முதல் கிறிஸ்மஸ் மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 164 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிறிஸ்மஸ் மகிழ்ச்சி பலவிதம். அவைகளில் ஒன்று றிஸ்மஸ் விருட்ச விழா.

கிறிஸ்மஸ் நாளன்று இரவு மார்ட்டின் லூத்தர் ஒரு பெரிய காடடர்ந்த மலையைக் கடந்து போக வேண்டியிருந்தது.

நட்சத்திரங்கள் அலங்காரமான ஆபரணங்கள் பான்று ஜொலித்தன. சிறுபாதையின் இருமருங்கும் வானத்தை அளாவிய வனப்பு மிகு மரங்கள். அவை களினூடே நட்சத்திரங்களைப் பார்த்தபோது விவரிக்க முடியாத வனப்புக்காட்சி! லூத்தர் வெகுவாக ரஸித்து மகிழ்ந்தார்.

இல்லம் ஏகியதும் தாம் கண்ட காட்சியை மனைவி மக்களிடம் சொல்லி மகிழ்ந்தார். வெறும் வார்த்தைகளில் பயனில்லை. தாம் அனுபவித்த இன்பக் காட்சியை அவர்களும் காணச்செய்யத் துடித்தார்.

ஆகவே, காட்டிற்கு விரைந்தார். பெரிய மரக் கிளை ஒன்றை வெட்டிவந்து நாட்டினார். ஏராளமான மெழுகுவர்த்தித் துண்டுகளைக் கொளுத்தி அம்மரக் கிளைகளில் ஆங்காங்கு பொருத்தினார்.

மரக்கிளைகள் மின்னி ஒளிர்ந்தன.

மக்கள் யாவரும் கண்டு மகிழ்ந்தனர்.

இவ்வாறு ஜெர்மானிய நாட்டில் முதல் கிறிஸ்மஸ் மரத்தைக் கண்டு பிடித்தவர் மார்ட்டின் லுத்தர் ஆவார்.

பின்பு இவ்வழக்கம் உலகமெங்கும் பரவியது.

“இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.” (ஏசாயா 9:2)

“அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.” (மத்தேயு 2:10)

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *