கல்யாண வேள்வியில் ஒரு காட்சி பிழை

சுந்தரம் மாமியை இவ்வளவு ஆக்கோஷத்தோடு இதுநாள் வரை நான் கண்டதில்லை. அவளுக்கு அப்படியென்ன கோபம் யார் மீது? எல்லாம் எங்கள் வீட்டோடு தான். தன் அண்ணன் அதாவது ஆனந்த வாத்தியார் என்ற அவரின் குடும்பதை பார்த்தால்,பெரும் வயிற்றெரிச்சல் உச்ச கட்ட பெரும் கோபம். ஆடு மாடுகள் கணக்கில் அவர் பெற்றுப் போட்ட பிள்ளைச் சுமை முழுதும் தன் தலை மீது தான் என்ற தீராத கோபம் அவளுக்கு. இதற்கு முக்கிய காரணம் அவள் மலடி. இதற்காகவே அந்தக் வீட்டை குறி வைத்து குறிப்பாக அவ் வீட்டின் பெண் பிள்ளைகளை நோக்கி அவள் எறிகிற கணைகளால், அந்த வீடே அதிர்ந்து போயிருக்கிறது மனம் சாகாமல் என்ன செய்யும் ? அப்படியொரு சாவை நிகழ்த்துவதற்காகவே இன்றைய அவளின் வருகை எதிர்க் கோணத்தில் இந்த அப்பா அவர் குடும்பம் சொன்னதையே சொல்லும் கிளிப் பிள்ளையான அம்மா வேறு இன்று அவள் ஒரு கல்யாண புரோக்கராகவே அவதாரமெடுத்து வந்திருந்தாள். இதன் நோக்கம் எனது சின்னக்கா ரஞ்சனியை பலிக்கடாவாக்கவே. அவள் கொண்டு வந்த பையனின் சாதகம் வேறு அவள்கையில் தீட்டுபடிந்தது போல், மங்கி வெளுத்துக் கிடந்தது .
நான் தூர நின்று இதை ஒரு வேடிக்கை போல் பார்த்துக் கொண்டிருந்தேன் ஜமீந்தார் வீட்டுப் பையன் போல் அவன் அந்த காந்தன் அப்பாவின் வாரிசாக, ஓவசியர் பணி தொடங்கியிருப்பதாக கேள்வி. அப்படியென்றால், ரோடு போடுவதாகக் கணக்குக் காட்டி அரசாங்கத்திடம் கொள்ளை அடித்து ஊரிலே தலை நிமிர்ந்து வாழும் பெரும் பண முதலை அவன் அப்பா நாகரத்தினம் அவரின் மூத்த மகன் தான் இந்த காந்தன் வெள்ளை வெளேரென்று பால் வெண்மை அழகுடன் முடி தரிக்காத ஓர் இளம் இளவரசன் போல் அவன் அவனுக்கு ஏற்கெனவேசொந்தத்தில் மச்சாள் முறையுடன் கூடிய பெண் ஒருத்தி இருக்கிறாள் எனது அப்பாவின் சொந்தத் தம்பி மகள். உமா என்று பெயர் ஒரே மகளென்பதால், இங்கு சொந்தம் சறுக்கி விட காந்தனை விட மேலோனாய் உயர் பதவி வகிக்கும் ஒருவனையேஅவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடும் இல்லை அப்படித் தான் நடக்கிறதாம் இது இப்படியிருக்க காந்தனுக்கு அவளையே வலை வீசுவதாகக் கேள்வி. இதைத் தடுக்கவே, மாமியின் பிரசன்னம் உமா அவளின் தம்பி மகளல்லவா அண்ணனை விட அவன்மீதே அவளுக்கு அதீத பாசம் அதனால் இந்தப் பாராமுகம் பகல் வேஷம் குரலை உயர்த்தி அப்போது அவள் சொன்னாள்.
அண்ணை1 நீங்களும் களைச்சுப் போவியள். ஒன்று இரண்டே அடுக்கடுக்காய் நாலு பெட்டையளல்லே இப்ப ரஞ்சனிக்கு முதலிலை இதை பேசி முடிப்பம் சாதகமும் நல்லாய் பொருந்தியிருக்கு என்றாள். அதைக் கேட்டு அப்பா முகத்தில் ஈயாடவில்லை ஒரு மாப்பிளைக்காக கல்யாணச் சந்தைக்குபோய், நாயாய் அலைந்து களைப்பதை விட இது சுலபம் சாதகத்தை வாங்கிப் பார்த்து விட்டு முகம் சுழித்துஅவர் சொன்னார்.
அக்கா! எல்லாம் சரிதான் வயது எகிறுதேரஞ்சனி மூன்று மாதம், காந்தனை விடமூப்பல்லே!
இது ஒரு குறையே? மூடி மறைச்சால், கல்யாணம் தானே நடந்திட்டுப் போகுது. அதை விடுங்கோநான் அவையளிட்டை போய் சொல்லுறன் எல்லாம் சரி வரும்!
கல்யாணத்தை நடத்தி விட வேண்டியது தான் இக் கல்யாணம் குறித்து ரஞ்சனி மனதில் விதம் விதமான கற்பனை நிழல், சஞ்சார ஓட்டம் இது நிஜமாகுமா? வாழ்க்கை சிறக்குமா? தன் முன்னால், பூ மேடை போட்டு பஞ்சணை விரித்து படுத்து உறங்கவல்ல, உடல் ரீதியான ஆசை மோகம் தீர்க்க அந்த வெறியை அடக்க வரப் போகிறானே காந்தன் அப்போது தெரியும் வாழ்க்கை என்னவென்று. வசந்தம் வீசி வாழ்ந்து கழிக்க மேலிருந்து இறங்கி வந்தவன், ஒரு யுக புருஷனல்ல மாறாக என்ன நடந்தது? இருட்டில் ஒரு வாழ்க்கை குருட்டு நாடகம் அவள் கண்களின் ஒளியே பொய்த்து விட்டது போல நாளும் அவன் மட்டுமல்ல அவர்களுமே அவளை இருட்டில் தள்ளி கொன்று புதைத்தற்கு ஆதாரம் அவளின் குழந்தை இது போல் இன்னும் தொடரும் மழலை செல்வங்கள் இதையா கேட்டாள் அவள் காந்தன் விட்டிலிருந்து ஏதோ பெரிதாக நடந்து விட, அலறி அடித்துக் கொண்டு, தன் வீட்டை நோக்கி அவள் ஓடி வரும் போதுவழியில், மாமி எதிர்ப்பட்டாள். அவள் வரும் வழியிலே தான் மாமி வீடு இருந்தது/ மாமியை பார்த்து விட்டு எரிச்சலுடன்.
பார்த்துக் கொண்டிருங்கோ. உமா கப்பலேறி வருவாள். நாசமாய் போகட்டும் என்றாள். இது எங்கள் வீடு வரைக்கும் கேட்டது நான் அப்போது முற்றத்தில் நின்று கொண்டிருந்தேன் தலைக்கு மேலே, நிறைந்த வானமாய் ஒரு ஒளிஅது வானமல்ல முற்றத்து வேப்பமரம் அது நிறைய மஞ்சள் வர்ணத்தில் நிறைய பூக்கும் அது அம்மாவுக்கு ஆரவாரம் அதில் வடகம் போட்டு தின்கிற ஆசி அவளுக்கு மாமியும் வந்து அள்ளிக் கொண்டு போவாள் நன்றி மறந்த, கழுதை ரஞ்சனியை இப்படிக் கொலை செய்த பாவம் அவளை சும்மா விடாது . பாவிகள் தண்டனை பெறுவார்கள் என்பதற்கு சான்று பூர்வமான ஆதாரம் எதுவுமேயில்லாத போது இப்போது நிதர்ஸனமாக ரஞ்சனியின்சுய வெளிப்பாடு, ஆதங்கம் துக்கம் இதை நிவர்த்தி செய்வதற்காக அவள் இடும் சாபம் மாமி தலை மீது விடிய வேண்டுமே. நான் பொறுமையை இழந்தேன். அக் கரையில் அதோ இருளில் மங்கி வெறித்த சடலமாக, அக்காவைக் காண்கையிலபொங்கி வரும் அழுகைநதி நடுவே ஓர் உண்மை உயிரின் குரல் ஒரு வேத வாக்காக என்னுள் கேட்டது. உமாவை வாழ வைப்பதற்காக அக்காவை இப்படி சடமாக்கி விட்டாளே மாமி. உயிர்க்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லைஇப்படி தீமை செய்யாமல் விட்டிருந்தால், அக்கா தப்பி பிழைத்தது மட்டுமல்ல, நீதியும் பிழைத்திருக்கும் நீதிக்கு சாவு மணி அடித்து விட்டு அதில் கலங்காமல் மாமி மீண்டு எழுவது வாழ்கையில் புதிர்களில் ஒன்று தான் இந்தப் புதிர் புதை குழியாகவே இருக்கும் வரை சத்திய இருப்புக் கூட கேள்விக் குறி தான் என்று எனக்குள் சொல்லிக் கொள்கிற மாதிரி , ஒரு குரல் தேட்டது அதையே செவி மடுத்தவாறுபிறகு நீண்ட நேரம் வரைநான் மெளனத்திலேயே விழிப்புற்று நின்று கொண்டிருந்தேன் அக்கா வந்ததையே அறியாமல்,அவள் வரவு நல்லதாகவே இருக்கட்டும் என்று நெஞ்சில் பட்டது. எழுதியவர் ஆனந்தி
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |