கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.கே.சண்முகம்

6 கதைகள் கிடைத்துள்ளன.

வண்ணமும் எண்ணமும்

 

 மாலை நேரமாதலால் நெரிசல் அதிகமாக இருந்தது. நகரத்தின் நுழைவுப் பகுதியில் இந்தச் சந்தை அமைந்திருந்தது. காயிலிருந்து கறி வரை கிடைக்கும் என்பதால் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கிராமத்துச் சந்தை மாதிரி இல்லை. கார் நிறுத்துவதற்கும் இரண்டு சக்கர வண்டி நிறுத்துவதற்கும் தனித்தனி இடம் இருந்தது. சந்தைக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் இடம் போதாது சாலை வரை கடைகள் நீண்டு சாலையைத் தாண்டியும் பரவியிருந்தன. போக, வரும் பேருந்துகள் சந்தையை இரண்டாகக் கிழித்தபடி மெதுவாகக் கடப்பதும் அவை


மழை மேகம்

 

 ஜேஜியின் மனைவி வந்திருப்பதாக என்னுடைய மனைவி சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “”நீங்க சொன்னாத்தான்ணே கேப்பாக” “”சரிம்மா… என்னதான் பிரச்னை?” என்றேன். “”வருமானத்துக்கு ஒண்ணும் குறையில்லண்ணே… ஆனா முழுசும் குடும்பத்துக்கு வராம….” அதிர்ந்து போனேன். “”என்னம்மா சொல்ற நீ?” ஜேஜி என்று நாங்கள் சுருக்கமாக அழைக்கும் ஜே.கோவிந்தன் முகம் மனதுக்குள் வந்து போயிற்று. “”நீ சொல்றதுக்கு நிறைய அர்த்தம் இருக்குதே…. ஏதாவது பொண்ணுங்க விஷயத்துல காசு போகுதா? ” “”அய்யய்யோ இல்லண்ணே… அதுல அவரு மேல ஒரு


நண்பன்

 

 கண்ணாடித் தடுப்பு வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே தெரியாதவாறும் உள்ளிருந்து பார்த்தால் வெளியில் நடப்பது அனைத்தும் தெரிவதாயும் அமைக்கப்பட்டிருந்தது. மணி மூன்றைத் தாண்டி நாற்பது நிமிடங்கள் ஓடியிருந்தது. இன்னும் இருபது பேருக்கு மேல் காத்துக் கொண்டிருந்தார்கள். இன்று வெள்ளிக்கிழமையாதலால் இன்னும் வருவார்கள். நான் தரும் பணம் இவர்கள் கையிலிருந்து மாறி இவர்களின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் வீடுகளுக்கு அரிசியாகவும், பாமாயிலாகவும், அவர்களின் இடுப்பு வேட்டிக்குள் ரகசியமாகப் பயணிக்கும் டாஸ்மாக் பாட்டில்களாகவும், அவர்களின் பிள்ளைகளுக்கு நோட்டுகளாகவும், பென்சில்களாகவும், இருமல்


மடிச்சுமை

 

 “”ம்ம்ம்மா….” என்று அலறிற்று. அழுகையும் அலறலுமான அதன் குரல் எனக்குள் என்னவோ செய்ய… தொடர்ந்த சில நிமிடங்கள் நகராது தத்தளித்தன. “”என்ன பெரியக்கா… இப்படி கலங்குற… ஒன்னும் நடக்காது…” கலக்கமாகத்தான் இருந்தது. பசுமாடு வேறாகவும் கன்று வேறாகவும் போவதற்குள் அது படும் வேதனை. கொஞ்ச நேர அமைதிக்குப் பின் “அது’ நிகழ்ந்தது. கன்று, வேறாய், வைக்கோல் பொதியின் மேல் கிடக்க… பசுமாடு அதனை அரவணைத்துக் கிடந்தது. கன்றின் உடல் முழுக்க ஈரமாயிருந்தது. மெல்ல அது அசைய பயமாய்க்கூட


பயணம்

 

 மதியம் மூன்று மணியாதலால் கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சாலையில் வழக்கமாய்ப் பறக்கும் இரு சக்கரங்கள்கூட அதிகமில்லாது சாலை மௌனமாய் இருந்தது. மேல் அலமாரியில் வைத்திருந்த சிறிய வண்ணத் தொலைக்காட்சியைப் பார்ப்பது சலிப்பைத் தர எழுந்து வெளியே வந்து அமர்ந்தேன். பக்கத்து வீட்டுப் பெரியவர் கதவைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். “”என்னண்ணே… பொழுது போகலயா?” என்றேன். சிரித்தபடி… “”பொழுது போதலப்பா… சாயங்காலம் அஞ்சு மணிக்கு புறப்பட்டு நடந்து போனா… ரெண்டு மணிநேரம் என்னை மாதிரி ஆளுகளோட அரட்டை…


காற்றுள்ள பந்து

 

 இந்தப் பள்ளியில் சேர்ந்து இரண்டு நாள்கள்தான் ஆகியிருந்தது. இதற்கு முன்பு வேலை செய்த பள்ளியின் உயர்ந்த, நீண்ட கட்டிடங்களும், அகன்று, விரிந்து, பரந்த மைதானமும், தழைத்து வளர்ந்த மரங்களும் நினைவிலாடிற்று. முழுவதும் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியாதலால் சூழ்நிலை எனக்கு வித்தியாச-மாய் இருந்தது. விளையாட்டுப் பிரிவு வேளையில் கூட விளையாடாது, மரத்தடியில் பாடம் படிப்பதும் அல்லது ஓரமாய் ஒதுங்கி கிசுகிசுப்பாய்ப் பேசிக் கொள்வதுமாய் இருந்தனர் பிள்ளைகள். இன்னும் பள்ளியின் விதிமுறைகள் ஏதும் முழுதாய் எனக்குப் பிடிபடவில்லை. நான்