
1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி பின்பு பதவி உயர்வில் கருவூலக் கணக்குத்துறைக்கு மாறி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவுத் திட்ட அலுவலகத்தில் உதவிக் கணக்கு அலுவலராகப் பணியாற்றி 2009-ல் பணி ஓய்வு பெற்றார்.
புனை பெயருக்கான காரணம்
திரு. நா. பார்த்தசாரதி, அவர்களின் தீபம் இலக்கிய இதழின் மீதான வாசிப்பு அனுபவத்தில் ஏற்பட்ட ஆர்வத்தில் ‘தீபன்’ என்ற புனை பெயர் உகந்ததானது. பின்னாளில் மனையாளின் பெயரோடு சேர்ந்து ‘உஷாதீபன்’ ஆனது.
துவரை வெளிவந்த தொகுதிகள்
1) உள்ளே வெளியே : சிறுகதைத் தொகுதி மீனாட்சி புத்தக நிலையம் மதுரை-625 001.
2) பார்வைகள் : -ஷை- ராஜேஸ்வரி பதிப்பகம், தி.நகர், சென்னை-17.
3) நேசம் : -ஷை- -ஷை- 4) வாழ்க்கை ஒரு ஜீவநதி : -ஷை- என்.சி.பி.எச். நிறுவனம், அம்பத்தூர், சென்னை-98.
5) நினைவுத் தடங்கள் : -ஷை- -ஷை-
6) புயலுக்குப் பின்னே அமைதி : குறுநாவல் வானதி பதிப்பகம், செ- . – 2 –
7) சில நெருடல்கள் : சிறுகதைத் தொகுதி நிவேதிதா பதிப்பகம், சென்னை-83. 8) மழைக்கால மேகங்கள் : குறுநாவல் -ஷை-
9) தனித்திருப்பவனின் அறை : சிறுகதைத் -ஷை- தொகுதி
10) வெள்ளை நிறத்தொரு ப+னை : -ஷை- ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-17.
11) திரைவிலகல் : சிறுகதைத் தொகுதி, வெளியீடு: பா. உதயக் கண்ணன்,பெரம்ப+ர், சென்னை11.
உள்ளே வெளியே, பார்வைகள், நேசம், சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறை, திரை விலகல், நினைவுத் தடங்கள், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நான் அதுவல்ல, தவிக்கும் இடைவெளிகள்,வெள்ளை நிறத்தொரு பூனை, செய்வினை-செயப்பாட்டு வினை, நிலைத்தல், முழு மனிதன், பின்னோக்கி எழும் அதிர்வுகள், சில யதார்த்தங்கள் வனம் புகுதல், மனத் தொற்று, தனித்த பறவையின் சலனங்கள், உஷாதீபன் சிறுகதைகள் ஆகிய 20 சிறுகதைத் தொகுப்புகளும், புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள், உஷாதீபன் குறுநாவல்கள், கால்விலங்கு, துருவங்கள், எதிர்காற்று ஆகிய ஆறு குறுநாவல் தொகுப்புகளும், லட்சியப் பறவைகள், எதிர் நீச்சல், தன்னை வென்றவன், தவறுகள் குற்றங்களல்ல.கடைநிலை, உள்வெளி உலகம் ஆகிய 6 சமூக நாவல்களும், நின்று ஒளிரும் சுடர்கள்,காலத்தால் அழியாத கலைஞர்கள் என்கிற தமிழ்த் திரைப்படக் குணச்சித்திரங்களின் நடைச் சித்திரம்,மற்றும் நகைச்சுவைக் கலைஞர்கள் பற்றிய உரைநடைச் சித்திரக் கட்டுரைத் தொகுப்புகளும், உறங்காக் கடல், படித்தேன்எழுதுகிறேன், பொங்குமாங்கடல், தி.ஜா.என்கிற ஆளுமை ஆகிய நான்கு இலக்கியக் கட்டுரைத் தொகுப்புகளும், இவை போக 30 மின் நூல்களும், புஸ்தகா.கோ.இன்-ல் 20 நூல்கள் என நாவல்களும், சிறுகதைகளும் இதுவரை வெளி வந்துள்ளன.
சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதையாக (1987) இவரது வெள்ளை நிறத்தொரு பூனை மற்றும் 2015 டிசம்பர் மாதச் சிறுகதையாக “கைமாத்து” என்ற சிறுகதையும் பரிசு பெற்றுள்ளன. கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, குங்குமம் இளைய தலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழாக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு ஆகியன இவர் பெற்ற பரிசுகள்.
2007-ம் ஆண்டுக்கான அமரர் ஜீவா – பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து நடத்திய விழாவில் இவரது “வாழ்க்கை ஒரு ஜீவநதி” சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றது. இத்தொகுதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நவீன கலை இலக்கியப் பயில் நூலாக அமைந்தது. இவரது சிறுகதைத் தொகுதிகள் கல்லூரி மாணவர்களால் M.Phil., P.Hd., ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
தினமணி கதிரில் வந்து கொண்டேயிருக்கும் இவரது கதைகள் “கதிர் கதைகள்” என்கிற வரிசையில் ஆய்வு செய்யப்படுகின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியப் போட்டி 2011 ல் இவரது “நினைவுத் தடங்கள்” சிறுகதைத் தொகுதி அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகப் பரிசு பெற்றது. நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிகளில் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன. திரு. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது 2014 – இவரது “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பிற்குக் கிடைத்தது. கலைஞன் பதிப்பகம் முன்னெடுத்த முனைவர் திரு கிருஷ்ணன்-மணியம் விருது 2022-ல் சிறுவாணி வாசகர் மையம், கோவை வெளியிட்ட இவரது “முழு மனிதன்” சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது. திருப்பூர் தமிழ்ச் சங்கம் 2024 க்கான விருது இவரது “தனித்த பறவையின் சலனங்கள்“ என்ற சிறுகதைத் தொகுப்பிற்குக் கிடைத்தது.
இவரது எழுத்துப்பணி வார மாத இணைய இதழ்களில் இன்றும் விடாது தொடர்ந்து கொண்டிருக்கிறது. . நிவேதிதா பதிப்பகம் மூலம் “ஊழிக்கூத்து” என்ற சிறுகதைத் தொகுதியும், உஷாதீபன் சிறுகதைகள் என்கிற பெரும் தொகுதியும் விரைவில் வெளிவரவிருக்கிறது.
——————————-
எழுத்தாளரின் முழு முகவரி –
உஷாதீபன் (கி.வெங்கட்ரமணி),
ப்ளாட் எண். 171,172 மேத்தாஸ் அக்சயம் அபார்ட்மென்ட்,
ராம் நகர் தெற்கு 12-வது பிரதான சாலை,
ஸ்ருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில்,
மடிப்பாக்கம், சென்னை – 600 091.
தொலைபேசி எண். 94426 84188
Email – ushaadeepan@gmail.com
ஒருகதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சாஉறித்ய அகாடமியால் வெளியிடப்பட்டது என்ற குறிப்பு உள்ளது. கதையின் பெயர், ஆசிரியர் என முழு விபரம் அறிய விரும்புகிறேன். நன்றி
உஷாதீபன்
மன்னிக்கவும் ஐயா, எங்கே குறிப்பிட்டுள்ளது என்று எங்கள் ஈமெயில் முகவரிக்கு தெரிவிக்க வேண்டுகிறோம். மேலே குறிப்பிட்டுள்ள சுயவிபர குறிப்புகளை ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினாலும் தெரிவியுங்கள்.