துதிக்கும் பாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 337 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வட ஆப்பிரிக்காவில்-சில கிறிஸ்தவ வீடுகளில் துதிக்கத் தனி அறை கிடையாதாம். ஆகையால் பக்கத்திலுள்ள காட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி இடமும் பாதையும் உண்டாம்.

இடைவிடாது ஜெபம் செய்ய நடந்து நடந்து பாதை நல்ல நடைபாதையாகி விடுகிறது. யாராவது தங்கள் நடைபாதையில் நடக்காவிட்டால் பாதையில் புல் முளைத்துவிடும்.

அப்பொழுது மற்றவர்கள் அவனையோ அவளையோ பார்த்து, ‘என்ன?… உன் பாதையில் புல் முளைத்து விட்டதே’ என்று கேலியாகச் சொல்வார்களாம்.

உங்கள் ஜெபவாழ்க்கை எவ்வாறுள்ளது? அநேகர் அந்தி, சந்தி, மத்தியானம் மூன்று வேளைகளில் மட்டும் ஜெபித்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். இரு வேளை மட்டும் வேண்டினால் போதும என்ற மனப் பான்மை மட்டும் உள்ளவர்களும் உண்டு.

நமது ஜெபிக்கும் பாதை புல் முளைக்காமல- வேண்டுதல் ஊற்று தூர்ந்துபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

“துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்” [சங்கீதம் 18:3]

“சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபம் செய்யுங்கள்.” [மத்தேயு 26:41]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *