ஒரு பாட்டிசைக் கலைஞனின் பதியொளி தரிசனம்

சுத்தவெளியில் மனம் ஒளிர, துலங்குதே ஒரு வானம். கனிமொழிக்கு அன்று அந்த இளம் பாடகனைப் பார்க்கும் போது, அப்படித் தான் எண்ணத் தோன்றியது . முன்பு ஏழாலை கிராமத்து மண்ணின் சுவடு குளித்து எழும்போதெல்லாம் மனம் சமநிலைக்கு வர மறுக்கிற எவ்வளவோ கசப்பான அனுபவங்கள் அவற்றை விரிவு படுத்தி எழுத முயன்றால்,காலம் அதன் கணக்கைக் கடந்து விடும் அதுவும் ஒரு காலச் சுழற்சி தான் ஏழாலையில் அவள் வாழ்ந்து களிக்கவில்லை வாழ்ந்து கெட்டாள் என்பதே நிஜம்.
அங்கெல்லாம் ஒரு இருள் கனத்த யுகம் அவளுக்கு. சூரியன் எப்பவும் அஸ்தமன சூரியன் தான் ஏன் அஸ்தமித்தது என்று கேட்டால், கர்மாவே பதிலாக வரும்.
கனி மொழிக்கு அதை நினைக்க சிரிப்புத் தான் வரும், அவள் முகம் எப்படியிருக்கிறதோ தெரியவில்லை. அவள் புருஷன் பானு என்கிற பானுகோபனுக்கு அவளைக் கண்டால் ஆகாது ஏதோ காசு தேவைக்காக கடைசியில் மிஞ்சியிருந்த தாலிக் கொடியைக் கழன்றித் தருமாறு ஒரு முறை அவன் கேட்ட போது தயங்கினாள் அவள் அதற்கு அவன் குரல் படபடத்து சொன்னான் உன்ரை வாழைக்காய் மூஞ்சிக்கு ஒன்றும் விடியாது, அதை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் .அவள் நெஞ்சு வலித்தது ஓர் உண்மையை உரத்துக் கேட்க வேண்டும் போல் தோன்றியது எனினும் கேட்கவிடாமல் ஒரு தார்மீக சிந்தனையின் விழிப்புணர்வால் மெளனதேவதையாக அவள் வீற்றிருக்கும் காட்சி, அவனுக்கு பழகிப் போன ஒன்று தான் அவனுக்கு ஒழுக்க வாழ்க்கையை நிர்ணயிக்கும் சத்திய இருப்பு என்பதே மறு துருவம் தான்.. நீதி நியாயம் பற்றி விளக்கிக் கூறினாலும் புரிந்து கொள்ள, முடியாத அளவுக்கு மந்த புத்தி கொண்ட, அவன் முன் வாய் திறந்து உண்மையைக் கூறுவதே வீண் என்று அவள் நம்பினாள். எனினும் அவன் என்ன செய்தாலும் பொறுத்துப் போகிற பூமா தேவி போன்றவள் அவள்.
இந்த விதி வகுத்த பாதையில் நடந்து வந்து கனத்த, ஒரு யுகமே, முடிகிறது அதற்குள் ஏற்பட்ட சவால் மிகுந்த வாழ்க்கையில் சுயாதீனமாக சிந்திக்கத் தெரிந்த பூரணமான, குறையற்ற, வேத இருப்பு ஒன்றே, அவள் வசமானது . இப்போது அவனுமில்லை அவனோடு கூடி வாழ்ந்ததன், பயனாக ஒரேயொரு மகள் மட்டும் தான் ரமணி என்று அவளுக்கு பெயர். கனிமொழிக்கு ஆன்மீக ஞானம் இயல்பாக வரும் , ஞானிகளை மிகவும் பிடிக்ம் அதிலும் ரமண மகிரிஷியின் மிகத் தீவிரமான, பக்தை அவள், அவள் ரமணி வெளிநாடு எங்கும் போகாமல் உயர் அரச பதவியிலிருக்கும் ஒருவனை மணமுடித்துக் கொண்டு கொழும்பிலேயே சொந்தமாக பிளாட் வாங்கி குடியிருக்கிறாள், கனிமொழி ஊரோடு வாழ்ந்து மடிய விரும்பினாலும் ரமணி விடவில்லை. அதுவும் வேலைக்கு போய் வருவதால் அம்மாவின் துணை அவளுக்கு அவசியமாகிறது. குழந்தை ஒன்று இருப்பதால், அதையும் பார்த்துக் கொள்ள வேண்டும் இது தவிர சமையலுக்கும் உதவியாக,இருக்கும் என்ன பெரிய சமையல், எல்லாம் மரக்கறி சாப்பாடுதான் அதிலும் சுத்தசைவம் நல்ல வேளை ரமணியும் கணவனும் அப்படியே தான் வாய்த்தான் ஓய்வு நேரங்களில் கனிமொழி, டிவி பார்ப்பாள் நாடகங்கள் பார்ப்பதைதவிர்த்தே ஏனைய நிகழ்ச்சிகளைஅவள் மிகவும் ஆர்வத்தோடு பார்ப்பாள். அதிலும் செய்திகளை தவறாமல், பார்ப்பாள்.
