கதையாசிரியர் தொகுப்பு: க்ருஷாங்கினி

2 கதைகள் கிடைத்துள்ளன.

இடப்பெயர்ச்சி

 

 பாட்டியின் ஓயாத அறிவுரைகளும் எனது சந்தேகங்களுக்குமாக பந்துபோல எழும்பி எழும்பி திரும்ப வருகிறது இருவரிடமும். ‘எச்சப்பண்ணாதேடீ! வாழபழத்த கடிச்சுத்தான் திங்கணுமா? உரிச்சுப் பிச்சுப் போட்டுக்கோ’ ‘அப்போ முறுக்க கடிக்கலாமா பாட்டி’ ‘அதயும் விண்டுதான் வாயிலே போட்டுக்கணும்’ என்ன பாட்டி, எப்பப்பாத்தாலும் என்ன எச்சப்பண்ணாதேடீ, எச்சப் பண்ணாதேடீன்னுண்டே இருக்க’ ‘எச்ச எறக்க அடிக்கும், பத்து பறக்க அடிக்கும்டீ பொண்ணே’ ‘எந்த வயசு வரைக்கும் பாட்டீ?’ ஆயுசு முழுக்கவுந்தான்’ அண்ணா கடிச்சுத் திங்கறானே பாட்டீ’ ‘அதான் நீ அதைத் தொடச்சிடறேயேடீ


தலை அலங்காரம்

 

 தலை அலங்காரம்-1 எங்கள் வீடு விஸ்தாரமானதுதான். தெருவில் ஆரம்பித்து, தெருவில் முடியும். இருபுற வாசலிலும் போக்கு வரத்து இருக்கும். மொண்ணைப் பாம்பென இருதலை கொண்ட வீடு. அம்மாதான் எப்போதும் தலை வாரி விடுவாள். அம்மா வீடு விட்டு ராத்தங்கியதாக–எங்களை விட்டு–நினைவே இல்லை. அத்தனை பெரிய வீட்டிலும், அம்மா தலை வாருவது என்னவோ வாசல் படிக்கு சற்று மேலே, கீழ் திண்ணை, அதனினும் நான்கு படிகள் உள் நோக்கிச் செல்ல படிகள் சமன் படுத்தி எடுத்துச் செல்லும்மேல் திண்ணைமீது.