உந்தன் நிழலாய் நானடி தோழி…
கதையாசிரியர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
இணைய வெளியீடு: November 13, 2026 முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 63
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24
அத்தியாயம் – 19

சட்டென முரளியைப் பார்ப்பதைத் தவிற்கத் தலையைக் குனிந்து கொண்டாள் சாரு.
கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் அவளின் மடியில் வீழ்ந்தன.
பதறிப்போனான்முரளி. சாரூ அழறீங்களா?நா தப்பா எதாவது பேசிட்டேனா?கேட்டுட்டேனா?
ஏ..அழறீங்க..என்னென்னவோ சொல்றீங்க?நா ஒங்கள விரும்பற அளவுக்கு ஒங்குளுக்குத் தகுதியில்லையா?
நீங்க அழகான பொண்ணு அறிவான பொண்ணு.. அமைதியான பொண்ணு..
பண்பான பொண்ணு.. என்கிட்ட அன்புகாட்ற பொண்ணு..இதவிட வேற என்ன தகுதி வேணும் சாரு..
ஒங்குளுக்கு?
நா ஒங்கள விரும்பறதுக் குனு வேற எக்ஸ்ட்ரா தகுதி ஒங்குளுக்குத் தேவை யான்ன?அப்பிடியான தகுதி எதுவும் இருக்கான்ன?
பதிலேதும் சொல்லாமல் மௌனமாய் தலை குனிந்தபடி இருந்தாள் சாரு.அழுகை நிற்கவில்லை.
இல்லாத காரணத்தச் சொல்லி நீங்க என்னப் புறக்கணிகறதா தோண்றது சாரு.
நாதா ஒங்குளுக்குப் பொருத்தமானவ இல்லேன்னு ஒங்குளுக்கு தோண்றாப்ல எனக்குப்படுது.
அத நேரிடையா சொல்லாம..
மாத்தி சொல்றீங்க.. அப்டித்தானே?குரல் வேதனையோடு வந்தது.
இல்ல..இல்ல..
அப்ப ஒங்களோட தகுதி குறைவு என்ன?சொல்லுங்க ப்ளீஸ்.
நா..நா..உடல் குறைபாடு உள்ளவ..
என்னது?அதிர்ந்துபோய்க் கேட்டான் முரளி.
என்ன சொல்றீங்க சாரு?..
உடல் குறைபாடா?
ஒங்கள பாத்தா அப்பிடித் தெரியலயே?நல்லாதானே இருக்கீங்க?ஒன்னே ஒன்னு சொல்லவா சாரு..
அப்டியே..ஒங்க ஒடம்புல குறைபாடு இருந்தாலும் அதுபத்தி எனக்கு ஒன்னுமில்ல..ஒங்களையும் ஒங்க மனசையும்தா நேசிக்கிறேன்.
சாரு தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டா சாரு?
சாரு தாயன்புனா என்னென்னு தெரியாது சாரு எனக்கு..அம்மாவோட பாசத்த நா உணர்ந்ததில்ல..
ஏன்னா ஒன்ரவயசுலயே அம்மாவ எழந்துட்டே.. அம்மா உயிரோட இல்ல.. தாய்ப் பாசம் கெடைக்கில..
அப்பா உயிரோட இருந்தும் தந்தையோட அன்பும் பாசமும் கெடைக்கில..
தாத்தாவோட அன்பும் பாசமுமே என்ன வளத்து ஆளாக்கிருக்கு சாரு.
நீங்க எ தாயா தோழியா மனைவியா இருந்து எம்மனசுதேடும் நிஜமான அன்பையும் பாசத்தையும் தருவீங்கனு நம்பறே சாரு.
ஒருவேள நீங்க என்ன விரும்பாம இருந்து என்ன நிராகரிக்க நெனச்சு..
அத நேரிடையா சொல்லாம..
தங்கிட்ட உடல்கொற இருக்குறதா சொன்னா..
முரளி காதல்லேந்து பின்வாங்கிடுவாருனு நெனச்சு அப்பிடி சொன்னீங்களா?
பட்டுனு முரளி நா ஒங்கள விரும்பலன்னு சொல்லி டுங்க..அப்பிடி சொல்ல ஒங்குளுக்கு உரிம இருக்கு.
அப்பிடி சொன்னப்பறம் ஒங்கள வற்புறுத்த எனக்கு உரிம இல்ல..நா ஒதுங்கிடுறேன் சாரு..
அதுக்காக உடல் குறைபாடு அதுஇதுனுலாம் காரணம் சொல்லாதிங்க சாரு.
நிஜாமாவே அப்பிடி உடல் குறைபாடு எதுவும் ஒங்ககிட்ட இருந்தாலும் அதப்பத்தி எனக்கு எந்த ப்ரர்ச்சனையும் இல்ல.
வெறும் ஒடம்ப நா விரும்பல.. ஒங்க அன்பான மனசுதா எனக்கு வேணும் சாரு. உங்க அன்பு மனச.. இதயத்ததா நா நேசிக்கிறேன் சாரு..குரல் தழுதழுத்தது முரளிக்கு.
முரளி..கேவினாள் சாரு.
முரளி..நா உடல் குறைபாடு உள்ளவன்னு பொய் சொல்லல..அது நெஜம்..
பாருங்க முரளி என் கால..
சட்டென கால்களிலிருந்து ஷுக்களையும் சாக்ஸையும் கழற்றினாள்.
உட்கார்ந்திருந்த சிமெண்ட் பென்ச்சிலிருந்து எழுந்தாள்.
கொஞ்சம் தடுமாறினாள். பென்ச்சின் விளிம்பைப் பிடித்து சமாளித்தாள்.
பத்தடி நடந்தாள்..சாய்த்து சாய்த்து நடந்தவள் திரும்ப சிமெண்ட் பெஞ்ச்சருகே வந்து நின்றாள்.
முரளியின் முகம்பார்த்தாள்.
வாயில் தன் வலது கையை வைத்து சிரிப்பைஅடக்க முயற்சி செய்து கொண்டிருந் தான் முரளி.
முயற்சியில் தோற்றவனாய் வாயிலிருந்து கையை எடுத்துவிட்டு வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தான்.
சாரூ..சாரூ..ஹையோ.. ஹையோ..இதுக்கா.. அத்தன பீடிக போட்டீங்க..பீலா விட்டீங்க.. பொலம்பி அழுதீங்க.. கடவுளே..நெற்றி உச்சியில் கையால் தட்டிக் கொண்டான்.
