கதையாசிரியர் தொகுப்பு: கிருத்திகா

5 கதைகள் கிடைத்துள்ளன.

கவனிப்பதால்

 

 யோகாவைக் காணவில்லை. காலை 9 மணிக்கே சுமதி அவனைத் தேடி ஒரு முறை வந்தாள். அவன் இருக்கையில் இல்லை. 10:30 மணிக்கும் வந்தாள். மீண்டும் அவனுடைய மேசையை வெறுமைதான் சூழ்ந்திருந்தது. இப்பொழுது மணி 11 ஆகிறது. இப்பொழுதும் அவனைக் காணவில்லை. பவனிடம், ”யோகா எங்கே?” என்றாள். ”இப்பக்கூட இங்கதான் இருந்தான், மேம்! அதுக்குள்ள எங்க போனானோ?!” பதிலளித்தவனை முறைத்தாள். ”முன்ன கேட்டதுக்கும், இதையேதான சொன்ன?” ”இல்ல மேம். நீங்க கேட்டுட்டுப் போனப்புறம் யோகாவைத் தேடிப் போனேன். கீழே


தானியங்கி

 

 “நீங்கதான் என்னோட அம்மாவா?” சாதாரணக் கேள்வியா அது? கல்லூரிக் காலப் புகைப்பட ஆல்பம் திடீரெனக் கையில் அகப்பட்டால், படபடவென நினைவுகள் பொங்கி வருமே! அதுபோல அந்தக் கேள்வியும் எழிலரசிக்கு பலபல நினைவுகளை எழுப்பிவிட, உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழிலரசியின் முகம் பல வண்ணங்களை மாறிமாறிப் பிரதிபலித்தது. கேள்வி கேட்ட மதுமிதாவோ தன் கைகளில் மாட்டியிருந்த வெண்ணிற ’ஃபிட்-மைண்ட்’(Fit-Mind)’ வளையத்தை உருட்டிக்கொண்டே பதிலை எதிர்பார்த்து எழிலை நோக்கினாள். கேள்வி கேட்ட பெதும்பை தன்னையே பார்த்திருப்பது அந்த மடந்தைக்குப் புரிய, எழில்


திரும்பிப் போ!

 

 ”நீ சீக்கிரமா ஊருக்கே திரும்பிப் போயிடு! நீ இங்கேயே தங்கினா எனக்கு அவமானமா இருக்கும்”. அகிலன் அழுத்தமாகச் சொன்னதைக் கண்டு நடுங்கினாள் மதிமொழி. விருதுகள் பல பெற்ற சிங்கப்பூர் விமானச் சேவையில் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரை பயணிப்பதில் மதிமொழிக்கு எப்பொழுதுமே ஒரு லயிப்பு உண்டு. அந்த உற்சாகத்தில் திளைத்திருந்த மதிமொழியின் முகம், அகிலனின் இரகசிய ஆணையில் துணுக்குற்றது. ஆசிரியரால் கண்டிக்கப்படும் சிறுபிள்ளையின் முகத்தைப் போல வாடியது. பெற்றோர் திடீரென எடுத்திருக்கும் முடிவு அகிலனை இந்த அளவிற்கு மாற்றிவிடும்


ஒலித் தீர்வுகள்

 

 சிங்கப்பூர் ரயிலில் பயணம் செய்யும்பொழுது தன்னைச் சுற்றி சிறிது இடம் தேவைப்படுகிறது அவளுக்கு. தன்னுடைய செய்தித்தாளை விரித்து வாசிக்க. அடுத்தவரின் ஒலிப்பானில் இருந்து வழியும் நாராசத்தில் இருந்து தப்பிக்க. மெல்லிசை செவிக்கு விருந்தாகும். அதிக ‘டெசிபல்’ சக்தியில் சக பிரயாணியினுடைய கைப்பேசியின் வழி தொடர்ந்து அலறும் இசைக்கருவியை என்னவென்று சொல்ல? ஒரு நாள் சோதனைக்கு உட்பட்ட மாதவிக்கு அருகில், வெகு நளினமான இள நங்கை ஒருத்தி. விலை உயர்ந்த கைப்பை. அலுவலகத்திற்குச் செல்ல முழங்காலுக்கும் மேலே தரமான


காலந்தவறாமை!

 

 தலையில் ஒலி வாங்கியுடன் இணைந்துள்ள ஒலிப்பானைப் பொருத்திக்கொண்டு சிரித்த முகத்துடன் முகமன் கூறிய ஆண்ட்ரியாவிற்கு ஒரு அவசரச் சிரிப்பை உதிர்த்துவிட்டு அலுவலகக் கணினியை உயிர்ப்பித்தபொழுது மணி 7:58. “நேற்று போல இன்றும் தாமதமாகி விடுமோ என்று பயந்தே விட்டேன்!” என்று நான் கூறினேன். “நான்தான் 7:30 மணிக்கே வருகிறேனே! நீ ஏன் அலட்டிக்கொள்கிறாய்!” என்றாள் ஆண்ட்ரியா. அவள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள். ஜப்பான் நாட்டுக்காரனை கல்யாணம் செய்ததாலோ என்னவோ அவளுக்கு எல்லா வேலைகளையும் நேர்த்தியுடனும் நேரத்துடனும் செய்வது