அன்புமிக்க அரசன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 7,890 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(கதைப்பாடல் – பழைய கதை புதிய பாடல்)

அன்று ஒருநாள் காலையில்
அமைச்சரோடு அரனும்
சென்று நாட்டார் நிலைமையை
கண்டு வரச் சென்றனன்.

சென்று திரும்பும் போதவன்
சிவந்த பாதம் தன்னிலே
நன்கு வளர்ந்த நெருஞ்சிமுள்
நறுக்கென்றே தைத்ததாம்.

மன்னன் காலில் பெருவலி!
மனது நொந்தான் அமைச்சனும்!
துடித்த மன்னன் மக்களும்
துடிப்பர் தானே இப்படி?!

மக்கள் நடக்கும் வழியெல்லாம்
மெத்தை போல இருக்கவே
ஆட்டுத் தோலில் பாதையை
அமைக்க ஆணை இட்டனன்.

மன்னன் உரையைக் கேட்டதும்
மனது நொந்த மந்திரி
“அன்பு மிக்க அரசரே!
‘ஆணை மாற்ற வேண்டும்நீர்!”
சொன்ன உமது ஆணைபோல்
செய்வதென்றால் எத்தனை

ஆயிரமாம் ஆடுகள்
அழிக்க வேண்டும் எண்ணிப்பார்!
பாதை தன்னைத் திருத்திட
பாதை எங்கும் அல்லநாம்

பாதத்துக்கோர் காலணி
பஞ்சு போலச் செய்திடின்
“ஆடும் அழிவதில்லை நும்..
அல்லல் தீரும் அல்லவோ?”

என்று எடுத்துச் சொன்னதும்
ஏற்றுக் கொண்டான் மன்னனும்
‘நன்று சொன்னீர் மந்திரி!’
நல்ல வேளை தவறலை!

ஊரைத் திருத்தும் முன்னர்நம்
உள்ளம் திருந்தல் நல்லது!
என்னும் கருத்தை எடுத்துமே
எனக்குச் சொன்னீர் வாழ்க!ண்நீ!

என்று அவரை வாழ்த்தினான்.
‘நாட்டைத் திருத்தல் கடினமாம்
நம்மைத் திருத்தல் எளியது!’
என்ற நீதி ஏற்போம்நாம்!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *