கதையாசிரியர் தொகுப்பு: கலைச்செல்வி

9 கதைகள் கிடைத்துள்ளன.

கனகுவின் கனவு

 

 “புள்ளத்தாய்ச்சி பொண்ணு இப்டி கூன் போட்டு உட்காரதடீ..” செல்லமாக அதட்டினாள் கனகு. “அத்தே.. சக்கரைபொங்கலுக்கு பெரிய படிக்கு ரெண்டு படி அரிசி போட்டா சரியாயிருக்குமாத்தே..?” கனகுவிடம் கேட்டாள் நல்லமுத்துவின் மருமகள். “எக்கா சோத்தை வடிச்சு வுட ரெண்டு தட்டு கூடை போதுமில்ல..?” என்ற தேவானையை நல்லமுத்து அதட்டினான். “அதான் தவுசுப்புள்ள லிஸ்ட் போடுறாப்பல அண்ணி சொல்லிடுச்சே.. அப்பறமும் என்னா அதுக்கிட்ட தொணதொணத்துக்கிட்டு.. வளைவிக்காரன் வந்துட்டான்.. தேவைப்பட்டதை அது பாத்து எடுத்து வைக்குமில்ல..” “பாட்டீ..” திரைசீலையை விலக்கி விட்டு


சந்தியாவின் முறுக்கும், சில முறுக்குகளும்

 

 காலை எழுந்திருச்சதிலிருந்து வயிற்றை ஏதோ பிசைவது போலவே இருந்துச்சு சந்தியாவுக்கு. பழையச்சோத்துப் பானையை திறந்து பார்த்தா. கொஞ்சம் சோறும், நிறைய நீருமாக இருந்தது. டம்ளரும், கரண்டியுமாக சோத்துப்;பானை பக்கத்துல உட்கார்ந்தாள். அம்மா பூஞ்சோலை காலையிலேயே வீட்டு வேலைக்கு கௌம்பி போயிட்டா “யக்கா… வயிறு நோவுதுக்கா…” தூங்கிக்கிட்ருந்த தம்பி எப்ப எந்திரிச்சான்..? “அம்மா நீராரதண்ணி வச்சிட்டு போயிருக்கு.. எந்திரிச்சு வந்து குடி..” பக்கத்துப்பானையில் இருந்த தண்ணீய மோண்டுக் குடிச்சுக்கிட்டா சந்தியா. நேற்று ராத்திரியும் சாப்புடல. நேத்து ராத்திரி பூஞ்சோலை


நூடுல்ஸ்

 

 “அம்மா சுமதி.. அந்த பொன்னியின் செல்வன் புக்க எடுத்து குடுத்துட்டு போறீயாம்மா..?” குமரேசனின் குரலில் சங்கடம் தெரிந்தது. “மாமா.. ப்ளீஸ்.. எனக்கு பஸ்ஸ{க்கு நேரமாயிடுச்சு..” வீட்டில் ஒரு காலும் வாசலில் ஒரு காலுமாக பேசிய சுமதி நழுவும் ஹேண்ட்பேக்கை சரி செய்தவாறே வெளியே விரைந்தாள். ‘பாவம்.. அவளுந்தா என்னா செய்வா..? பொம்பள ஜென்மம் எடுத்தாலே இப்டிதான் போலருக்கு..’ மருமகளுக்காக மனம் பரிந்துக் கொண்டு வந்தது. ‘செண்பகம் மட்டும் கொஞ்சமாவா ஒழைச்சா.. அம்மா, ரெண்டு தங்கச்சிங்க, என் தம்பின்னு


காசும் காதலும்

 

 மாலையும், ஊதுபத்தி மணமும் சென்ட்டின் வாசமும் அந்த இடத்தின் நிகழ்வை தெருமுனையிலேயே கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. வசந்தன் பிணமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தான். அவன் மனைவி லதா ஓர் ஓரமாக வெறித்த பார்வையோடு இறுகி போய் உட்கார்ந்திருந்தாள் அருகில் மகன் சுரேஷ{ம், மகள் சுபாவும் அழுதவாறு இருந்தனர். சுற்றிலும் உள்ள கூட்டத்தில் தெருவாசிகளும், நண்பர்களும், மீதம்; அலுவலக சகாக்களுமாக இருந்தனர். அவளைக் கட்டிக் கொண்டு அழ உறவுகள் இல்லையானாலும், பக்கத்தில் உட்கார்ந்து தேற்ற நண்பர்கள் இருந்தனர். ஷாமியானா போடுவதிலிருந்து,


வலி

 