வலதுகால விட எடது காலு ஒரு ரெண்டு இல்லாட்ட மூணு இன்ச் ஒயரம் கம்மி.அதால சாஞ்சு சாஞ்சு நட..
கடவுளே..இத ஒரு பெரிய கொறையா நெனச்சுண்டு..
தன்னத்தானே பெரிய உடல்குறைபாடு கொண்ட பொண்ணா கற்பன பண்ணிண்டு..தாழ்வுமனப்பான்மய வளத்துண்டு..
சாரு..நீங்க ஒரு மெடிகல் ஸ்டூடெண்ட்..வருங்கால மருத்துவர்.
ஒங்களத்தேடி உடல் குறை பாட்டோட நிறைய நோயாளிங்க சிகிச்சைக்கு வருவாங்க..
அவங்களுக்கு பாசிட்டிவான வார்த்தைங்களச் சொல்லி சிகிச்சைதருவீங்களா?
இல்ல அவங்க குறைபாட்ட சுட்டிக்காட்டி மேலும் அவங்கள மனசால ஹீனப்படுத்துவீங்களா?
மொதல்ல ஒரு மருத்துவர் தன் மனசுல தன்னப்பத்தி நம்பிக்கைய வளத்துக் கணும்.அப்பதா தன்ன நாடிவர நோயாளிங்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கை யையும் தரமுடியும்.
ஒரு சின்னக் குறைபாட்ட..
நீங்க சொல்றீங்களேன்னு ஒங்க கால்களோட உயர வித்தியாசத்த குறைபாட்டனு சொல்றேன்..என்னப்பொருத்தவர இது ஒன்னுமே இல்ல சாரு..
நா ஒங்க இதயத்ததா நேசிக்கிறேன்.ஒங்க இதயம் என்மீது காட்ற அன்பத்தா நா எதிர்பார்கறேன்.அந்த அன்புக்காக நா ஏங்கறேன் சாரு.
ஒங்க காலுங்களோட உயர அல்லது நீள வித்தியாசத்த நீங்க குறைபாடா நெனச்சுண்டு என்காதல இனிமே நிராகரிக்க மாட்டீங்கனு நம்பறேன் சாரு.
என்னப்பொருத்தவர மறுபடியும் சொல்றே இது குறைபாடே இல்ல சாரு..
கண்களில் கண்ணீரோடு நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள் சாரு.
முகம் முழுவதும் பூவாய் மலர்ந்து..அம்மலர்ச்சி இதழ்களில் புன்னகையாய் இறங்கி நின்றது.
முரளி..நா..நா..நானும் ஒங்கள.. அதற்குமேல் சொல்ல முடியாமல் தலைகுனிந்தாள்.
கன்னம் சிவந்தாள் சாரு.
அடுத்துவந்த நாட்களெல் லாம் றெக்கை கட்டிப் பறந்தன.
முரளியும் சாருவும் காதல் வானிலே..காதல்வானிலே..ஓ..என்று பார்க்கில் அமர்ந்தபடியே.. றெக்கை கட்டாமல் காதல் வானில் பாடிப் பறந்தார்கள்.
கண்ட இடங்களுக்குப்போய் காதலை வளர்க்கவில்லை.
பண்பாடு சிதையாமல் வரம்புமீறாமல்..அருகருகே அமர்ந்திருந்தாலும் விரல்கூடத் தொடாமல் பேசிப்பேசியே காதலை வளர்த்தார்கள்.
சாரு..
ம்..
எனக்கு இன்னும் ஆறுமாசம்தா காலேஜ்ல படிப்பு.நால்ர வருஷம் முடிஞ்சிடும்.அப்றம் தியரியா படிச்சதையெல்லாம் ப்ராக்டிகலா செய்ய இன்டர்ன்ஷிப்க்கு எந்த மெடிகல் காலேஜ் ஹாஸ்பிட லுக்கு அனுப்புவாங்களோ தெரீல..அது ஒருவருஷமில் லையா?
ஆக எம்படிப்பு இன்னும் ஒன்ர வருஷம்தா.
அப்ப நீங்க படிப்பு முடிஞ்சதும் வேற எங்கியாவது போய்டுவீங்களா?சாருவின் குரலில் கவலை தெரிந்தது.
இல்ல சாரு போமாட்டே.. ஆனா தாத்தா படிப்பு முடிஞ்சதும் மாயவரம் வந்துடு முரளி இங்கியே தொழில் பண்ணிக்கலாம்னு அவர பாக்க மாயவரம் போகும்போதெல்லாம் சொல்றார்.
இப்பகூட பத்துநாள் முன்னாடி போனப்ப..
முரளி ஒன்ன பூனாலேந்து பம்பாய்ல கொண்டுபோய் மெடிகல் காலேஜ்ஜுல சேத்துட்டு..ஹாஸ்டல்ல விட்டுட்டு மாயவரம் வந்ததுலேந்து மனசே சரியில்ல..
ஒன்ன ஏழு வயசுல பூனாக்கு அழச்சிண்டுபோய் ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ட் சேத்ததுலேந்து நீ ப்ளஸ்டூ படிக்கிறவர ஒன்னோடயே இருந்துட்டு..இப்ப இங்க வந்து தனியா இருக்கிறது புடிக்கவேயில்ல..
எல்லாம் ஓ அப்பனால வந்தது.அவமட்டும் ஒழுங்கா ஒழுக்கமா இருந்தா..நீயும் பூனாவுலயும் பம்பாய்லயுமா அல்லாடிருக்க வேண்டாம்.
நாம்பாட்டுக்கு ரிடயரானதும் மாயவரத்தோட வந்து செட்டிலாகி நிம்மதியா இருப்பே..
பாவி கெடுத்தான்.. கெட்டழிஞ் சுபோரான்..
வீடு நெலம் தோப்பு தொறவு எல்லாத்தியும் பாழாக்குறாரு ஒங்க மகன்..ஒடனே வந்துபாருங்கன்னு மருது லெட்டர்போடவும் நா இங்கியே வந்துட்டேன்.
ஆனா ஒன்ன விட்டு இருக்க முடியல..படிப்பு முடிஞ்சதும் வந்துடுடா முரளிங்கறார்.
அப்ப மாயவரத்தோட போய்டுவீங்களா முரளி..
சாருவின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
சாருவ விட்டுட்டுட்டு நா போறதா?
ஒங்களுக்கு இன்னும் மூன்ர வருஷம் படிப்பிருக்கு.
