முள்முடி மன்னர்கள்





(1991ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

“ஏன் ஆமிக்காரரிடம் அடிவாங்கினேன்.
கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒழுங்காகத்
தானே பதில் சொன்னேன். அடையாள
அட்டை கேட்க, அதையும் காட்டினேனே
ஏன் அடித்தார்கள்” என அவன் தன்னைத்
தானே வினாவிக் கொண்டான்.
கண்களில் கண்ணீர் விளிம்பு கட்டியிருந்தது. மூச்சு விடும்போது நெஞ்சு வலித்தது. கால்களை அசைக்க முடிய வில்லை.
ஞானரூபன் வீட்டின் கூரையைப் பார்த்தபடி படுத்திருந் தான். கூரைபூராவும் தூசு பிடித்திருந்தது. சரம் சரமாக வேறு தூங்கிக் கொண்டிருந்தது.
அறையின் மூலைச் சுவரில் கூட படை படையாக தூசு படிந்திருந்தது. அவற்றையெல்லாம் நுட்பமாகப் பார்த்த படி பார்வையினை யன்னல் ஊடாக வெளியே செலுத் தினான்.
வேப்பமரத்தில் காகம் ஒன்று கரைந்து கொண்டிருந்தது. எவ்வளவு சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் நின்று அது கரைகின்றது என ஞானரூபன் நினைத்தான்.
சட்டென்று தன்னை நினைத்தான். தான் இப்போது. இருக்கும் நிலைமையினை நினைத்தான். வேதனை நெஞ் சை அடைத்தது. தன்னுடைய சந்தோஷம், பொழுது போக்கு எல்லாமே என்ன மாதிரிப் போய் விட்டன என யோசித்தான்.
புரண்டு படுக்க முனைந்தான் ஆனால் அது அவ்வளவு இயலக்கூடிய காரியமாகத் தெரியவில்லை. கைகளைத் தூக் கிப் பார்த்தான். இரண்டிலும் நோ உண்டானது. வரி வரி யாக இரத்த அடையாளங்கள் இப்போது நன்றாக கறுத் துப் போய் இருந்தன.
புறங்கையினால் கண்களில் திரண்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். பின்னேரம் வரை என்ன செய்வது மாலையில் தான் தவலிங்கம் வருவான். அதுவரை பொழுது எப்படிப் போகும். அதுவும் இந்த உடம்பு வலி யைப் பொறுத்துக் கொண்டு,
இன்றுடன் ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. இதுதான் நிலைமை. இப்போதும் ஆஸ்பத்திரியில் தான் படுத்திருக்க வேண்டும். ஆனால் எப்படியோ சமாளித்து வீட்டுக்கு வந் தாகி விட்டது.
ஞானரூபன் மனத்தில் அன்றைய சம்பவம் முளை விட்டது. இருள் சூழ்ந்த இரவும்- தொடர்ந்து. நடந்த சம் பவங்களுமாக விரிந்தது
செவ்வாய் இரவு ஒன்பது மணிக்கு எதிர்வீட்டுக்காரர் சண்முகத்தின் மகள் பிரியாவுக்கு மருந்து எடுப்பதற்கு அவருடைய சைக்கிளில் பயணப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது.
பிரியாவுக்கு சுகவீனம் என்றதும் மனம் குழம்பி வழக் கம் போலவே வீட்டாக்களுக்கு ஒன்றுமே சொல்லாமல் பரபரப்புடன் சைக்கிளில் புறப்பட்டாயிற்று.
ஒழுங்கை முழுக்க இருள். வெளிச்சங்கள் எல்லாம் வீட் டுக்குள்ளேயே குளிர் காய்ந்து கொண்டிருந்தன. அந்நிய தேசத்தில், இருந்து தமிழ் மண்காக்க வந்தவர்களின் அதீத வேலைகளால் சனங்களோடு அவையும் ஒடுங்கிப் போய் இருந்தன.
வானத்தில் நட்சத்திரங்கள் மாத்திரம் அரைகுறை நம் பிக்கைகளுடன் மின்னிக் கொண்டிருந்தன. ஞானரூபன் சைக்கிளை வேகமாக மிதித்தான்.
வளைந்த திருப்பத்தில் சைக்கிளைத் திருப்ப இருளில் இருளாக ஒரு உருவம். சட்டென்று வேகத்தைக் குறைக்க வேண்டியதாயிற்று.
“அண்ணை ஒரு விசயம்” என்றது அந்த உருவம்.
ஞானரூபன் விரைவாக சைக்கிளை நிறுத்தினான். அடர்த்தியான இருளிலும் அந்த உருவத்தை ஒரு இளை ஞனாகக் கண்டு கொண்டான்.
