கதையாசிரியர் தொகுப்பு: காஞ்சனா தாமோதரன்

10 கதைகள் கிடைத்துள்ளன.

வீடு

 

 அவள் தூண் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். நல்ல தேக்கில் கடைந்தெடுத்து மேற்பூச்சுப் பளபளப்பு இன்னும் போகாமல் நின்றது தூண். உச்சியிலும் அடியிலும் கல்லில் செதுக்கிய தாமரை இதழ்கள். சிறு வயதில் இவற்றை இரு கைகளாலும் கட்டப் பார்த்துத் தோற்றது ஞாபகம் வந்தது. ஒரு தூணிலிருந்து அடுத்த தூணுக்கு ஒரே தாவில் தாவ வேண்டும். அவள் எப்போதும் ஜெயிப்பாள். நான்கு பக்கமும் தூண்களுள்ள திண்ணைகள். ஒவ்வொரு மூலையிலிருந்தும் அரை வட்டங்களாய் ஆறு படிகள். கீழே இறங்கினால் இரண்டு


அறிதலின் மூலம்

 

 ஆகஸ்ட் 2005. ஹார்வுட் ஸைபர்னட்டிக்ஸ் நிறுவனத்தின் உலகத் தலைமையகம், நியூ யார்க். கோடியிலுள்ள அந்த விசாலமான அறையின் கண்ணாடிச் சுவர் வழியே காலை வெயிலில் மினுங்கும் ஹட்ஸன் நதி தொிந்தது. சுவரோடு பதித்த பளிங்கு மேடை அருகே நிறுவனத்தார் அல்லாத ஒரு சிறு கூட்டம்….ஆரஞ்சு ஜூஸ், காஃபியை கிசுகிசு பேச்சோடு கலந்து கொண்டு. செயற்கை அறிவு விஞ்ஞானிகள் ஜான் பிரெஸ்காட், டேவ் போிஷ்னக்கோவ். தத்துவ ஞானிகள் ரமேஷ் மொக்லியானி, மிக்கி யோஷிமோட்டோ. ரோபோ-ஸைக்காலஜிஸ்ட்டுகள் மைக் லெஸ்ஸிக், கென்


சில பயணக் குறிப்புகள்

 

 இங்குதான் அவள் உயிர்ப்பாள். கிளைத்துப் பரந்து குவியும் பரவசத்தின் மையத்தில். அலையடிக்கும் நீரின் அண்மையில். நீரின் மீதான ஆசையும் ஏக்கமும் என்றும் அவளுள் நீங்காதிருக்க. அப்பா அம்மா இருவருக்கும் அலைகளின் பாடல் பிடிக்கும். கூடவே மொழியில் செதுக்கிய பாடல்களும். அர்த்தம் பொதிந்த கவிதைகளை இருவரும் சேர்ந்து பாடுவதை நினைத்துப் பார்ப்பது அவளுக்குப் பிடிக்கும். கவிமொழியே அவளையும் கடலையும் அவளைப் பெற்றோரையும் வரவழைத்ததாகக் கற்பனை செய்வதும் அவளுக்குப் பிடித்தமானது. அங்கு எடுத்த அவர்களின் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறாள். பழுப்பேறிய தங்கநிறத்தில்


காலநதி

 

 “இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து கொள்ளப்படாதவளாயும் என்னிலிருந்து வேறுபட்டவளாயும் காண்பித்துக் கொள்வது தொடரும்.” இளம்பதின்ம வயது (‘டீனேஜ்’) மகளுடனான சிக்கலான உறவு பற்றி ஒரு தாய் சொல்வதாக எனது சிறுகதையில் இடம் பெறும் வரிகள் இவை. 1998-2003 காலகட்டத்தில், தாய்-மகள் உறவு பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. சிறுகதைகள் மட்டுமல்ல. 2001-இல் எழுதிய “இக்கரையில்…” நாவல் கூடப் பல


‘X’

 

 அவனுக்கு வாழ்க்கை புரியவில்லை. பன்னிரெண்டு வயதில் உலகமே பெரிய X (எக்ஸ்) குறியாகத் தெரிந்தது அவனுக்கு. அர்த்தத்தைத் தன்னுள் மறைத்துக் கொண்டு வெறும் எழுத்தாய், ஏளனமாய்ச் சிரிக்கும் அல்ஜீப்ரா X அவனைச் சிறையில் அடைத்து குறுக்குக் கம்பிகளாய்க் காவல் காக்கும் X. கூரிய கத்திரிக்கோலாய் அவன் சிறகுகளை நறுக்கும் X மூக்கு மேல் ப்ளாஸ்திரியாய் அவன் மூச்சை இறுக்கும் X அப்பாடி அடிக்கடி வெளியூர் போய்விடுவார். அவர் ஸா·ப்ட்வேர் என்ஜினியர் வேலை அப்படி. அம்மாவுக்குப் பிரவு பழக்கமானதுதான்.


