கதையாசிரியர் தொகுப்பு: எல்.பிரகாஷ்

1 கதை கிடைத்துள்ளன.

ஒல்லிக்குச்சி கில்லாடி!

 

 அவன் பெயர் பிரவீன் குமார் ஜெயின். வயது 26. அப்படித்தான் அவன் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டான். உண்மையில் அவனைப் பார்த்தால் 16 அல்லது 17-க்கு மேல் மதிக்க மாட்டீர்கள். இங்கு நான் பார்த்தவர்களிலேயே ரொம்பவும் ஒல்லியாக, மிகவும் நேர்த்தியாக உடை அணிந்திருந்தவன் இவன்தான். கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இங்கே வந்திருக்கிறான். அவன் மேல் 6 வழக்குகள் இருந்தன. உள்ளே இருந்த காலத்தில் 3 வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டான். புனையப்பட்ட வழக்குகளில் தான் நிரபராதி என்று வாதிட்டு,