ஒரு வகைப் பயம் அவனைக் கவ்விக் கொண்டது. கனக சபை கடையில் வார்த்துக் கொண்டதால் உண்டான அசாத்திய துணிச்சலினால் புறப்பட்டது மடைத்தனமாகிப் போய் விட்டது என்ற நினைப்பும் உண்டானது.
“என்ன,” என்றான் தயக்கத்துடன்.
“எங்கை போறீங்கள் அண்ணை,” என்ற கேள்வி அந்த இளைஞனிடம் பிறந்தது.
”நானோ-டொக்டரிட்டைப் போறன். ஒரு பிள் ளைக்கு சுகமில்லை. மருந்தெடுக்க வேணும்,” என்னும் போதே குரலில் நடுக்கம் ஏற்பட்டது.
“எங்கை இருக்கிறீர்கள்”
“இஞ்சை கிட்டடியில் தான். கணேசபிள்ளையின்ரை மகன்.”
கிட்டடியில் எண்டபடியால எனக்கொரு உதவி செய் யுங்கோ – அண்ணை’
“என்ன”
”உங்கடை சைக்கிளை ஒருக்கா தாங்கோ -விடிய நான் கொண்டு வந்து தராட்டியும் ஆரிட்டையாவது கட்டாயம் குடுத்து அனுப்புவன்” என்றான் வெகுநிதானமாக.
ஞானரூபனுக்கு உடலில் பதட்டம் ஏற்பட்டது. என்ன பதில் சொல்வது என்ற மாதிரியான குழப்பமும் எரிச்சலும் ஏற்பட்டன. எதுவுமே கூறாமல் மௌனமாகவே நின்றான்.
அண்ணை அவசரமான அலுவல் உடன் போக வேணும். நெருக்கடியான நேரத்தில நீங்கள் உதவி செய்ய வேணும் இந்தியன் ஆமிக்காரன் இப்ப கொஞ்ச நேரம் முதல் தான் இதால போறான். அவன்கள் திரும்பி வாற துக்கு இடையில நான் போக வேணும்,” என்றான் மறு படியும்.
ஞானரூபனின் எரிச்சல் எல்லை மீறியது. “மருந்தெடுக் கப் போவமெண்டால் இதென்ன இடையில கரைச்சல்” எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் “கனக்க யோசியாதேங்கோ அண்ணை, அவசரமான அலுவல் நான் வந்த சைக்கிளின்ரை அச்சு முறிஞ்சு போச்சு இன்னும் இருபது கிலோ மீற்றராவது போக வேணும். தயவு செய்து உதவி செய்யுங்கோ, நீங்கள் கிட்டடியில இருக்கிற படியால் வேறை சைக்கிள் எடுத்துக் கொண்டு நீங்கள் பார்க்க வேண்டிய அலுவலைப் பார்க்கலாம் தானே,”
நிதானமாக அவன் கதைத்தாலும் அவனிடம் ஒருவகை பரபரப்பு இருந்ததை ஞானரூபன் கவனித்தான். ”இல்லைத் தம்பி – எனக்கு அவசரம். அதோடை இது என்ரை சைக் கிளும் இல்லை. நீங்கள் வேறை எங்கையாவது சைக்கிள் எடுக்கலாம் தானே,” என்றான் அவன்.
அந்த இளைஞனின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டதை இருளில் ஞானரூபனால் அவதானிக்க முடியவில்லை.
‘அண்ணை என்னை நம்பலாம் பார்த்துச் செய்யுங்கோ,” என்றான் மறுபடியும்,
“இல்லைத் தம்பி உது சரிவராது. எனக்கு அவசர அலுவல் இருக்கு, நான் போக வேணும்.” என்று சைக் கிளை எடுத்தான்
“அப்ப தரமாட்டீங்களே,” என்று கேட்ட இளை ஞனின் குரலில் சாடையான கடுமை இருந்தது.
“இல்லை” என்றான் ஞானரூபன்.
“உங்களுக்கு அவசரம் எண்டால் போங்கோ அண்ணை நானும் வீண் வேலைக்காய் உங்கடை சைக்கிளை கேட் கேல்லை.” என்றபடி கையில் இருந்த உரப் பையைத் தூக்கித் தோளில் வைத்தபடி நடக்கத் தொடங்கினான் அவன்.
ஞானரூபனுக்கு அவன் துவக்கைத் காட்டி தன்னுடைய சைக்கிளை பறித்து விடுவானோ என்ற பயமும் ஏற்பட்டது. ஆனால் அந்தப் போராளி எதைப் பற்றியும் கவலைப் படாமல் நடக்கத் தொடங்கியிருந்தான்.
ஞானரூபன் மீண்டும் சலிப்படைந்தான். “இதென்னடா உபத்திரவம். தோளில் ஆயுதத்தோடை நடந்து போறான். ஆமிக்காரன் வந்தால் பெரிய உபத்திரவமாய் போய்விடும் வன் போகட்டும்.” என்று நினைத்துக் கொண்டு சைக் கிளை நிறுத்தினான்.
அந்த இளைஞன் இருளில் வெகுவிரைவில் கரைந்து போனான். சில நிமிடங்கள் கழிய ஞானரூபன் சைக்கிளில் ஏறி மெதுவாக மிதித்தான்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் ஒழுங்கைக் கரை யோரமாக ஒரு சைக்கிளும் இருவரும். ஊடுருவிப்பார்த்தான் உரப்பையை சைக்கிளின் முன்னால் வைத்தபடி அந்த இளைஞன் ஞான ரூபனிடம் சைக்கிள் கேட்ட அதே இளை ஞன் நின்றான். பக்கத்தில் தோளில் துவாயும் கையில் புல்லுப் பையுமாக வயதான தோற்றமுடைய ஒருவர் நின்றார்.
‘ஒண்டுக்கும் கவலைப் படாமல் நீர் சைக்கிளை கொண்டு போம்”
“தம்பி – நான் கொஞ்சத் தூரம் தான் நடக்க வேணும்”, என்று அவர் சொல்வதும் கேட்டது.
ஞானரூபன் வேகமாக சைக்கிளை மிதித்தான். எங்கே மறுபடியும் அந்த இளைஞனிடம் அகப்பட்டு விடுவேனோ என்ற பயம் ஏற்பட்டு விட்டது.
அவன் பிரதான வீதிக்கு வந்து ஏறியபோது தெரு சூனியமாகிப் போய் இருந்தது.
“அப்பாடா. ஒரு மாதிரித் தப்பி வந்தாகி விட்டது. பாவம் பிரியா, அங்கை நான் மருந்தோடை, வருவன் எண்டு எதிர் பார்த்துக் கொண்டு இருப்பாள்” என்று நினைத்துக் கொண்டான்.
சோர்ந்து போய் இருக்கும் அவள், இந்த நேரம் கெட்ட நேரத்தில் தான் மருந்தோடு போய் நின்றதும் எவ்வளவு பூரிப்புடன் என்னைப் பார்ப்பாள். எத்தகைய நம்பிக்கை அவளுக்கு என்மீது ஏற்படும் என்றெல்லாம், சுகமான நினைப்புகள் தோன்றின.
மனம் பூரிப்படைந்து. இறக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்தது. விரைவில் மருந்து வேண்டிக் கொண்டு போக வேண்டும் என்ற வெறி அவனுள் மூண்டது.
வெறிச் சோடிக் கிடந்த தெருவில் அவன் சைக்கிள் விரைந்தது. இன்னும் சிறிது தூரம் போனால் டாக்டரின் வீடுவந்து விடும் என்ற நிலையில் ஹோல்ட்” என்ற சத்தம் கர்ணகடூரமாக வெளிப்பட்டது. றோட்டுக் கரை யோரங்களில் இருளில் இருந்து நாலைந்து பேர் வெளிப் பட்டார்கள்.
உயர்ந்த தோற்றம் – கைகளில் ஆயுதங்கள். அதிர்ந்து போன ஞானரூபன் பட்டென்று சைக்கிளை விட்டுக் குதித்தான்.
பச்சை உடுப்புக்களும் தலைப்பாகைகளும் சகிதம் இந் திய இராணுவத்தினர். நடுங்கும் ஞானரூபனை அவர்கள் மின்னலென சூழ்ந்து கொண்டார்கள்.
எல்லாம் கணப்பொழுதில் தான். அவர்கள் கேள்விகள் மாத்திரமல்ல கைகளாலும், கால்களினாலும் ஆயுதங்களி னாலும் அவனைப் பதம் பார்க்கத் தொடங்கினார்கள்.
தங்களால் இயன்ற வரை அடித்து உதைத்து விட்டு அவன் கொண்டு வந்த சைக்கிளையும் உருத்தெரியாமல் செய்து விட்டு அவர்கள் போய் விட்டார்கள்.
அந்த அளவுடன் அவர்கள் போனது தான் செய்த புண்ணியம் தான் என ஞானரூபன் நினைத்தான்.
வாயால் இரத்தம் வழிந்தோட வெகுநேரம் வரை அவன் நடுவீதியில் கிடந்தான்.