அன்று அப்படித்தான், அதை பார்த்துக் கொண்டிருக்கும் போது, மிக முக்கியமான ஒரு செய்தி அவள் கவனத்தை ஈர்த்தது. அதுவும் இசைகுறித்த ஒரு செய்தி. நல்ல சினிமாபாடல்களை அவள் விரும்பிக் கேட்பாள். எவர் பாடினாலும் ஆள் முக்கியமல்ல நல்ல பாட்டுத் தான் கேட்க வேண்டும் . அப்படி பாடக் கூடிய ஒருவனைப் பற்றிய செய்தி ஒன்றையே அவள் கேட்க நேர்ந்தது.
ஆம் அவன் பெயர் மதுராந்தகன் அவளுக்குத் தெரிந்த ஓரு உறவுக்காரப் பையன். ஊரிலிருக்கும்போது, சிறுபையனாக அந்த மதுராவை அவள் பார்த்திருக்கிறாள், அவன் அப்போது படித்துக் கொண்டிருந்தான்படிப்பை விடஅவன் கனவுகளெல்லாம் இசைத் துறை சார்ந்தே, இருந்தன அதை மெய்ப்பிப்பது போலவே, அவனது வாழ்வியல் நடவடிக்கைகளும் இருந்தன படிப்பிலும் அவன் மகா மேதை தான் . யாழ்ப்பாணத்திலுள்ள. பல்கலைக்கழகத்தில் இப்போது அவன் விரிவுரையாளனாக மட்டுமல்ல ஒரு சிறந்த மேடைப் பாடகனுன் கூட அவன் தனியாக இசைக்குழு வேறு வைத்திருக்கிறானாம் அவனைப் பற்றிய தலைப்புச் செய்தியே இன்றைய புதினமாக வந்தது டிவியில் அன்று மாலைகொழும்பு தமிழ்சங்கத்தில் அவன் தன் இசைக் குழுவோடு வந்து பாட இருப்பதாக அறிந்த, போது, கனிமொழிக்கு அதைக் கேட்க வேண்டும் போல் ஒரு நினைவு வந்தது . அதுவும் அன்று ஞாயிற்றுக் கிழமை லீவானபடியால், ரமணியோடு வேறு போகலாம் மருமகன் நினைத்தால், காரிலேயே கொண்டு போய் விடுவார்.
எதிரே வந்து நிற்பது போல் தோன்றவே சொர்க்கம் பிரகாசமாகி ரமணியிடம் அவள் கேட்டாள்.
பிள்ளை! இண்டைக்கு தமிழ்சங்கத்திலை மதுராவின் பாட்டுக் கச்சேரியாம், போக விருப்பமாயிருக்கு நீயும் வாறியே?
எந்த மதுராவை சொல்லுறியள்?
என்ன தெரியாதமாதிரி கேக்கிறாய்? உன்னோடு படிச்ச மதுராந்தகனைத் தெரியாதே?
அந்த சாந்தியின் மகனைச் சொல்லுறியளோ? எனக்கு அவனை நல்லாய் தெரியும் உதுசரிப்பட்டு வராது அவன் பிறப்பை நினைச்சால், வயித்தைக் குமட்டுது அங்கை போய் அவன் முகத்திலை விழிச்சால், தீட்டுக் குளிச்ச மாதிரி ஆகி விடும் என்னையும் அதுக்கு இழுக்கிறது இன்னும் அசிங்கம். நான் வரேலை . நீங்களும் போக வேண்டாம் .
ஓ! உனக்கும் அந்தக் கதை தெரிஞ்சு போச்சா?
