கதையாசிரியர் தொகுப்பு: க.சிவகுமார்

4 கதைகள் கிடைத்துள்ளன.

புழுக்கம்..!

 

 ஒரே புழுக்கமா இருக்கே … குளிக்கலாமா என்று நினைத்துக்கொண்டே துண்டை கையிலெடுத்தேன், அப்போது இண்டர்காம் சிணுங்கியது. யாரு இந்நேரத்துல என்று நினைத்தபடியே ரிசீவரை எடுத்தேன்.’ஹலோ… நான் முடிக்கும் முன் ‘சார், நா செல்வா ஹோட்டல் ரெசெப்க்ஷனிஸ்ட் பேசறேன்’. ‘எஸ்’…என்றேன் ‘சார் யாரோ கலைவாணியாம், லைன்ல இருக்காங்க, ஒங்க கூட பேசணுமாம், லைன் குடுக்கட்டுமா…? ‘ம்ம்ம்…’ ‘சார் நா கலை பேசறேன்.. சாரி டு டிஸ்டர்ப் யு. ஒங்ககிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும். ப்ரியா இருக்கீங்களா? எப்ப வரலாம்


இதோ லட்சுமி…!

 

 “இங்க போட்டுக்கலாமா … இல்லன்னா இங்க போடலாமா ? அம்மா கேட்டுக்கொண்டே இருந்தாள் . காலையிலிருந்து அப்பா அம்மா , தங்கை தாரிணி , நான் என்று நான்கு பேருமாய் தோட்டத்தின் ஒவ்வொரு இடமாய் அங்குலம் அங்குலமாய் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தோம் , கூடவே மணி நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு வாலை ஆட்டிக்கொண்டு வந்தது . எந்த இடம் சரியாக இருக்கும் என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தோம் . ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் பிடித்திருந்தது அதற்கு


அவன் அப்படித்தான்…

 

 அது ஒரு காலைப்பொழுது ! பெயர் தெரியாத பறவைகள் எல்லாம் பெயர் வைக்கப்படாத ராகங்களை பாடி மகிழ்ந்து திரிந்தன. இரண்டு புறமும் பச்சைப்பசேல் நிலங்களாய் கடந்ததைப் பார்த்தபோது அந்த கிராமத்தில் இன்னமும் நீர் மிச்சமிருப்பதையும் நீர் திருடும் கம்பெனிகளின் கழுகு கண்களில் அந்த கிராமம் இன்னமும் படவில்லை என்பதும் புரிந்தது. குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும், சில கான்க்ரீட் மாடிவீடுகளுமாக மிஞ்சிப்போனால் இருநூறு அல்லது முன்னூறு வீடுகள் அந்த கிராமத்தில் இருக்கலாம். தூரத்தில் ஒரு சர்ச், சர்ச்லிருந்து


இரண்டு பிரம்மச்சாரிகள்

 

 மேடும் பள்ளமும் வளைவும் நெளிவுமாக இருந்த அந்த கிராமத்தின் தார் சாலையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்ற களிப்பில் அவனின் கார் துள்ளி துள்ளி ஓடிக்கொண்டிருந்தது . வலது புறமாக ஒருக்களித்து உட்கார்ந்து , தன்னை கடக்கும் மரங்களையும் ,மனிதர்களையும் , கால் நடைகளையும், பாதி வறண்டுபோன அல்லது பாதி ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளையும் , ஒரு குழந்தையைப் போல பார்த்து பரவசமடைந்து மகிழ்ந்தான் . அகலம் குறைந்த அந்த சாலையில் ஒரு காரும் ஒரு இரண்டு சக்கர