கதையாசிரியர் தொகுப்பு: கி.வெ.ரமணி

1 கதை கிடைத்துள்ளன.

சவண்டிக் கொத்தன்

 

 வீட்டில் ஒரே கலகலப்பாயிருந்தது. அப்படி கலகலப்பை உண்டாக்கினது பெரும்பாலும் குழந்தைகளே. அந்தச் சூழலில் அப்படிச் செய்யக்கூடாது என்று தெரிந்திருந்தால், அவர்களும்கூட அப்படிச் செய்திருக்கமாட்டார்கள்தான். பெரியண்ணனும், சின்னண்ணனும் அத்தானிடம் நாளைய சடங்குகளுக்கு வேண்டிய ஏற்பாடு பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அம்மா எதுவும் பேசவில்லை. ஏதோ பெரிதாய்ச் சிந்திக்கிற மாதிரி பெரிய கண்களால் சுற்றிலும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அவ்வப்போது ஏதாவது தனக்குத் தோன்றியதைத் தனக்கே சொல்லிக் கொண்டிருந்ததோடு சரி. அப்பா செத்துப் போய்ப் பத்து நாட்கள் ஓடிவிட்டன. உழைப்பின் பலன்