கதையாசிரியர் தொகுப்பு: அருண்.கோ

2 கதைகள் கிடைத்துள்ளன.

எனது நான்காவது கல்யாண நாள்

 

 எனக்கு மறதி எல்லை மீறிப் போய்விட்டது. கடந்த காலத்தின் சம்பவங்கள் மனதை விட்டு நீங்கி மறைந்து விடுவது இயற்கை. ஆனால் எனக்கு சில சமயங்களில் நேற்று என்ன செய்தேன் என்பதே மறந்து போய்விடுகிறது. ஒரு வேளை நேற்று முழுவதும் எழுந்திருக்காமல் நேற்று முன்தினத்தில் இருந்து தூங்கியே ஒரு நாள் முழுவதையும் கழித்து விட்டேனா என்ற கேள்வி தான் எப்போதும் முதலில் எனக்குள் எழும்? இந்த தருணங்களில் எழும் எந்த கேள்விக்கும் எனக்கு எப்போதும் விடை கிடைத்ததே இல்லை.


பரமசிவம்

 

 ஓங்கி உயர்ந்த மரங்களுக்கிடையே கருப்பை அப்பிக் கிடந்தது அந்தக்காடு. கண்ணுக்கு புலப்படாத ஒற்றையடிப் பாதை. அந்த பாதையின் இரண்டு புறமும் மண்டிக்கிடந்த புதர்களில் இருந்து ஓயாமல் வந்துகொண்டிருந்தது சில்வண்டுகளின் க்ரீச் க்ரீச் ஒலி. அங்கொன்றும் இங்கொன்றுமாய் காட்டு நாய்களின் குரைப்பும், ஓனாய்களின் ஊளையும் கேட்டுக்கொண்டு இருந்தது. மணித்துளிகள் நடு நிசியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. செல்போன் வெளிச்சத்தில் மணி 11:45ஐ பார்த்து விட்டு இன்னும் பதினைந்து நிமிஷம் தான் இருக்கிறது என்றான் அந்த ராட்சத பாறைக்கு பின்னாலிருந்து