கதையாசிரியர் தொகுப்பு: இ.இளங்கோவன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நிலமும் பொழுதும்

 

 “ஒரு குழி நிலம் ஐம்பத்துஏழாயிரம்ன,நம்ம மொத்த நிலம் ஐம்பது குழிகளும் எவ்வளவு வரும்?” என்று கேட்டார் தாத்தா திருநாவுக்கரசு, தனது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வையும், நீட் தேர்வையும் முடித்து தேர்வு முடிவுக்காக காத்திருந்த பேத்தி ஆண்டாளிடம் . “ஊர்ல யார் நிலத்தை வித்தாலும் விலைய விசாரிச்சுட்டு வந்து இந்தக் கணக்கு போடுறத ஒரு வேலைய வச்சுருக்காரு தாத்தா என்று சலித்துக் கொண்டாள் பேத்தி ஆண்டாள். இருந்தாலும், தனது மனக்கண்ணில் கணக்கை போட்டு ” இருபத்து எட்டு இலட்சத்து


பவள மல்லி

 

 உண்மையான மரத்தை பார்ப்பதைவிட, ஓவியத்தில் உள்ள மரத்தை பார்த்து இரசிக்கும் மனநிலை கொண்ட மனிதர்களின் மத்தியில்,சந்திரா எப்போதும் உண்மையான இயற்கை மணம் வீசும் மரங்களோடும், மலர்களோடும் வாழ்வை சுவைத்துக் கொண்டிருந்தாள். வயது அறுபதை நெருங்குவதால், கையை உயர்த்தி, உடம்பை நேர்படுத்தி, மூச்சை உள் வாங்கி, நுனிக்காலில் நின்று, எக்கி கிளைகளை பிடித்து இழுத்து, மலர்களை பறிக்கும் போதும், மூச்சை வெளியேற்றி, உடம்பை வளைத்து, தலையைக் கீழ் நோக்கி, கால் மூட்டுக்களை வளைத்து, கையை கீழ் இறக்கி தரையில்