கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 20, 2026
பார்வையிட்டோர்: 172 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மறுநாள் காலையில் ராஜவேலு ஆபிற்குள் நுழைந்ததும் “குமரேசன் சார் உங்களை பார்க்கணுமாம்” என்றால் டைப்பிஸ்ட் லதா.

“சரி” என்றவாறு குமரேசன் அறைக்குள் நுழைந்தான் ராஜவேலு. 

“குமரேசன் என்ன விஷயம்?” என்றவாறு குமரேசனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான் ராஜவேலு.  

“மடையா! அந்த முகம் மாறாத இல்லை என்னவோ “மாறாத மணங்கள்”  சிறுகதையை செலக்ட் பண்ணாதே என்று சொன்னேனே கேட்டாயா?”என்றான் குமரேசன், 

“என்ன! நம்ம பொன்னையன் கோபப்பட்டாரா? நான் போட்ட பிளான் நல்லா வேலை செய்யுது”

“வேலை செய்யும். மனிதன் மூஞ்சிலே எள்ளும் கொள்ளும் வெடிக்குது. போய் என்னன்னு கேள்” என்றான் குமரேசன். 

“குட்மார்னிங் சார்” என்றான் ராஜவேலு. 

“குட்மார்னிங். இந்த  “மாறாத மணங்கள்” கதையை செலக்ட் பண்ணியது நீ தானே?” என்று கேட்டார் கோபத்துடன். 

“ஆமாம் சார்”

“நம்முடைய பத்திரிகையில் காதல் தோல்வி அடைகிற மாதிரி கதையை எப்போதும் பிரசுரிக்க கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்” 

“சார், உண்மையிலே உங்களுக்கு காதல் தோல்வி என்றால் பிடிக்காதா?” 

“ம்கூம். அறவே பிடிக்காது. காதல் கதை என்றால் அது எப்போதும் காதலர்கள் சேர்வதாகத்தான் முடிய வேண்டும்” 

 “உண்மையிலே தானா  சார்?” 

“ஏம்பா அப்படி கேட்கிறாய்?” 

“இல்லை மாமா, நான் உங்க மகள் இந்துவை லவ் பண்ணுகிறேன். நாங்கள் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி வாழ ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா” என்றவாறு பொன்னையன் காலில் விழுந்தான் ராஜவேலு. 

அதைக் கேட்ட பத்திரிகை ஆசிரியர் பொன்னையனுக்கு மயக்கம் வந்து உலகமே சுற்ற ஆரம்பித்தது. 

– 21.4.1996

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *