கதையாசிரியர் தொகுப்பு: ஆதி.இராஜகுமாரன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

அக்கரைப் பச்சைகள்

 

 (1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக கரையிலிருந்து விலகிக் கொண்டிருந்தது. அந்நகரின் உயரமான களைமிக்க கட்டிடங்கள் சின்னதாகிக் கொண்டிருந்தன. சபேசனுக்குக் கண்களில் நீர் திரையிட்டது. ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட மண்ணைப் பிரிவது அவருக்கு இலேசான செயலாக இல்லை. பிறந்ததற்கு என்று பெயர் சொல்ல ஒரு பூமி தூரதொலைவில் இருந்த போதிலும் இந்த மண்ணில் தான் சபேசன் வளர்ந்தார் வாலிபமானார் வாழ்ந்தார். அவருடைய பிரிவுக்காக அழுபவர்களோ, அங்கலாய்ப்பவர்களோ


திரைகள்

 

 (1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பஸ் சீக்கிரம் வந்துவிடக்கூடாதே என்ற தவிப்போடு அவன் அவளை அடிக்கடி ஓரக்கண்ணால் கவனித்தவாறு நின்று கொண்டிருந்தான். நேருக்கு நேராக அவளை நோக்க அவனுக்கு விருப்பமில்லை. அந்த பஸ் நிறுத்தத்தில் இருந்த சிமெண்டு பெஞ்சில் உட்காருவது, பிறகு அமைதியிழந்தது போன்று எழுந்து நிற்பது, பின்னர் அச்சாலையின் வழியே செல்லும் கார்களின் பின்னேயே கண்களை ஓட்டியவாறு அவளை சாடையாகப் பார்ப்பது என்று அவன் அல்லாடிக் கொண்டிருந்தான்.


தனிமரங்கள்

 

 (1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுந்தரம் வீட்டுக்குள் நுழைந்தபோது அவன் எதிர்பார்த்தது போலவே சுப்பையா அங்கிருந்தார். அவன் அவரைப் பார்த்து புன்னகை செய்யவே விரும்பினான். ஆனால் அது சகஜமாக வெளிப்படாததால் மாறுபாடான முகத்தோற்றத்தையே உண்டாக்கியது. நாற்காலியில் உட்கார்ந்திருந்த சுப்பையா இருப்பு கொள்ளாமல் சங்கடத்துடன் நெளிந்தார். மூக்குக் கண்ணாடிக்குப் பின்னே அவரது கண்கள் மிரட்சியுடன் நிலைகொள்ளாமல் தவித்தன. அவரை மேலும் தொல்லைக்கு உள்ளாக்கி விடக்கூடாதே என்ற எண்ணத்துடன் அவன் கூடத்தை


ஒரு தேவதை தூங்குகிறாள்

 

 (1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் மரம் வெட்டுபவன். காலையில் எழுந்து ஏதாவது உணவை கட்டி எடுத்துக் கொண்டு காட்டுக்குப் புறப்பட்டான் என்றால் சூரியன் உச்சிக்கு வரும் வகையில் கருமமே கண்ணாக இருப்பான். பசி வயிற்றைக் கிள்ளியதும் கொண்டு வந்த உணவை விழுங்கிவிட்டு மர நிழலில் சிறிது அயர்ந்து படுத்து இருப்பான். தூக்கம் வராவிட்டாலும் கண்களை மூடிக் கொண்டு சொகுசாகச் சாய்ந்திருப்பான். அப்போதெல்லாம் அவனுக்குக் கதைகள் மனதில் அடுக்கடுக்காகத்