ஏன் ஆமிக்காரரிடம் அடிவாங்கினேன். கேட்ட கேள்வி களுக்கெல்லாம் ஒழுங்காகத்தானே பதில் சொன்னேன். அடையாள அட்டை கேட்க, அதையும் காட்டினேனே. ஏன் அடித்தார்கள்” என அவன் தன்னைத்தானே வினாவிக் கொண்டான்.
இதுவரை காலமும் இப்படியான கதைகளை கேட்டதும் உண்டு பத்திரிகைகளில் படித்ததும் உண்டு, அப்போ தெல்லாம் அதனை பெரிதாக அவன் எடுத்துக் கொண்ட தில்லை.
உடம்பு மிகக் கடுமையாக வலித்தது. அசைக்கக்கூட முடியவில்லை. அவ்வளவு மோசமாகத் ‘தாக்கினாலும் சுய நினைவு இருந்தது கூட ஆச்சரியம் தான்.
டாக்டரிடம் மருந்துக்குப் புறப்பட்ட வேளையில் இடை யில் அந்த இளைஞன் மறித்து சைக்கிளை கேட்காமல் விட்டிருந்தால் இப்படியான ஒரு அவலம் நடந்திருக்காது என்ற எண்ணம் அவனுள் எழுந்தது.
உடம்பு வேதனையால் துடித்துக்கொண்டு இருக்கும் போது எல்லை மீறிய கோபம் அந்த இளைஞன் மீது ஏற்பட்டது.
“தேவையில்லாமல் ஒரு சண்டையைப் பிடிச்சுக் கொண்டு எங்கடை நிம்மதியளை குழப்பினது மாத்திரம் அல்ல எதிலு மே சம்பந்தப்படாத எங்களுக்கெல்லாம் இப்படி நடக்க வைக்கிறாங்களே” எனவும் நினைத்தான்.
சைக்கிளில் உரப்பை சகிதம் வந்த ளைஞனுக்காக விரித்த வலையில் தான் அகப்பட்டு அடிவாங்கி விட்ட தாகவே ஞானரூபன் கடைசியில் முடிவு செய்தான்.
வானமெங்கும் நட்சத்திரங்கள் முழுமையாக ஆக்கிர மித்திருக்க – அடிவானத்தில் குறைநிலா பிரகாசிக்கத் தொடங்கியிருந்தது. பனியினால் உடல் சில்லிட்டது.
மிகுந்த சிரமத்தின் மத்தியில் அவன் வீடுவந்து சேர்ந் ததை இப்போதும் நம்பமுடியாத விடயமாகவே இருக்கின் றது. வீட்டின் வெளி விறாந்தையில் யாரோ அமளிப்படும் சத்தம் கேட்டது. பழைய நினைவுகளில் இருந்து அவன் மீண்டான்
“நேற்றைக்கும் நாலு பெடியன் செத்துப் போச்சாம் அம்மா” என்று மேனகா சொன்னாள்.
”பாவம் ஆர் ஆர் பெத்தபிள்ளையளோ – முந்தி சிங்கள ஆமியோடை சண்டைபிடிச்சு செத்துதுகள்.இப்ப இந்தியாக்காரனோடை” என்று அம்மா பதிலுக்குச் சொன்னாள்.
“என்னம்மா செய்யிறது எங்கடை பிரச்சனை தீரும் மட்டும் இப்பிடித்தான்” என்றாள் மனோகரி.
இந்த நாலைந்து நாட்களும் தான் அவன் பகலில் வீட்டில் நிற்பதால் வீட்டாக்களின் கதைகள் அவன் காதில் விழுகின்றன. அவர்களின் கதைகளின் போக்கு அவனுக்கு சிலவேளை சினத்தை உண்டுபண்ணும். என்றாலும் அதை வெளிப்படுத்த முடியவில்லை.
தேனீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அதற்கிடையில் மறுபடி வெளிவிறாந்தையில் அமளி ஏற் பட்டது. யாரோ கேற்றைத் தட்டுவதும் “மனோகரி ஆர் எண்டு பாரன்” என மேனகா சொல்வதும் கேட்டது.
சில செக்கன்கள் கழிந்தன. அறைவாசலில் நிழலாடி யது. அவன் பார்த்தான். சட்டென்று மின்னல் பொறி தட்டினாற் போல ஒரு மலர்ச்சி.
காயத்திரியும் கல்யாணியும் அறைவாசலில் நிற்க – பின்னால் மேனகா, அதிர்ந்து போன ஞானரூபன் சிறு பொழுது மெளனமாக இருந்து விட்டு “வாங்கோ உள்ளுக்க” என்றான். மெதுவாகப் புன்னகைத்தபடி காயத்திரி முன்னேவர கல்யாணி பின்னால் வந்தாள்.
– தொடரும்…
– முள்முடி மன்னர்கள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1991, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.