கதையாசிரியர் தொகுப்பு: அரவிந்த் மனோ

10 கதைகள் கிடைத்துள்ளன.

செகண்ட் செலக்ஷன்

 

 எங்கள் கார் ஐ.ஐ.டி.யின் பரந்து விரிந்த வளாகத்தின் ஏதோ ஒரு தனி மரத்தை முட்டியபடி நின்றுக்கொண்டிருந்தது. மேலிருந்து சருகுகள் வேலையில்லாமல் முன் கண்ணாடியில் விழுந்து சரிந்துகொண்டிருந்தன. உள்ளுக்குள் மெதுவாக நேரத்தை படிப்படியாக எண்ணியபடி தாண்டிக்கொண்டிருந்த நான், சரியாக பத்து நிமிடம் ஆனதும் கேட்டேன். ‘போலாமா?’ அவர் என்னைப் பார்த்தார். திரும்பி மீனுவை ‘போலாமா?’ என்பது போல பார்த்தார். அவள் தான் உத்தரவு தர வேண்டும். மீனு பின் சீட்டில் உட்காருவதற்கும் நிற்பதற்கும் இடையே ஏதோ ஒன்றை சிரமமின்றி


நீட்சி

 

 குகைக்குள் நுழைந்து திரும்பும் பறவை போல ஜிபிஎஸ் கார் திரும்பிய திசையில் தன் வான்பார்வையை திருப்பி இன்னும் இரண்டரை மைலில் என் பயணம் முடியப்போகிறது என்று சொல்கிறது. ரோஜாப்பூ நிறத்தில் நான் செல்கிற சாலையை சுட்டிக் காட்டியபடி அதன் இருபுறத்திலும் வெறும் பச்சைவெளிகளும் மலைகளும் இருப்பதை மலிவான க்ராஃபிக்ஸில் வரைந்து காட்டுகிறது. பதிவு செய்யப்பட்ட பெண் குரல் நிதானமாக அடுத்த இரண்டு திருப்பங்களைப் பற்றி அதிகாரமில்லாமல் சொன்னது. கடந்த பத்து மைல்களாகவே இந்த சாலையில் யாரும் பயணிப்பதாக


ஆயிரமாயிரம் இரவுகள்

 

 என்னைவிட மோசமான கணவன் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. சதைக்குள் சென்று தலை நீட்டிக்கொண்டிருக்கும் முள்ளை நெருடி நெருடிப் பார்ப்பது போல, என்னை நானே வருத்திக்கொண்டிருந்தேன். ஹரிணி, விநய், நான் – மூவரும் மெயின் ரோட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். நான் ஹரிணியிடமிருந்து கொஞ்சம் விலகி விலகி நடக்க, அவள் என்னிடம் வந்து சேர்ந்துக்கொண்டேயிருந்தாள். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கொஞ்சம் நடந்ததும் ஹரிணி ‘நீ போய் அம்மாவுக்கு துணையா இருடா கண்ணா’ என்று விநயிடம் சொன்னாள். ‘ம்’


முதல் ரகசியம்

 

 பார்ப்பதற்கு திலீபனைப் போலவே இருந்த அந்த தூரத்து ஆளை ரவி திரும்பி பார்த்தார். அவரைக் காணவில்லை! அலைகள் வரைந்த நீளக் கோட்டையொட்டி தேடிப் பார்த்தார். பின் திரும்பி பார்க்கையில் அவரும் அவருடன் வந்த பெண்மணியும் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அது திலீபனாக இருந்திருக்கலாம். கூட வந்த பெண் சங்கரியாக இருந்திருக்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அவருக்கு ஒரு வாய்ப்பு இருந்தது அதை சாத்தியப்படுத்த. சங்கரியும் திலீபனும் காதலித்தார்கள் தானே? யாரைக் கேட்டு அறிந்துகொள்வது? சங்கரியின் வீட்டுக்கு போக வேண்டியிருந்தது.


பாலம்

 

 கவி கண்களை அகல விரித்துப் படுத்துக் கிடந்தாள். மின்விசிறி ஸ்ரட் ஸ்ரட் ஸ்ரட் என சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. கண்களை மூடினால் கொஞ்ச நாட்களாக ஒரு அலறல் சத்தம் கேட்கிறது. இன்றும் கேட்குமா என்று பயந்தபடி கண்களை மூட எத்தனிப்பதும், மூடாமல் மறுப்பதுமாக கிடந்தாள். முதல் மாடியில் வீடு இருந்ததால், தெருவின் சப்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது. தெளிவில்லாத பேச்சொலிகள். கேட்டுக்கொண்டே இருந்தவள், திடீரென எழுந்து கூர்மையாக கவனித்தாள். விருட்டென எழுந்து வாசலை நோக்கிச் சென்றாள். கட்டிலின் கீழே படுத்துக் கிடந்த


தீதும் நன்றும்

 

 3…. 2…. 1…. 0…. “On air…” என்று விக்ரம் சைகையில் சொன்னான். குரல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டாள் மாலினி. மாலினி ஐயர். விக்ரம் உற்சாகமில்லாமல் இருப்பது போல் தோன்றியது. அவளும் அப்படி தானே இருக்கிறாள். உற்சாகம் தொலைந்து பல நாட்களாகி விட்டது. இது இன்னுமொரு நாள். அவ்வளவே. “வணக்கம். இது மாலினி ஐயர். தற்போதைய முக்கிய செய்திகள்…..” இன்னும் எத்தனை நாள் இந்த தொலைக்காட்சியில் இருக்கப்போகிறோமென நினைத்துக்கொண்டாள். வேலைக்கு வர வெறுப்பாய் இருந்தது.


நண்பனின் திருமணம்

 

 கார் வந்துவிட்டது. ஐந்து மணி நேரத்திற்கு வாடகை பேசப்பட்டிருக்கிறது. முன் ஸீட்டில் நான் அமர்ந்துகொண்டு ஜானுவை வாங்கி மடியில் வைத்துக்கொண்டேன். பின் ஸீட்டில் அம்மா, பெரியக்கா, சின்னக்கா மடியில் குழந்தையுடன் அமர்ந்துகொண்டனர். மழை தூறிக்கொண்டிருந்தது. ‘கிஃப்ட் எடுத்துக்கிட்டாச்சா?’ மீண்டும் ஒரு முறை கேட்டுத் தெரிந்துகொண்டேன். மணி ஏழாகியிருந்தது. எப்படியும் திரும்பி வர பத்து மணியாகிவிடும். சொந்த ஊரிலிருந்து நிறைய பேர் வந்திருப்பார்கள். அத்தனை பேரிடமும் பேசிவிட்டுக் கிளம்ப நேரமாகி விடும். இன்று ராமுக்கு திருமணம். வண்டி புறப்பட்டு


நியுட்டனின் மூன்றாம் விதி

 

 “வியாக்கிழம அதுவுமா என்ன எழவு இது” என்று கடுப்படைந்த அண்ணாச்சி, வியாக்கிழமைக்கும் இழவுக்கும் சம்மந்தம் இல்லை என்று உணர்ந்தவராக, இன்னும் கடுப்படைந்தார். காலில் மாட்டியிருந்த பழைய தோல் செருப்பை வீசி எறிந்த வேகத்தில் அது தூரப்போய் விழுந்தது. நேற்று மாலை இன்னுமொரு மேல்தையல் போட வேண்டியிருந்து மறந்தது, இன்னும் காரம் ஏற்றியது. காற்றில் படபடத்துக்கொண்டிருந்த ஆஃபீஸ் வாசல் திரையை விலக்கி உள்ளே போய் கைப்பையை மேஜை மேலே வீசி எறிந்தார். வேலு “என்னங்க அண்ணாச்சி” என்பது போல


நிற்பதுவே நடப்பதுவே

 

 மாடிப்படி இருளில் மூழ்கியிருந்தது. தட்டுத் தடுமாறி குத்துமதிப்பாக நடந்து விக்ரம் அபார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றேன். பின்பு தான் மொபைல் ஞாபகம் வந்தது. அதை எடுத்து, அதன் சின்னப் புன்னகையில் காலிங் பெல்லை தேடி அடித்தேன். மணி இரண்டே முக்கால். அதிகாலை. எதிர் ஃப்ளாட்டை திரும்பி பார்த்துக் கொண்டேன். சத்தம் கேட்டு வந்துவிடக் கூடாது. அதிகாலையில் அநாவசியமாக தூக்கம் கலைப்பது மகா பாவம். மொபைல் எடுத்து விக்ரமின் நம்பரை அழைத்தேன். பதிலே காணோம். படுபாவி, இப்படி படுத்துகிறான்.


நீ

 

 நீ என்னை விட உயரம் சற்று குறைவு. கப்பல் தரை தட்டுவது போல என் கண்கள் உன் உச்சந்தலை தட்டும். நேருக்கு நேர் நின்று பேசுகையில் என் கண்கள் சில சமயங்களில் உன் நெற்றி வகிடில் வாகனமாக தறிகெட்டு ஓடத் துவங்கும். அங்குமிங்கும் பார்வையை அலையவிட்டபடி பேசுகிற வழக்கம் கொண்ட நீ, சடாரென நிமிரும் போதெல்லாம் காதல் விபத்தொன்று நிகழ்ந்தென்னை தடுமாறச் செய்யும். துவக்கத்திலே ‘ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் நீ?’ என்ற கேள்வி உன் பார்வையில்