எனக்கு ஒன்ர வருஷம்தா.. எக்ஸ்ட்ராவா நா ரெண்டுவருஷம்இங்க இருக்காப்லருக்கும்.
தாத்தாகிட்ட எதாவது காரணம் சொல்லிட்டு நீங்க படிப்ப முடிக்கிறவர இங்கயே இருப்பே..
ஒங்க படிப்பு முடிஞ்சதும் ரெண்டுபேருமா..
ரெண்டுபேருமா?
மாயவரம் போயிடலாம்ல..
ஏ..எனக்கு இங்க அம்மாவும் அப்பாவும் இருக்காங்க தெரியும்ல..நா ஒண்டியில்ல..
அடேங்கப்பா..கோவத்தப் பாரு..கல்யாணமான பொண்ணுங்கள புகுந்த வீட்டுக்கு அனுப்பணும்னு பெத்தவங்களுக்கு பெரியவங்களுக்கு தெரியாதா என்ன?
ஹோய் என்னது கல்யாணமா?
ஆமா..தாத்தா சொல்லிட் டார்ல..பேரா இந்தத் தாத்தாக்கு வயசாச்சு.. ஒடம்பும் முடியல..
ஒங்கல்யாணத்த கண்ணால பாத்துட்டுப் போய்ச்சேரணும்.
ஒம் படிப்பு முடிஞ்சதும் ஒங் கல்யாணம்தா..ஒனக்கும் நீ படிப்ப முடிக்கும்போது இருவத்தஞ்சு இருவத்தாறு வயசாயிடும்..
கல்யாணத்தபண்ணிண்டு டாக்டர் தொழில பாருடா பேராண்டின்ட்டார்ல..
அதுக்கு..
சாருலதா படிப்பு முடிஞ்சதும் ஐயாவோட கல்யாணம்தா..
முரளி கிருஷ்ணா-சாருலதா கேக்கவே கிக்கா இருக்குல்ல..
இருக்கும்..இருக்கும் இருக்காது?எ அம்மா அப்பா கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டாமாக்கும்?
என்னிக்கு பொண்ணு கேக்கவரது?..சொன்னீங் கன்னா நா வாருவேன்ல எ வருங்கால மாமியார் மாமனாரப்பாக்க..வர சண்டே?ஓகேவா?
இன்னும் மூன்ரவருஷங் கழிச்சு நடக்கபோறதுக்கு வர்ர ஞாயித்துக் கெழமையே பொண்ணுகேக்க வருவீங்களாக்கும்.ஒடம்பு முழுக்க கொழுப்புடா சாமி.
இருவரும் சிரித்தார்கள்.
சாரு..
ம்..இன்னும் ஒங்க தாத்தா சொன்னது எதாவது பாக்கியிருக்கா சொல்ல..
ஹிக்..அதில்ல எப்பவும்
இதே பார்க்குல ஒக்காந்து ஒக்காந்து பேசிப்பேசி போரடிக்குது சாரு..
அதுக்கு..
ஜுகு பீச் போவமா?பூட் ஹவுஸ்..க்வீன்ஸ் நெக்லெஸ்..எல்லோரா கேவ்..
பிரின்ஸ் வேல்ஸ் ம்யூசியம்..எங்கியாவது போலாமா?
அதெல்லாம் அடுத்த தெருவுலயா இருக்கு போக?..நோ நோ..ஆத்துல விடமாட்டா..
ப்ச் என்றான் ..முரளி.
முரளி..நீங்க சொன்ன எடத்துக்குலாம் நிச்சயமா ஒருநாள் போகலாம்.ஆனா இப்ப இல்ல..
வெறும் ஒருமணிநேரம் ரெண்டுமணிநேரத்துல போய்ட்டு திரும்பிடலாம்னா போய்ட்டுவரலாம்.
நீங்க சொன்ன எடம்லாம் ரொம்ப தூரத்துல இருக்கு..
காலேல போனா நைட்தா திரும்பலா..என்னனு வீட்ல சொல்லிட்டு வர்றது?வேண்டா முரளி.
அதுவும் சரிதா..ஓகே சாரு..
என்றான் சாரு சொல்வதும் நியாயம்தானென்று.
படுக்கையில் புரண்டு படுத்தாள் சாரு.
ஏனோ தூக்கம் வருவேனா என்றது.
ரேவி தூங்கீட்டியா?மணி பதினொன்னாகப்போறது..தூங்காம?..தூங்கு..தூங்கு..
அன்னியன்னிக்கு நடந்தத தெனமு ராத்திரி சொல்வேன்ல..இன்னிக்கு படிக்கவேண்டியது அதிகமா இருந்ததால..அதையெல்லாம் படிச்சிட்டு படுக்க கொஞ்ச லேட்டாயிடுத்து..அதா லேட்டா சொல்றே..
இன்னிக்கு முரளி என்ன சொன்னார் தெரியுமா?..
ஆமாண்டிங்கறேன்..இப்பிடிதாண்டி சொன்னார்.. சப்தம்போடாமல் சிரித்தாள்..
ரொம்ப ஜாலிடைப்.. வேடிக்கவேடிக்கையா பேசரத பாக்கணுமே..சிரிச்சி சிரிச்சி வயறே வலிக்கும்..
நா நம்ம ஊரப்பத்தி பேசினேன்னு வையே..ஒடனே வேணும்னே கோட்டா பண்ணுவார்டி..
அவரோட ஊரு மாயவரம்.
அதுல அவருக்கு ரொம்ப பெரும..
ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமான்னு எல்லாரும் சொல்லுவாளே தெரியுமாம் பார்.
அவா ஊர்லதா ஐப்பசிமாசம் துலாஸ்னானம் விசேஷ மாம்..
கடமுழுக்குக்கு மாயவரம் காவேரீல ஸ்னானம் பண்ண எல்லா ஊர்லேந்தும் நெறையா மாமீல்லாம் ஸ்னானம் பண்ண வருவாளாம்.
ஆமான்ல..நம்மூர்லேந்தும் நெறையா மாமீல்லாம் கடமுழுக்கு.. மாயவரம் காவேரீல துலாகட்டத்துல போயி ஸ்னானம் பண்ணா விசேஷம்.. போறேன்னு சொல்லிண்டு எல்லாருமா சேந்தாப்ல போவால்ல.. ஒங்கம்மாகூட போவால்ல..
முரளி ரொம்பத்தா பீத்திப்பார்டி..
நா சும்மாருப்பேனா?எங்க கும்மோணத்துலயும்தா வருஷாவருஷம் மாசிமகத் துக்கு மாமாங்க கொளத்துல ஸ்னானம்பண்ண எங்கெங்கேந்தோ கூட்டம் கூட்டமா வருவா..பன்னண்டு வருஷத்துக்கு ஒருதடவ மகாமகம்வருமாக்கும்..லட்சம்பேர் வருவா அதுக்கும்பேன்.
கும்மோணந்தா ஒசத்திம்பேன்.
முரளி மாயவரம்தா ஒசத்திம்பார்.
க்கும்..அப்பிடீன்னு வேணும்னே மூஞ்சிய திருப்பிப்பேம்பாரு..
சாரு..ஸாரி ஸாரி..ரெண்டு ஊரும் ஒசத்திதான்னு சொல்லிட்டு..என்ன தாஜாபண்ண ஐஸ்க்ரீம் வாங்கிண்டு வந்து தருவாருபாரு..நானும் பக்கியாட்டம் ஐஸ்க்ரீம வாங்கிண்டு சாப்டுவே..
இதுக்கு நேரிடையா.. முரளி ஐஸ்க்ரீம்னு கேட்ருக்கலாம்.. நா வாங்கிண்டு வந்ருப்பே..
கோச்சிண்டமாரி மூஞ்சியத்திருப்பிண்டு நடிச்சு..என்ன பயமுறுத்தி..
ஐஸ்க்ரீம் வாங்க வெச்சும் பார் பாரு வேடிக்கையா..
எனக்கு சிரிச்சே மாளாதுடி ரேவி..
ரேவி எ வாழ்க்கையில நாங்கூட இப்பிடி சிரிப்பேனான்னு தோணும்டி ரேவி..
நீ..லோச்சும்மா..தியாகுப்பா முரளி கிருஷ்ணா எல்லாரும் எனக்குக் கெடச்சது வரம்தா.
இவரோட ஒருநாள் வந்து ஒம்முன்னாடி நிப்பேம்பாரு..
இது நிச்சயமா நடக்கும்டி ரேவி.
ஒ சாருவோட சந்தோஷமான வாழ்க்கையப்பாத்து நீ சந்தோஷாப்படுவடி..ஏன்னா நீதாண்டி நா..நாதாண்டி நீ..
இந்த.. அழுதுண்டேயிருந்த சாருவதானேடி.. ரேவி நீ பாத்ருக்க..
இனிமே ஓ சாருவோட வாழ்க்கையில அழுகைக்கு எடமே இல்லடி ரேவி.. சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் மட்டும்தாண்டி..
ரேவி..என்னிக்கிடி நா ஒன்னப் பாப்பேன்?
நெஞ்சு விம்மியது..உதடுகள் துடித்தன..கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிந்தது.
ரேவீ என்றபடி தூங்கிப் போனாள் சாரு.
அத்தியாயம் – 20
லோச்சு.. சாரு நம்மகிட்ட வந்து வெளையாட்டுப்போல பதினாலு வருஷம் ஓடிப் போயிடுத்தில்ல..நேத்துதா அவள அழச்சிண்டு வந்தாப்ல இருக்கு.சாரு வந்தப்பறம்தானே நமக்கே வாழ்க்கையில ஒரு பிடிப்பு வந்துது.
ஆமான்னா..சாருவுக்கும் இருவத்நாலு வயசு ஆயிடுத்து.கடசீ செமஸ்டர் எழுதியாச்சு.பாரே கொழந்தைய.. ஒரு செமஸ்டர் கூட அரியர் வெக்காம பாஸ்பண்ணி.. டாக்டராகப்போரா நம்ம சாரு..
ஆமா லோச்சு..சமத்து சாரு..
நம்மகிட்டதா எத்தன பாசம் அவுளுக்கு..அப்பான்னு அவ என்ன கூப்புடும் போதெல் லாம்..அப்டியே..அப்டியே நெஞ்சுக்குள்ள சந்தோஷ அல அடிக்கும்பாரு..அத விவரிக்கத் தெரீல லோச்சு.
கண்களைத் துடைத்துக் கொண்டார் தியாகு.
ஆமான்னா..எனக்கு மட்டும் என்னவா?சாரு அம்மா அம்மாங்கும்போதெல்லாம் அடிவயத்துல ஜிவ்வுனு ஏதோ பந்துமாதிரி உருண்டு கெளம்பும் பாருங்கோ..
அந்த உணர்வுக்கு ஈடே கெடையாதுன்னா.
பாசம்மிக்க அந்த இரு நெஞ்சங்களிலும் ஏற்பட்ட நெகிழ்ச்சி கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.
லோச்சு..எனக்கும் வயசு அம்பத்தெட்டு ஆகப்போறுது.
ரிடயராக இன்னும் ஒருவருஷம்தா இருக்கு..
எனக்கு மட்டும்?..அம்பத்தாறு வயசாச்சு..வயசுக்கென்ன அதுபாட்டுக்கு ஓடறது..
இல்ல லோச்சு..எதுக்கு சொல்ல வரேன்னா..
சாருவும் படிப்ப முடிக்கப் போறா..மாப்ள பாக்கனா ஆரம்பிக்கலாமா?டாக்டர் பையனாவே பாத்தா.. சரியாருக்கும்ல..ரெண்டு பேருமா ஒரே தொழில்ல இருந்தா..
சிரித்தார் வோச்சனி..ஒங்க ஆச சரிதா..ஆனா சாரு..
படிச்சுமுடிச்சதும் கல்யாணமா? எம்பிபிஎஸ்லாம் போதாது..
எம் டி..பண்ணும்னு ஆசப்பட்டா?..
எதாவதொரு ஹாஸ்பிடல்ல வேல பாத்துண்டே எம்டி பண்ணணும்..இல்லாட்டி டிஜிஓ பண்ணனும்மான்னு ஒருநாள் பேச்சுப்ளாக்குல சொன்னா..
அப்டியா..படிப்புக்கு ஏது எல்ல..அவ ஆச அப்டீன்னா..
நாம ஏ தடையா இருக்கப் போறோம்?
டாக்டர் முரளிகிருஷ்ணா சார் என்ன பலமான யோஜனேல இருக்கார்னு இந்த சாரு பொண்ணு தெரிஞ்சிக் கலாமா?
ஏதோ யோஜனையோடு அமர்ந்திருந்த முரளியின் வாயைக் கிண்டினாள் சாரு.
என்ன மேடம் கேட்டீங்க?
என்ன மேடமா?
ஓ..டாக்டர் மேடம்னு சொல்லிருக்கணுமா?வெறுமன மேடம்ட்டேனா?
நா இன்னும் டாக்டராகல..
ரிசல்ட் இன்னும் வல்ல..
நீங்கதா டாக்டராயாச்சு..
எம்டிக்கு வேற முயற்சி செஞ்சாருது..
ப்ச்..அதெல்லாம் சரிதா சாரு..
தாத்தாவோட அன்பு வேண்டு கோளும்..நச்சரிப்பும் தாங்க முடீல..
மாயவரம் வந்துடு..பம்பாய்ல டாக்டர் தொழில் பாக்க வேண்டாம்.
படிப்ப முடிச்சப்பறம் தேவயில்லாம ரெண்டு வருஷத்துக்குமேலா எதுக்கு
பம்பாய்ல இருக்க..இங்க வந்து மேற்படிப்பு படி..தனியா க்ளீனிக் வையின்னு நமநமன்னு புடிங்கியெடுக் கறார்.
தாத்தாவும் பாவாந்தா.
வயசான காலத்துல எத்தன காலந்தா தனியா இருக்கறது?
நானும் மூணுமாசத்துக் கொருதடவ போய் தாத்தாவ பாத்துட்டுதா வரேன்.
அதெல்லாம் போறாதாம்.
அவரோடயே இருக்கணுமாம்.
அதுவும் கல்யாணத்தப் பண்ணிக்கடா..இருவத்தெட்டாறது வயசுன்னு வேற இப்ப பொலம்ப ஆரம்பிச் சாச்சு.தாத்தா சொல்றது ஞாயம்னுதா எனக்குப் படறுது.ஆனா எனக்குப் பட்டு என்ன பிரயோஜனம்? படவேண்டியவாளுக்குப் படலியே?சாருவின் முகம் பார்த்துச் சிரித்தான்.
ஓஹோ..தாத்தா சொல்றது சார்க்கு ஞாயமாதா படறுதா?
அப்ப தாத்தா பொண்ணு கிண்ணு பாத்துவெச்சிருந்தா கல்யாணத்தப் பண்ணிக்க வேண்டிதுதானே?..
அப்பாடி..சாருவே சொல்லி யாச்சுப்பா..தாத்தா பொண்ணு கிண்ணு பாத்து வெச்சிருந்தா தாலிய கட்டீர்றேம்ப்பா..
ததாஸ்து..(அப்படியே ஆகட்டும்)என்று அஸ்வினி குமாரர்கள் (நல்லதயே சொல்லும் தேவர்கள்) சொன்னது இருவர் காதிலும் பட்டிருக்க வாய்ப்பில்லை.
ஓ..அப்ப சார் எந்தப் பொண்ணுக்குனாலும் தாலிகட்டத் தயார்.. அப்டித்தானே? வாழ்த்துக்கள் சார்..நா வரேன்..
பொய்க்கோபத்தோடு சட்டென எழுந்து இரண்டடி நடந்தாள்.
சாரு..சாரு..சும்மா சொன்னே..சும்மா சொன்னே..நம்பிட்டீங்களா?
என்று சட்டெனக் கைநீட்டி சாருவின் கையைப் பற்றி தன் பக்கம் இழுத்தான் முரளி.
சட்டெனத் திரும்பினாள் சாரு.
என்னயிது?
எது?
எங்கை ஒங்க கைக்குள்ள இருக்கு?..எத்தன்னாளா..கையப்புடிச்சி இழுக்க ஆச?
கடவுளே..இல்ல..இல்ல..
வெளையாட்டுக்கு தாத்தா பொண்ணுகிண்ணு பாத்து வெச்சிருந்தா தாலிய கட்டீர்றேம்ப்பான்னு சொன்னத நெஜம்னு நம்பி நீங்க கோச்சிண்டு எழுந்து போறீங்களோன்ற பயத்துல..சட்டுனு தெரியாம.. அவசரத்துல..
ஓ..நீங்க சொன்னத நம்பி..
நா கோச்சுண்டு எழுந்து போறதா நெனச்சு நீங்க பயந்துபோய்..என்ன செய்யறதுன்னு தெரியாம..
அவசத்துல.. எங்கையப் புடிச்சி இழுத்து என்ன தடுத்து நிறுத்திட்டீங்க..
அதானே?
நீங்க சொன்ன காரணத்த நா அப்பிடியே நம்பிட்டே போதுமா?
அடியம்மாடி..வெறுமன கைய தொட்டத்துக்கு இத்தன விமர்சனமா?ஆத்தாடி..
நாம பழக ஆரம்பிச்சு நாலு வருஷத்துக்கு மேலாச்சு..
நா இதுவர ஒங்க வெரல யாவது தொட்ருப்பேனா சாரு?
சிரித்துவிட்டாள் சாரு.அதா எ
முரளிங்கிறது.
சும்மாதா கோச்சிண்டாமாரி நடிச்சி..எழுந்துபோறாப்ல போனேன்..நீங்களும் அத ஒன்னும் நம்பல..நம்பல தானே?சும்மாதானே பயந்தாப்ல நடிச்சேள்தானே?
அய்யய்ய என்ன சாரு இது?
நடிச்சேந்தா..நானாவது எ சாருவவிட்டு இன்னொரு பொண்ணு கழுத்துல தாலிகட்றதாவது?கற்பனை யாகூட நெனச்சுப் பாக்கமாட்டே..அப்பிடியான கனவக்கூட எனக்குவரதுக்கு அனுமதிக்கமாட்டே.
சாரு..
ம்..
ஒங்க படிப்பும் முடிஞ்சாச்சு..
ஏற்கனவே மூணு வருஷத்துக்கு முன்னாடி நாம பேசினாமாரி..எங்கியாவது போலாமா?இதே பார்க் போரடிச்சுப்போச்சு சாரு. ப்ளீஸ்..
அவன் சொல்வதும் சரியென்றே பட்டது சாருவுக்கு.
முரளி.. ஜுகு பீச்லாம் வேண்டா..பீச்னா சாயந்திரந்தா போகலாம்.
எப்பபோய்ட்டு எப்ப ஆத்துக்குப்போறது.ராத்திரி பத்துமணி பதினோரு மணின்னு ஆத்துக்குப் போவாளா? அம்மா அப்பா கவலப்படுவால்ல?
கிட்டத்துல எங்கியாவதுனா போலாம்.
ஃப்ரெண்டு வீட்டுக்குப் போறதா சொல்லிட்டுனா வரே..ஆனா ஆத்துக்கு சாயந்திரம் ஏழுமணிக்குள்ள போயிடணும் சரியா?
சரிங்கம்மா..சரிங்க மேடம்.. ஒங்க விருப்பப்படியே செய்வோம்.
பூட் ஹவுஸ்னா போவமா?அதா கிட்டக்க இருக்கு.
ஓகே..
நாளை காலேல ஒம்போது மணிக்கெல்லாம் இதே பார்க்ல பாப்போம்.
நிமிஷத்துக்கு ஒரு மின்சார ரயில் போகுது..போய்டலாம்.
சாயந்திரம் வந்துடலால்ல..
வந்துடலா சாரு. திடீர்னு எதிர்பாரா விதமா நாளைக்கு எல்லாவித போக்குவரத்தும் நிறுத்தப்பட்டாலும் ஒங்கள தோள்ளயாவது தூக்கிண்டு ஓடிவந்து ஒங்காத்துவாசல்ல ஒங்கள கொண்டுவந்து எறக்கிடறேன் போதுமா?
ம்..இப்பிடி நடந்தா எந்த புள்ளையார்க்கு நூத்தி யெட்டு தேங்கா ஒடைக் கிறதா வேண்டுதலோ?
எதுக்கு வேண்டுதல்?
என்ன தோள்ள தூக்கிக்க..
ஹோஹோஹோ..அடக்கமுடியாமல் சிரித்தான் முரளி.
காலை மணி ஏழு.
என்ன சாரு..காலேஜ்தா முடிஞ்சுபோச்சே?அதுக்குள்ள எதுக்கு எழுந்திண்ட?இன்னும் சித்தநாழி படுத்துண்ருக்கலாமோனோ?
நாதா ஆபீஸ் போணும். சீக்கிரம் எழுந்திருக்கணும் ஒனக்கென்ன அவசரம்?
லோச்சனி கேட்கவும்..
அம்மா நைட்டே சொல்ல ணும்னு நெனச்சே..
காலேல ஒம்போது மணிக்கு ஒரு ஃப்ரெண்ட பாக்க அவா வீட்டுக்குப் போணும்.ரிசல்ட் வந்தப்பறம் என்ன செய்ய லாம்னு நாலு ஃப்ரெண்டா கலந்து பேசலாம்னு..
ஓ..போய்ட்டு வாயேன்.
சாயந்திரமாகும் திரும்ப..பரவால்லியாம்மா..
ஏ..எதுவும் பிக்சருக்கு போறாப்லயா..
இல்லல்ல..சும்மா பேசிண் ருக்கதா..
சரிசரி போய்ட்டு வா..ஆத்லயே கொட்டு கொட்டுனு ஒக்காந்துண்டு என்னதா செய்வ?
அப்ப சாரு இன்னிக்கு தோழிகளோடு என்ஜாய் பண்ணப்போறா..என்ஜாய்..
என்ஜாய்.. என்று பின்னால் நின்ற தியாகு சொல்லி விட்டுச் சிரித்தார்.
எப்பேர்ப்பட்ட அம்மா அப்பா இவர்கள்?இவர்களிடம் போய் பொய் சொல்றோமே?..
நெஞ்சு சுட்டது சாருவுக்கு.
காதல் இப்படித்தான் நிஜமான அன்பைத் தருபவர்களிடம் கூட பொய் சொல்ல வைக்குமோ?
காதல் பொல்லாததோ?
மலபார்ஹில்..கமலா நேரு பார்க்.அன்று வானிலை மிக இதமாய்..குளிர்ச்சியாய் இருந்தன் காரணமாக வெய்யிலின் தாக்கம் கொஞ்சமுமில்லை.
அதனாலோ என்னவோ பார்க்கில் கூட்டம் கணிசமாக அதிகமிருந்தது.
ஒருபெரிய..உயரமான ஷுவைப்போல கட்டப் பட்டிருந்த வீடுபோன்ற வடிவதிலிருந்தது அந்த பூட்ஹவுஸ்.
மாடிப்படிகள் போல நிறையபடிகள் இருந்தன.படிகளில் ஏறி பூட்ஹவுஸின் உச்சிக்குச் செல்லலாம்.
குழந்தைகளின் ஆரவாரமே மிகுந்திருந்தது.
முரளியும் சாருவும் யார் விரைவாகப் படியேறு கிறார்களெனப் போட்டி போட்டுக் கொண்டு ஏறினார்கள்.
மாடிப்படிகளில் போட்டிபோட்டு ஏறி உச்சிக்குச்சென்று அங்கிருந்து தூரத்தில் சின்னச்சின்னதாய்த் தெரிந்த கட்டிடங்களைப் பார்த்து ரசித்தார்கள். அருகருகே நின்றார்கள்.
சார்..இன்ஸ்டன்ட் ஃபோட்டோ சார்..கையிலயே ஃபோட்டோ கிடைக்கும் சார்..
கையில் கேமிராவுடன் சுற்றிச்சுற்றி வந்தார்கள் ஃபோட்டோகிராபர்கள்.ஹிந்தியில் தொணதொணத்தார் கள்.மறுத்தாலும் திரும்பத் திரும்ப வந்தார்கள்.
சாரு..எடுத்துப்பமா?தமிழில்தான் சாருவிடம் கேட்டான் முரளி.
பெரும்பாலும் இதுபோன்ற
பொதுமக்கள்கூடும் முக்கியமானஇடங்களில் சுற்றிவரும் புகைப்படமெடுப் பவர்களும்..கெய்டுகளும்
அவர்களின் தாய்மொழி தவிர பிறமொழிகளிலும் ஓரளவு பரிச்சியம் உள்ளவர் களாய் இருப்பார்கள்.
முரளி சாருவிடம் கேட்டது புரிந்துபோன ஃபோட்டோ கிராபர் அவர்களை விடவேயில்லை.
பூட்ஹவுஸின் உச்சியில் அருகருகே..அரையடி இடைவெளிவிட்டு நின்று
ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர்.
எடுத்துக்கொண்ட அடுத்தநிமிடம் அந்த போட்டோவை முரளியிடம் நீட்டினார் ஃபோட்டோகிராபர்.
ரெண்டு காப்பி..என்றான் முரளி.
இன்னொன்றைத் தரும்போது..லவ்லி பேர் என்றார். அடுத்த போட்டோவுக்கான வலை விரிப்பதென்பது இதுதான்.
முரளிக்கு இந்த தொழில் தந்திரம் தெரியும்தான்.
கிடைக்கும் வருமானம் தானே போட்டோ எடுப்பவருக்கு ஆதாரம்.
சார் கீழ பார்க்ல..நெறையா லோகேஷன் இருக்கு சார்..அங்க ஒரு ஸ்னாப்..
தூண்டினார்.
நோ..நோ..இனஃப்..
பர்ஸை எடுத்தான்..
சார் நீங்க வாங்க.. புடிச்சா எடுத்துக்குங்க..ஹிந்தியில் கெஞ்சினார்.
ஏனோ மறுக்கமுடியவில்லை.
கீழே இறங்கி பார்க்குக்கு வந்தார்கள்.
ஃபோட்டோகிராபர் சட்டென பார்க்கில் இயற்கைச் சூழலாய் அழகு கொஞ்சும் ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றார்.
முரளியையும் சாருவையும் இப்படி அப்படியென்று நிற்க அறிவுறுத்தினார்.எத்தனை ஜோடிகளை போட்டோ எடுத்த அனுபவமோ.
அதையெல்லாம் ஏற்க வில்லை இருவரும்.
மாடியில் அருகருகே அரையடி இடைவெளிவிட்டு நின்றவர்கள்..இப்போது எதிரெதிராய் ஒருவரை யொருவர் பார்த்தபடி அரையடி இடைவெளிவிட்டு நின்றனர்.விரலும் படவில்லை.
சாருவை காதலோடு பார்க்கும் முரளி.. தன்னைப்பார்க்கும் அவன் கண்களை வெட்கம் கலந்த முகத்தோடும் புன்னகை யோடும் பார்க்கும் சாரு..
அவர்கள் அப்படி நிற்கவேண்டுமென்று நினைத்து நிற்கவில்லை..
இயற்கையாய் அமைந்து விட்ட தோற்றமது.
க்ளிக்..
க்ளிக்கப்பட்ட அப் புகைப்படத்தின் இரண்டு காப்பியை நிமிடநேரத்திற் குள் முரளியிடம் நீட்டினார் ஃபோட்டோகிராபர்.ரியலி ஃபன்டாஸ்டிக் என்றார்.
குரலில் உண்மை தெரிந்தது.
நாலு போட்டோக்களுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு ஃபோட்டோ கிராபர் போயாயிற்று.
பார்க்கின் சிமெண்ட் பென்ச்சில் அமர்ந்து கொண்டார்கள்.
நிதானாமாய் இரண்டு போட்டோக்களையும் பார்த்துப் பார்த்து ரசித்தார்கள்.
சாரு..ரெண்டாவதா எடுத்தபோட்டோ எப்பிடி இருக்கு?
நீங்கதா சொல்றது..
பாரே..சாருவ..என்ன நிமிந்து பாக்கற அந்த பார்வ.. மொகத்துல தெரியிற வெக்கம்.. வெக்கத்தால ஒதட்டுல தேங்கி நிக்கிற புன்னக..அய்யோடி.. நெஞ்சத்த அப்டியே கிள்றீங்க சாரு..
சாரு அழகு..ரொம்ப அழகு..
ம்..என்ன பாத்துண்டு எனக்கு எதுத்தாப்ல நிக்கராறே முரளிகிருஷ்ணா அவர் மட்டும் என்னவாம்?
அவர் கண்கள்ள தெரியிற அந்த அன்பும்.. லவ்வும்..
யம்மாடி இந்தமாரி நல்லவரான.. வல்லவரான.. அன்பான..அழகான..பண்பான லவ்வர் எந்த பொண்ணுக் குக் கிடைப்பாராம்?
எனக்கு அதாட்டம் அத்தன நல்ல கொணத்தோடும் உள்ள ஒருத்தர் லவ்வரா கெடச்சிருக்காருப்பா..நா லக்கிப்பா..ரொம்ப லக்கிப்பா..
சொல்லிவிட்டுக் கலகல வென்று சிரித்தாள் சாரு.
சிரிப்பில் சந்தோஷம் பொங்கி வழிந்தது.
சாரு..ஒங்குளுக்கு இதுல ஒரு போட்டோ அதுல ஒரு போட்டோ..
நீங்க வெச்சுக்கற போட்டோல
நா எம்பேர எழுதறே.. நா வெச்சுக்கற போட்டோல நீங்க
ஒங்கபேர எழுதுறீங்களா சாரு?ஆவலோடு கேட்டான் முரளி.
அந்த நேரத்தில் என்ன தோன்றியதோ சாருவுக்கு..
வேண்டா முரளி என்றாள்.
சரி..என்றான் முரளி லேசாய் குரலில் வருத்தம் தெரிந்தது.
தனக்கான போட்டோக்களின் பின்புறத்தில்..
நானும்-என் ஜீவனும் என்று எழுதினான்.
நான்: முரளிகிருஷ்ணா..
என் ஜீவன்: சாருலதா..
என்று எழுதி..இவண்..
முரளிகிருஷ்ணா என்று கையொப்பமிட்டு.. தேதி மாதம் வருடம் குறித்தான்.
பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.
இந்த போட்டோக்கள் தன் வாழ்க்கையையும் சாருவின் வாழ்க்கையையும் எந்த எல்லைக்குக் கொண்டுபோய் நிறுத்தப்போகின்றன என்று அப்போது அவன் அறிய வில்லை.
முரளியின் பேன்ட் பாக் கெட்டிலிருக்கும் போட்டோக் கள் தங்கள் வாழ்க்கையில் விதியாய் மாறி நடத்தப் போகும் கொடும் நாடகத்தை சாருவும்தான் எப்படி அறிவாள்?
அத்தியாயம் – 21
சாரு..வரீங்களா இன்னொரு தடவ படியேறி மேல போவம்?
வேண்டா..கொழந்தைகளுக்குனா புடிக்கும்.. நமக்கென்ன?பார்க்கனா சுத்திட்டு வரலாமா?
சுத்தி வந்தாயிற்று..மணி பகல் ஒன்று.
லேசா பசிக்குது சாரு.. ஒங்குளுக்கு?
எனக்கும்தா..
பார்க் ரெண்டுமணியோட சரி.மறுபடி நாலுமணிக்குதா.
வீட்டுக்குப் போய்டுவமா?
அதுக்குள்ள என்னோட பேசிண்ருக்கறது போரடிச்சிடுத்தா சாருவுக்கு?
அய்யோ அப்பிடியில்ல.. சாயந்திரம்வர எங்கபோய் ஒக்காந்திருக்கிறது?