நதி

 

 ஹட்ஸன் நதி வெயிலில் மினுமினுத்தது. அமிழ்ந்து அமிழ்ந்து மிதக்கும் பாட்டில்கள்.. உலகைக் காப்பாற்ற அறிவிப்புச் செய்தி ஏதுமின்றி. சிகரெட்டுத் துண்டுகள்…கருகும் நுரையீரல் ரகசியங்களைப் பரிமாறிச் சிரித்துக் கொண்டு. ஆறடுக்கு பீர் பாட்டில்களைச் சுற்றி வைத்திருந்த பிளாஸ்டிக் வளையங்கள்.. இப்போது பறவைகளின் தற்கொலைக்கு வசதியான தூக்கு வளையமாய். மனிதர் அளவிலும் அவை வந்தால் வசதி. கழிவு எண்ணெய்ச் சிதறல்களின் கண்ணைப் பறிக்கும் வர்ண ஜாலங்கள்….தூரத்தே வளையும் அரை வானவில்லைக் கிரகணிக்கும் வக்கிர ஆபாசமாய். ஆழத்தில் நிறைய சடலங்களும் வாணிகக்


ஓட்டைக் காலணாக்கள்

 

 நம்பிக்கனி அத்தை நல்ல உயரம். அவளுக்குத் தலைவலி அடிக்கடி வரும். வெள்ளைத் துணியை நெற்றியில் இறுகக் கட்டியவாறு சோஃபாவில் படுத்துக் கண்களை மூடிக் கொள்வாள்; சோஃபாவுக்கு வெளியே நீளும் பாதங்கள் புடவை கொஞ்சமும் விலகாமல் எப்படியோ சுவற்றில் மெல்ல ஏறும். அப்படிப் பாதங்களை ஓட்டிக் கொண்டே கதைகள் நிறையச் சொல்லுவாள். அவள் தங்கியிருந்த வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் நிறைய நம்பிக்கனி அத்தைக் கதைகளைத் திரட்டியிருந்தன. எல்லாம் அதே கதைகள்தான். எதையும் குணப்படுத்தும் சக்தியுள்ள இஞ்சி மரப்பானை அவள்


வழிப்பறி

 

 ‘ஏ பாமா, நீ ரெடியா ? ‘ ராவுத்தர் மகள் சலிமா அக்கா வாசலில் நின்று குரல் கொடுத்தாள். ‘அவா எங்க ரெடி ? இவ்ளோவ் நேரமா ஒரு பொஸ்தகத்தை வச்சிக்கிட்டு ஒக்காந்திருந்தா. நேரத்தோட குளிப்பியான்னு நா இப்பத்தான் வெரட்டி விட்டேன். ‘ அரிசியைச் சுளவில் பரப்பிக் கல் பொறுக்கிக் கொண்டு முன் திண்ணையில் உட்கார்ந்திருந்த பாமாவின் தாய் வாஞ்சையுடன் அலுத்துக் கொண்டாள். அவளுக்கு எல்லாம் கேட்டது. புத்தகம் படிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் போவது தெரியவில்லைதான்.


அடகு

 

 செல்வி கொண்டு வந்த தவலைப் பானையைச் செல்லத்தாயம்மாள் அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தாள். சில இடங்களில் சப்பி நசுங்கியிருந்தது. ஒரு பக்கத்தில் ‘மா.செ. ‘ என்று கொஞ்சம் கோணலாய் வெட்டியிருந்தது. விளிம்பு பித்தளை விட்டுப்போய் இளித்தது. உள்ளே ஈயப்பூச்சு தேய்ஞ்சிருந்தது. பானையைத் தள்ளி வைத்தாள். வெற்றிலைச் செல்லத்தைத் தன் பக்கம் இழுத்தாள். உள்ளே இருந்ததைப் பார்ப்பதாகப் பாவலா செய்கிறாளோ. செல்விக்கு உடம்பு ன்னும் கொஞ்சம் கூனிக் குறுகிற்று. அவளை விட அந்த வெற்றிலைச் செல்லம் பெரிசுதான் போல.


வடிவ அமைதி

 

 அந்தப் பெண் கண்ணாடி முன் நின்றாள். திறந்த ‘ப ‘ வடிவிலான கண்ணாடியில் வெவ்வேறு கோணங்களில் மூன்று பிம்பங்கள் நிறைந்தன. உடம்பைக் கவ்விப் பிடிக்கும் ‘ஸ்பான்டெக்ஸ் ‘ துணியினாலான மேல் சட்டையை இன்னும் கொஞ்சம் கீழே இழுத்து விட்டாள். முன்னும் பின்னுமாய்த் திரும்பித் திரும்பித் தன்னைப் பார்த்துக் கொண்டாள். தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கினாள். முகத்தில் அதிருப்தி. மீண்டும் உடை மாற்றும் அறைகளுள் திரும்பிச் சென்றாள். அவள் அந்தச் சட்டையை வாங்கப் போவதில்லை என்று தோன்றியது. மஞ்சு