காற்றில் கலந்த ரோஜா மணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 111 
 
 

(சிறுவர் சார்ந்த வெப் தொடருக்காக சமர்ப்பிக்கப்பட்ட கதையின் சுருக்கம் (synopsis))

ரமேஷ்ராஜ், தூக்கி விடுவோர் யாரும் இல்லாமல் செல்ப் மேட் ஆக இளைஞனாக இருக்கும்போதே சாதித்த தொழில் முனைவர். .நடுத்தர வயதை அடையும் நிலையில் பல்வேறு தொழில் வர்த்தகங்களில் வெற்றிக் கொடி நாட்டி வர்த்தக உலகில் முக்கிய புள்ளி என்று பெயர் எடுத்து விட்டார். அவரது மனைவி ஆஷா. இவரகளின் ஒரே மகன் பதின்பருவத்து சிறுவன் பரத். ஆஷாவின் தம்பி இளைஞன் ராஜேஷ் .

ராஜேஷ் கிடைத்தற்கரிய வாழ்க்கையையும் நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து மைத்துனர் ராஜேஷிடம் ரமேஷ்ராஜ் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அவன் வீட்டுக்கு வந்தால் இவர் வேறு அறைக்குப் போய் விடுவார்.

அப்பாவின் இந்தப் போக்கு பரத்துக்குப் பிடிக்கவில்லை. “மாமா ராஜேஷிடம் நீ நடந்து கொள்வது சரியில்லை. மாமா அளவுக்கு உனக்கு நாலெட்ஜ் உண்டா\” என்று பரத் அப்பாவிடம் சண்டை போடுகிறான். ஒரு நாள் இது போல் மகனுக்கும் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றும் போது ரமேஷ்ராஜ் சொல்கிறார் – “என்னோட பல பிசினஸ்ல நான் ஆரம்பிச்ச மீடியா ரோஜா எப் எம் ரேடியோ தான் சரியா போகலை … அதனோட லிசனர்ஷிப்ப அதிகரிச்சுக் காட்ட சொல்லு அப்புறம் ஒங்க மாமா புத்திசாலி கெட்டிக்காரன்னு ஒத்துக்கறேன். நான் அவனைப் பத்தி நெனச்சது தப்புன்னு சாரி கேட்கறேன்.”

பரத் “மாமா இந்த சவாலை ஏத்துகிட்டு நடத்திக் காட்டும் பாருப்பா” என்கிறான். அவனுடைய அம்மா ஆஷா புன்னகை பூக்கிறாள். இந்த உரையாடலின் போது அங்கிருந்த ராஜேஷ் ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விடுகிறான்.

சில நாட்கள் கழித்து திருச்சிராப்பள்ளி அருகே ஸ்ரீரங்கத்தில் பெருமாளை தரிசிக்க வந்த ஆந்திரப் பிரதேசத்தின் இளம் பெண் எம்எல்ஏ கடத்தப்படுகிறார். கடத்தல் செய்த கும்பல் , கைபேசி , சமூக வலை தளம் மூலம் செய்தி சொல்லாமல் ரோஜா எப்எம் -க்கு பப்ளிக் போனிலிருந்து தகவல் சொல்கிறார்கள் . இதனால் சமூக வலைதளம் , தமிழ் தொலைக்காட்சி , தேசிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் கடத்தல் நியுஸ் சொல்லும் போது ரோஜா எப் எம் பற்றியும் சொல்கிறார்கள். எப்எம் கேட்பவர்கள் , புதிதாக ரேடியா கேட்பவர்கள் எல்லாம் இந்த பரபரப்பு குறித்து அறிவதற்கும் பாடல் கேட்பதற்கும் ரோஜா எப் எம் கேட்க முற்படுகிறார்கள் .

கடத்தல் குழு , இந்த பிரச்சினை முடியும் வரை , ரமேஷ் ராஜே , ஆர்ஜே ஆக உட்கார வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. அதனால் அவரும் பல்வேறு ஊடகங்களின் லைம் லைட்டுக்கு வந்து விடுகிறார்.

கடத்தல் குழுவின் தலைவன் அப்பு , தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரட்டை எழுத்தாளர்கள் வினு -விஷ்ணுவை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைக்கிறான். . அவர்களுடன் ரோஜா எப் எம் ஊழியர் தவிர மற்ற காட்சி , அச்சு ஊடகங்கள் , காவல் துறை வரக் கூடாது என்று நிபந்தனை விதி்க்கிறார்கள் . மாவட்ட நிர்வாகம் , இரட்டை எழுத்தாளர்களை கடத்தல்காரர்கள் கூறும் இடத்துக்குச் சென்று எம்எல்ஏவை மீட்டு வர அனுமதிக்கிறது.

இது குறித்த அப்டேட் ரோஜா எப் எம் – ல் மட்டுமே அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வினுவும் விஷ்ணுவும் கடலூர் அருகில் நெல்லிக்குப்பத்தில் ஒரு

பாழடைந்த மாளிகையில் வைக்கப்படிருந்த இளம் பெண் எம்எல்ஏ ஷீலாவை மீட்டுக் கொண்டு வருகிறார்கள் .

இது ரோஜா எப் எம் புரோமஷனுக்கான வேலை என்பதை இரட்டை எழுத்தாளர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

சென்னையில் ரோஜா எப் எம் அலுவலகத்தில் குவிந்திருந்த மீடியா மைக்குகளின் முன்னால் ரமேஷ் ராஜ் , ஷீலா , வினு ,விஷ்ணு ஆகியோர் நிற்கிறார்கள் . ரமேஷ்ராஜ் உடன் அவரது மகன் பரத்தும் நிற்கிறான். சற்று தள்ளி நின்று கொண்டிருந்த ராஜேஷைப் பார்த்து ஷீலா புன்னகை பூக்கிறாள். ( அவள் ராஜேஷின் காதலி )

அவர்கள் ஒவ்வொருவராக பேட்டி கொடுக்கிறார்கள். வினு பேசும் போது , பரத் , “ அசோக் பில்லர் மாதிரி இங்க நிக்கற எங்க மாமா ராஜேஷுக்கு யாருமே தேங்க்ஸ் சொல்ல மாட்டிங்கறிங்களே ” என்றான்.

வினு ,”என்ன என்ன சொல்றாரு இந்த சிறுவன் ” கேட்கிறார்.

ராஜேஷ் , “ஒண்ணும் இல்ல நீங்க கன்ட்னியு பண்ணுங்க அவங்க வெயிட் பண்றாங்க ” என்று சொல்லி பரத்தை தன் பக்கம் இழுத்து வைத்துக் கொள்கிறான். பரத் , மாமாவின் பிடியிலிருந்தபடியே அப்பா ரமேஷ்ராஜைப் பார்க்கிறான்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *