடம்பு சரியில்லாம வீட்டுல இருந்தப்ப ஒவ்வொரு நாளும் போன் பண்ணி விசாரிச்சாளே, ரொம்ப பாசமானவ. எனக்கு சம்பளம்