 சாவு வீடு மெல்ல களைக்கட்டிக் கொண்டிருந்தது. முன்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது கல்யாணியின் உடல். ஆண்கள் கூட்டம் கூடத்திற்கு வந்து இறுதி மரியாதை செலுத்திய பிறகு வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலுக்குள் ஐக்கியமாகியது. பெண்கள் ஆங்காங்கே இருந்த அறைகளில் பரவினர். நடுக்கூடத்தில் மாமியாரின் உடலருகே சூன்யத்தை வெறித்தப்படியே உட்கார்ந்திருந்தாள் புவனேஸ்வரி. திருமணமாகி வந்த நாளிலிருந்தே அதிகாரங்கள் மையப்படுத்தப்படாததால் மாமியாருடன் சொல்லிக் கொள்ளும்படியான எந்த பிணக்கும் ஏற்பட்டதில்லை. அம்மாவின் தோளில் சாய்ந்தப்படி உட்கார்ந்திருந்த காயத்ரியின் உதடுகள் தனியே விம்மியது. ஒரு


அவள்

 

 வழக்கம்போல் திங்கள்கிழமையின் பரபரப்பிற்குள் அரசு அலுவலகம். வருகை பதிவேடு மூடுவதற்குள் அலுவலகம்; வந்த கதை, காலை அறிவிக்கப்பட்ட அரியர்ஸ்க்கு, இன்றே அரசாணை எண் கிடைக்குமா? மேலதிகாரியின் அறைக்குள் சென்ற பெண் அலுவலர் எப்போது வெளியே வந்தார்? அதிரஅதிர கவலைப்படும் அலுவலக பணிக்குள் எங்குமே ஒட்டாத அவள் நிலை. மனம் நழுவி நழுவி காலை நேரத்திற்கே சென்றது. இன்றும் வழக்கம்போல காலையில் எழுந்து, கண்களை துடைத்தவாறு சமையலறைக்குள்; நுழைந்தாள் அவள். அவளின் காலடித்தடம் கேட்டு, சடாரென குரலெழுப்பி ஏதோ


அகமும் புறமும்

 

 சுமார் அறுபதை கடந்த நகுலன் குளிர்ப்பெட்டியில் காலை நீட்டிப் படுத்திருந்தார். உயிரோடிருந்த நாளில் .குளிர்சாதனப்பெட்டியின்; வாசத்தையே அறியாதவர். ஆங்காங்கே படிப்பு வாசம் முளை விட்டுக் கொண்டிருந்த கிராமம் அது. இந்துக்களும் கிறித்துவர்களும் அடர்வாக சம அளவில் இருந்தனர். “வேதகாரங்க வூட்டு ஸ்டெல்லா பெரிய ஸ்கூல்ல படிக்க போவுது.. என்னையும் அனுப்பி வுடு..” ரெண்டு மூணு பொம்பளப்புள்ளங்க பன்னெண்டாம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்காங்க. அதுங்களுக்கு மாப்பிள்ளை தேடும்போது ஏற்பட்ட சின்ன தேக்கநிலை நம்ப புள்ளங்களுக்கும் வந்துடக்கூடாதுங்கிற நினைப்பு ஒரு


கல்யாணியும் நிலாவும்

 

 அன்று நிலா மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது எப்போதாவது தான் மகிழ்ச்சியாக இருக்கும். காலையிலிருந்தே அதற்கான ரகசியங்கள் பொத்தி வைக்கப்பட்டிருந்தன. நிலா வந்ததும் வராததுமாக அந்த ரகசியங்கள் சொல்லப்பட நிலா சட்டென பிரகாசமாக மாறி விட்டது. மாமா வாங்கி வந்திருந்த வளையல், தோடுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிணற்றடியில் இருந்த துவைக்கும் கல்லில் பரப்பி வைத்திருந்தாள் கல்யாணி. அவள் அணிந்;திருந்த முழுப்பாவாடையும், அதற்கு பொருந்தமில்லாத இறக்கம் இல்லாத சட்டையையும் மீறி அவள் முகம் பிரகாசமாக இருந்தது. கலைந்திருந்த


வைதேஹி காத்திருந்தாள்

 

 சன்னல் வழியே சுள்ளென்று எட்டிப் பார்த்தது சூரியன். சன்னல் தன்னை உள் வாங்கியதால் அதற்குக் கட்டுப்பட்ட சூரியன், தனது ஒளியில் சன்னல் வடிவம் காட்டி அதற்கு நன்றி கடன் செய்தது. அதன் வரி வடிவ ஒளியை இரசித்தவாறு படுத்திருந்தாள் வைதேகி. “”வைதேகி” சன்னமாக காற்றைக் கிழித்த சத்தம். “”இன்னுமா தூங்கறே?” என்ற கணவர் குரலுக்கு, “”ம்ம்ம் எழுந்திருச்சாச்சு..” பதிலளித்தாள். பிரிந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்தாள். ஒற்றை நாடி சரீரம். மிக லேசாக எழும்பிய வயிறு. நெற்றியில் ஒட்டியிருந்த