வாசல் தேடி வந்த வசந்தம்
கதையாசிரியர்: கல்பனா ராஜகோபால்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
இணைய வெளியீடு: November 13, 2026 முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 54
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3
பிரிந்த பாசத்தின் வலி

“ஒரு காதல்… இரண்டு குடும்பங்களின் கண்ணீராக மாறிய கதை…”
“பேத்தி” என்ற வார்த்தையைக் கேட்டதும் லஷ்மியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
சேலைத் தலைப்பை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு விசும்பியபடியே, ராகவியின் தலையில் ஆதரவாகக் கை வைத்து தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டார்.
அருகில் இருந்த சோபாவில் இருவரையும் அமர வைத்து, தாங்களும் அருகில் அமர்ந்தனர்.
லக்ஷ்மி பாட்டி உள்ளே சென்று இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். தண்ணீரை வாங்கியபடி கோபி,”பாட்டி… உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நான் டென்த் படிக்கும்போது ஸ்கூல் லீவுல இங்க வருவேன் இல்லையா…
அப்ப எல்லாம் நான் உங்ககிட்ட கேட்பேன். என் பிரண்ட்ஸ் வீட்டில எல்லாம் அழகா பேமிலி போட்டோ சுவரில் மாட்டி இருப்பாங்க.
‘ஏன் தாத்தா… நம்ம வீட்டுல மட்டும் எந்த போட்டோவும் சுவர்ல மாட்டவே இல்ல?’ன்னு கேட்பேன்.
அதுக்கு நீங்க ஏதாவது சொல்லி சமாளிச்சுடுவீங்க.
ரொம்ப தடவை நான் விடாம நச்சரிச்சுக் கேட்டதால, ஒரு நாள் நீங்க ஒரு பழைய ஆல்பத்தை எடுத்துட்டு வந்து கொடுத்தீங்க.
அப்ப தாத்தா… என்னோட உட்கார்ந்து அதுல இருக்கிற எல்லாரோட பேரு, உறவு எல்லாம் சொல்லிட்டு வந்தாரு.
அப்ப நான் ஒரு பக்கத்துல இருந்த ஒரு போட்டோவைக் காட்டி,
‘தாத்தா… இவங்க யாரு? எல்லா போட்டோவிலேயும் இருக்காங்க… ஆனா நீங்க இவங்கள பத்தி மட்டும் ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறீங்களே?’ன்னு கேட்டேன்.
தாத்தா உங்களுக்கு உடனே பயங்கரமா கோபம் வந்துச்சு.
‘லஷ்மி… லஷ்மி… இதுக்குத்தான் இதை வெளியே எடுக்காதேன்னு படிச்சுப் படிச்சு சொன்னேன். தூக்கிக்கிட்டு போய் உள்ளே எறி!’ன்னு கத்திட்டு வெளியே போயிட்டீங்க.
உங்க கோபத்தைப் பார்த்து நான் ரொம்ப பயந்துட்டேன்.
அதுக்கப்புறம் எதையும் கேட்கக் கூடாதுன்னு நினைச்சேன்.
பாட்டியும் அழுதுகிட்டே இருந்தாங்க.
அப்புறம் நான் காலேஜ் போகிறதுக்கு முன்னாடி ஒரு நாள் இங்க வந்திருந்தேன்.
அன்னைக்கு டிவியில ஏதோ படம் ஓடிட்டு இருந்துச்சு.
திடீர்னு பாட்டி அழ ஆரம்பிச்சுட்டாங்க.
அப்ப தாத்தா உங்களை சமாதானப்படுத்திட்டு இருந்தீங்க.
‘விடு லஷ்மி… நடந்தது நடந்துடுச்சு. இனி அழுது என்ன செய்ய?
அப்ப நானும் அவ்வளவு கோபமும் வீராப்பும் காட்டியிருக்கக் கூடாதுன்னு இப்ப தோணுது.
நீ உன் வேதனையை அழுது வெளிப்படுத்திட்டே…
ஆனா நான் உள்ளுக்குள்ள செத்துட்டு இருக்கேன்’ன்னு சொல்லிட்டு இருந்தீங்க.
அப்பதான் நான் உங்க ரெண்டு பேரையும் உட்கார வைத்து கேட்டேன்.
‘தாத்தா… நான் இன்னும் சின்னப் பையன் இல்லை.
அன்னைக்கு அந்த ஆல்பத்தைப் பார்த்து நீங்க கோபப்பட்டதிலேயே எனக்கு ஏதோ விஷயம் இருக்குன்னு புரிஞ்சிடுச்சு.
சொல்லுங்க… என்ன நடந்தது? ஏன் இவ்வளவு வேதனைப்படுறீங்க?’ன்னு கேட்டேன்.
அப்ப லஷ்மி பாட்டி மீண்டும் அந்த ஆல்பத்தை எடுத்து வந்து நீட்டினாங்க.
தாத்தா அந்தப் போட்டோவைக் காட்டி,
‘கோபி… இது வேறு யாரும் இல்ல. உன்னோட அத்தைதான்.
உன் அப்பாவோட அக்கா.
ரெண்டு பேருக்கும் ரெண்டு வருஷம்தான் வயசு வித்தியாசம்.
பேரு கவிதா.
உங்க அப்பாவும் அவளும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரா இருந்தாங்க.
எல்லாம் அந்தப் பாழாப்போன காதல் வர்ற வரைக்கும் தான்…’ என்றார்.
அதற்கு மேல் சொல்ல முடியாமல் வெங்கட்ராமனின் குரல் உடைந்து போனது.
லஷ்மி மெதுவாக அந்தக் கதையைத் தொடர ஆரம்பித்தார்…
– தொடரும்…
![]() |
பெயர்: கல்பனா ராஜகோபால்வயது: 56எழுதிய சிறுகதைகள்: 25பிரசுரமானவை: 12 கல்கி/மங்கையர் மலர் ஆன் லைன்: 11 கதைகள் கல்பனா ராஜகோபால் ஆரம்ப எழுத்தாளரான நான் கடந்து ஒரு வருட காலமாக கட்டுரைகள் மற்றும் கதைகளை கல்கிக்கு எழுதி வருகிறேன்.மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மிஸ்டர் எஸ்.கே.முத்து
நாஞ்சில்நாடன்
November 13, 2026
பரிதியைக் கண்ட பனி
சிங்கை மா.இளங்கண்ணன்
November 13, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 13, 2026
