கதையாசிரியர் தொகுப்பு: அ.வெண்ணிலா

5 கதைகள் கிடைத்துள்ளன.

பிருந்தாவின் கனவு

 

 முன்குறிப்பு: ஓர் உண்மைச் சம்பவத்தின் தழுவலே இந்தக் கதை! பிருந்தாவுக்குக் கைகுலுக்கப் பிடிக்கும். கை கூப்பியோ, கைகளை உயர்த்தியோ வணக்கம் சொல்வதைவிட, கைகுலுக்கி வணக்கம் சொல்வது மனசுக்குப் பிடிக்கும். நெருக்கமாக உணர்வாள். வலது கை குலுக்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இடது கையை மேலேவைத்து அழுத்தி, இரு கைகளுக்குள் ஒரு கையைப் புதைத்துக்கொள்ளும் கணம் உயிர்ப்பானது. முன் பார்த்த முதல் சந்திப்பில் கை குலுக்க கைகளை முன் நீட்டினால், எதிரில் நிற்கும் ஆண் கொஞ்சம் மிரள்வது தெரியும். எதிர்பார்த்திருக்க


பகிர்தல்

 

 ராஜீ: நாற்பதைக் கடந்து ஐந்து வருஷம் ஆகிறது. அழகான பெண்களைப் பார்த்தால், தன்னிச்சையாகத் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. இதுதான் அழகு என்று நிரந்தரமான கோட்பாடு ஏதாவது மனதில் இருக்கிறதா? கேவலம், அப்படியும் இருந்து தொலையவில்லை. திரும்பிப் பார்த்துவிட்டு, ‘ச்சேய்… இவளையா இவ்வளவு நேரம் பார்த்தோம்’ என என்னையே நொந்துகொண்டு, தலையைத் தொங்கப் போட்டுக்கொள்வேன். அதுவும் நாற்பது வயதுக்கு மேலும் அழகாக இருக்கிற பெண்களைப் பார்த்தாலே, பதற்றமாகிவிடுகிறேன். ரசிக்கும் ஆர்வத்துடன், குறைந்துவரும் என் தோற்ற இளமையும் சேர்ந்துகொண்டு,


தரையிறங்கும் இறகு!

 

 வயது தசைமரமாக முதிர்ந்து உடலெங்கும் கிளைபிடித்து ஓடியது முத்துலட்சுமிக்கு. முத்துலட்சுமின்னா யாருக்குத் தெரியும்? ‘கூனிகெழவி’ தான் இப்ப அவ பேர். மொத மொதல்ல தனக்கு வெள்ள முடி வரும் போது கூடமுத்துலட்சுமிக்கு மனசுல கிலேசம் இருந்தது கிடையாது. ஆனா, ‘ஏகெழவி’ன்னு பிள்ளைங்க கூப்பிட ஆரம்பிச்சதும் தான், முத்துலட்சுமிக்கு மனசுக்குள் கிலி பிடித்த மாதிரி இருந்தது. சின்னப்பிள்ளையில, கூடப்படிக்கிற பிள்ளைங்க யாராவது ‘முத்து’ன்னு சுருக்கமா கூப்பிட்டாலே அப்பாவுக்குப் பிடிக்காது ‘அதென்ன பேர் வைக்கறது ஒண்ணு, கூப்பிட்றது ஒண்ணு’ன்னு கோபப்படுவார்.


அடையாளம்

 

 பத்தாம் வகுப்பு முழுப் பரீட்சைக்காகத்தான் முதன்முதலாக எங்களுக்கு ‘அங்க அடையாளம்’ எடுத்தார்கள். ”எல்லாரும் ரெண்டு அடையாளங்கள பாத்து வெச்சுக்கோங்க. இங்க வந்து தடவிக்கினு இருக்கக் கூடாது. டிரெஸ்ஸுக்கு வெளிய இருக்கணும். முட்டியில இருக்குது, தொடையில இருக்குதுனு துணியத் தூக்கக் கூடாது” என்று கஸ்தூரி டீச்சர் குரலிலேயே பள்ளி மாணவித் தலைவி மாரியம்மாள் பத்தாம் வகுப்பின் எல்லாப் பிரிவுகளுக்கும் சொல்லிச் சென்றாள். எல்லாருக்கும் சிரிப்பாக வந்தது. ”ஒனக்கெங்க இருக்கு… காமி” என்று எல்லாரும் அடுத்த ஆளின் அங்க அடையாளத்தையே


வெளிய

 

 முள் தோப்பு எங்கும் மல நாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மாதான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக பெரியம்மாவுக்கு விடியற்காலை இரண்டு மணிக்கு எல்லாம் விழிப்பு வந்துவிடும். தண்ணீர் பிடித்துக்கொண்டு இருக்கும்போதே, பறவைகள் சத்தம் கேட்கிறதா எனப் பார்க்கும்.’பறவை கள் சத்தம் கேட்டால் பூச்சி, பொட்டெல்லாம் போய்விடும்’னு பெரியம்மா சொல்லும். தோட்டத்துக் கதவைத் திறந்து, முதல் ஆளாக பெரியம்மா, குப்பைப் பள்ளத்துக்குப் போகும். குப்பைப் பள்ளத்துக்கு முன்னாடியே உட்கார்ந்துவிடும். பெரியம்மா போன உடனே அடுத்தடுத்து