நம் நடைமுறை
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 185
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ராபர்ட் இங்கர்சால் என்ற நாடறிந்த நாத்திகன் கிறிஸ்தவர்களைக் குறைகூறி பல நூல்களை எழுதினான். தான் எழுதிய நாத்திகப் புத்தகமொன்றை தெய்வ பக்தியுள்ள தன் அத்தைக்கு அனுப்பினான். அந்நூலின் முதல் பக்கத்தில் பின்வருமாறு எழுதி இருந்தான். “கிறிஸ்தவர்கள் எல்லோரும் என் அத்தை சாராளைப் போல் வாழ்ந்தால் இந்தப்புத்தகம் எழுதப்பட்டிருக்க மாட்டாது”.
இதை வாசிக்கிறவர்கள் இங்கர்சாலின் கையெழுத் தைச் சிந்திக்கட்டும்.
பொது உடைமைத் தத்துவத்தைத் தோற்றுவித்த லர் காரல்மாக்ஸ். ‘சமூகச் சொத்துக்கள் சகலருக்கும் பொது: சக்திக்குத் தகுந்த உழைப்பு. தேவைக்குத் தகுந்த சம்பளம்’ என்ற தத்துவங்களை உள்ளடக்கிப் பல நூற்கள் எழுதியுள்ளார்.
அவரது நூற்களைப் படித்த சோல்ஜர் ஒருவன் ஒரு குருவிடம் வந்து ‘வெறியூட்டும் மதம் மக்களைக் கெடுக்கிறது’ என்றான்.
‘நீ நாத்திகனா?’ என்று கேட்டார் பாதிரியார்.
‘மதம் என்ற குப்பையைக் குழிதோண்டிப்புதைக்க வேண்டும்’ என்றான் பதிலுக்கு.
பாதிரியார் அமைதியாகப் பேசினார்.
“தம்பி நீ மார்க்ஸ் எழுதிய நூல்களைப் படித்திருக் கிறாய். இந்த மாற்கு சுவிசேஷத்தையும் படித்துப் பாரேன்” என்று சொல்லிக்கொடுத்தார்.
ஒருவாரம் கழித்துவந்த அந்தப் போர்வீரன் சொன்னான்.
“சுட்ட செங்கல் தண்ணீரை ஜில்என்று இழுப்பது போல, மாற்கு நற்செய்தி நூல் என் உள்ளத்தை இழுத்தது. இயேசு சொன்ன சமுதாயம் தோன்ற மார்க்ஸின் நடைமுறை வேண்டும்” என்றான்.
“என் சத்துரு என் மேல் ஜெயங்கொள்ளாததினால் நீர் என் மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்’” [சங்கீதம் 41:11]
‘”சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது” [அப்போஸ்தலர் 4:32]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