தெரியாமல் விடுமே? ஊரிலே நடந்த அசிங்கம் உவன்ரை அம்மம்மா பெரிய பணக்காரியாம் ஒன்றுக்கு பத்து வேலைக்காரர்களை வைச்சதாலை வந்த வினை ஒரு வேலைக்காரனோடு கூடி அவ பெத்த பிள்ளை தான் இந்த சாந்தி அதாவது மதுராவின் அம்மா. அப்ப அவன் ஆர் ? சொல்லுங்கோவம்மா. கேக்கிறனம்மா சொல்லுங்கோ.
பேசிப்பேசியேஅவளுக்கு மூச்சு வாங்கியது திடீரென்று அந்த மூச்சு நின்று போனால், என்னவாகும் ? அவள் வெறும் பிணம் தான் அப்படியிருக்க இந்தப் பிணம் தின்னியள் பேசுகிர பேச்சும் அடிக்கிற கூத்தும் ஈசுவர சாபமாகவல்ல முடியப் போகுது. இதைஅறிய, வெறும் அறிவு போதாதுஆன்மீக ஞானமில்லாமல் நடை சரிந்தால் இதுக்கு ஆர் பொறுப்பு? இவற்றையெல்லாம் நினைத்து கிரகித்து ஒன்றும் பேசத் தோன்றாமல், வாயைப் பொத்திக் கொண்டு அழவேண்டும் போல், தோன்றியது கண்ணை வேறு இருட்டிற்று எனினும் மனதை தேற்றிக் கொண்டு அவள் சொன்னாள்.
ரமணி எல்லாம் என்ரை வளர்ப்பிலை தான் பிழை. உன்னை நோக நான் ஆர்? எனினும் என்னைப் போக விடு என்றாள் ஆற்றாமையுடன்,
சரியம்மா! உங்கள் இஷ்டம் இவர் காரிலேயே நீங்கள் போய் வரலாம்.
எதுக்கு வீண் சிரமம் ? நான் பஸ்ஸிலெயே, போய் வாறன்.
வெள்ளவத்தையிலுள்ள. தமிழ் சங்கத்தின் சங்கரப் பிள்ளை ஹோலில்தான் மதுராவின் இசை தொடங்க இருந்தது. தொடங்கி விட்டது திரை விலக, உதய சூரியன் போல் மதுரா தோன்றினான் பலத்த கரகோஷத்துடன் அவன் பேசத் தொடங்கும் போது, கனிமொழி முன் வரிசையில் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கொஞ்சம் கறுப்புத் தானென்றாலும் கலையில் உயிர்த்து வாழ்கிற, கம்பீரக் களையுடன் வசீகரமான அவனின் ஆண்மையழகுக்கு முன்னால், அவனின் பிறவிச் சாபம் பெற்றவள் அழுக்கு அவன் மீது துளி கூட படராமல் மரை பொருளாகவே, மறைந்து போயிருப்பதைக் கண்டு அவளுக்கு கண்களில் நீர் கொட்டிற்று, அப்போது அவள் நினைத்தாள் . ரமணிக்குத் தெரிந்த கதை காற்றில் பறந்தால், இவன் கதி என்ன? உண்மையில் பாவப்பட்ட மனிதர்களுக்கு வேறு என்ன தெரியும்? சரி அதை விடுவம் நானே அவர்கல் போலாகி இவன் முன் போய் நின்று உண்மையைகக்கினால், என்ன நடக்கும் ? இதை விஷமாகவே மாறி இவனும் அழிஞ்சு போனால் ஆருக்கு நட்டம் ?நான் இப்படி அழிக்கிறசாத்தானல்ல, கடவுள் மாதிரி இருப்பு மகனே தூசு கூடபடாமல், உன்னை நான் தழுவிக் கொள்கிறேன் என்று தனக்குள் சங்கற்பம் எடுத்துக்கொள்வது போல், அவள் முனகுவதை நல்ல வேளை ரமணி கேட்கவில்லை கேட்டிருந்தால், சம்ஹாரம் தான் இப்படி தீப்பற்றி எரிகிற உலகின் முன் அன்பு வேண்டி கண்களை மூடியே தவம் செய்கிற அவள் இருப்புக்கு முன்னால் உலகமென்ன மனிதர்கள்கூட வெறும் கனவாகவே பட்டது கடவுளையே கண்ட மகிழ்ச்சியில் அவள் அவ்வாறே ஆகியிருந்தாள்.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |