கதையாசிரியர் தொகுப்பு: அன்னோஜன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அவர்களும் வந்திருந்தார்கள்

 

 செமஸ்டர் லீவுக்கு பஸ்ஸில் அசொளகரியத்துடன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன். பயண களைப்பு அவஸ்தைகயாக இருந்தது. கண்டிவீதியில் என் வீடு இருந்ததால் சரியாக வீட்டுக்கு முன் “பஹினவா பஹினவா” என்று கத்தி இடித்து தள்ளி இறங்கி விட்டேன். டிஜிட்டல் கடிகாரம் ஏறக்குறைய 5.33 ஏம் காட்டியது. கேட்டை தொடவே பேர்டிக்கோவில் படுத்திருந்த ஜூட் மிதமிஞ்சிய கடமை உணர்வுடன் “லொள்…” என்று குரைத்தது. தூக்க கலக்கத்துடன் என்னை அடையாளம் கண்டு காது இரண்டையும் தாழ்த்தி சமர்த்தாக வாலை ஆட்டி “ஊவவ்வ்வ்வ்..”என்று


சிகப்புமழை

 

 அந்த விநோதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. பதறியடித்து ஓடினார்கள். ஜன்னலில் நின்று ‘ஆ’ என்று பார்த்தார்கள்.மழை பெய்தது வழமை போல் அல்ல சிவப்பாக…..! காலையில் ஆறு முப்பதற்கு பெய்த மழை இன்னும் முடியவில்லை. கரும் சிவப்பாக ரத்தம் நிறத்தில் வடிந்தது. ஏறக்குறைய நாட்டின் முழுபாகத்திலும் ஒரே நேரத்தில் அடித்து ஊத்தியது. வீதி நடுவில் மாட்டிக்கொண்டவர்கள் கடைகளில் ஒதுங்கி நடுங்கினர். புகைத்த சிகரட்டுகள் பாதியில் நின்றன. மழையில் நனைந்தவர்கள் மழை நீரை துடைக்க சிகப்பு நிறத்தில் மா மாதிரி விநோதமாக


வாரிசு

 

 கிருஷ்ணகுமாருக்கு அந்த இச்சை தானாக தோன்றியது. அடுக்கடி அவள் சிரிக்கும்போதும் மார்பு புடவையை சரி செய்யும் போதும் அவளின் பார்வைகள் மெலிதாக திரும்பி இவர் மேல் விழும்போதும் போதும் இம்சைப்படுத்தியது. கிருஷ்ணகுமாரின் செக்ரட்ரி ராகவி,அவளின் பெண்மையில் தானாகவே சிக்கினார். எக்ஸ்போர்ட் கம்பெனியில் டிரக்டர் ஆக இருக்கிறார். இந்த மார்ச் உடன் நாற்பத்தியொன்று முழுமையாக கரையேறுகிறது. அவசர சுவாரசியத்தில் தொழிலில் சேர்ந்து,இளமை உற்சாகத்தை இழந்து இயந்திர வாழ்க்கையில் மையமாக சுழன்று,படிப்படியாக எட்டிப்பிடித்து இந்த நிலைக்கு வந்தார். திருமணமான புதிதில்