மெரைன் டிரைவ் போவமா?
இங்கேந்து கிட்டதா இருக்கு.
குவீன்ஸ் நெக்லஸ் பாப்பமா?
ஹோட்டல்ல சாப்டுட்டு ஹோட்டல் மாடீல ஏறிநின்னு
பாத்தா லைட் வெளிச்சத்துல பாக்க நல்லாருக்கும்.
ஆறுமணிவர சூரிய வெளிச்சமிருக்கும்.அதுக்கபறம்தா கடைங்க..பெரிய பெரிய பில்டிங்லலா லைட் போடுவாங்க..அப்பபாத்தா
லைட் வெளிச்சம்.. ராணி கழுத்துல மாட்டிருக்கற நெக்லஸ்மாரியான தோற்றத்துல தெரியும்.
சூரிய வெளிச்சத்துல என்னத்தபாக்கறது?சாயந்திரம் ஏழு மணிக்கில்லாம் ஆத்துக்குப் போயிடணும். அப்பபோயி க்வீன்ஸ் நெக்லஸ் பாத்துண்ருக்க முடியுமா?
அப்பறம் எத்தனமணிக்கு ஆத்துக்குப்போவா?கவலப்பட மாட்டா?
கடவுளே என்றான் முரளி.
சரிவாங்க எதாவது ஹொட்டல்ல போய் சாப்புடுவோம்.அப்பறம் ஆத்துக்கோ கொளத்துக்கோ போயிடலாம்.
ஹோட்டல்..
தேவையை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தார்கள்.
சாரு சொல்ல மறந்துட்டேனே..
என்ன முரளி..முக்கியமான விஷயமா?
இல்ல..நா கடசியா தாத்தாவப் பாக்க மாயவரம் எப்பபோனே ஞாபக மிருக்கா?
உதட்டைப் பிதுக்கினாள் சாரு.
கரெக்டா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி.
பொதுவா மூணுமாசத்துக்கு ஒருதடவ தாத்தாவ போய்ப்பாப்பேன்.அப்பிடிப் பாத்தா அடுத்தமாசம் மாயவரம் போணும்.
அடுத்தமாசந்தானே போணும்.அதுசரி மூணு மாசத்துக்கு ஒருதடவ மாயவரம்போக லீவு எப்பிடி குடுக்கறாங்க நீங்க வேலபாக்கற ஹாஸ்பிடல்ல?
நா மாச சம்பளத்துக்கு வேல பாக்கலீல்ல..சுயவிருப்பத்தோட.. சேவை மனப்பான்மை யோடதானே வேல பாக்க றேன்.அதுனால தினம் போயே ஆகணுங்கிறது இல்ல.இஷ்ட்டப்பட்ட நாள்ள போலாம்.
மாயவரம் போய் செட்டிலானப்றம் தா சொந்தமா கிளினிக் வைக்கணும்.நீங்களும் வரணும்.எப்பிடியும் நீங்க ஆறுமாசம் ஒருவருஷத்துல
மிஸஸ் முரளிகிருஷ்ணாவா
என்னோட வந்துட மாட்டீங்களா?
அங்க வந்தப்றம் மகப்பேறு மருத்தும் படிக்கலாம்.
இனிமே தாத்தாவ சமாளிக்க முடியாது ஐயாவால..
தாத்தாவ சமாளிக்கமுடியல.. அதுனால பொண்ணு பாக்கபோனே..தாத்தாக்கு பதில் சொல்ல முடீல அதுனால தாத்தா பாத்துவெச்ச பொண்ணுக் குத் தாலி கட்டினேன்னு
ஏதாவது வேல செஞ்சு வெச்சீங்க.. நேராவந்து சட்டைய புடிச்சி மொத்துவே..
பத்தரம்.. ஜாக்ரத..சிரித்தாள் சாரு.
சிரித்தான் முரளி..
இன்னொரு பொண்ணுக்கு தாலிகட்ரதா?..வெளையாட்டுக்குகூட சொல்லாதீங்க சாரு..
சாரு இல்லாத வாழ்க்கையா..
சாருவமறந்து எ உயிர் வாழுமான்ன?கண்கலங்கிப் போனான் முரளி.
முரளி..நீங்க இல்லாம இந்த சாரு இல்ல முரளி.. செத்துடுவேன்..ஹோட்டல் என்பதையும் மறந்து கேவினாள் சாரு.
சாரு அழாதிங்க..அப்டீல்லாம் நாம பிரிஞ்சிடமாட்டோம்.
இந்தமொற தாத்தாவப் பாக்கப்போகும்போது தாத்தாகிட்ட நம்ம மேட்டர சொல்லிடுவே சாரு..தாத்தா ஓகேனுதா சொல்லுவா.
ஒங்காத்லதா..
ஒங்கள மறுக்குற அளவுக்கு எ அப்பாவும் அம்மாவும் மொரட்டு கொணம் கொண்டவா இல்ல முரளி.
ரொம்ப தன்மையானவா.
அப்பறம் என்ன சாரு கவலப்பட இருக்கு?
இப்பக்கி கவலலெல்லாம்
தாத்தா வாரம் ஒரு லெட்டர் போடுவாரு.தவறவே மாட்டாரு.ஆனா மூணு வாரமாச்சு தாத்தாட்டேந்து லெட்டரே இல்ல..அதா கவலையா இருக்கு.
பத்துநாள் முன்னாடி நானே தாத்தாக்கு லெட்டர் போட்டேன்.அதுக்கும் பதிலில்ல.என்னடாதுன்னு இருக்கு.
போஸ்ட்டாபீசுக்கு ட்ரங்கால் போட்டு தாத்தாவக்கூப்ட லாம்னா.. ஊர் போஸ்டாபீஸ் ஃபோன் வேல செய்யல.. என்ன செய்யறதுன்னு தெரியல..
போய்னா பாத்துட்டு வந்துடலாமான்னு தோணுது.
நாளநாளன்னிக்குள்ள தாத்தாட்டேந்து லெட்டர் வல்ல நா நேர கிளம்பிப் போய்டலாம்னு இருக்கே.
ஒன்னுமிருக்காது..கவலப்படவேண்டா முரளி..வயசானவா இல்லையா எதாவது ஒடம்புகிடம்பு சரியில்லாம இருக்கும்.லெட்டர் வரும்.
இல்ல சாரு போய்ட்டு வரலாம்னு பாக்கறேன்.
போய்ட்டு எப்ப திரும்ப றாப்ல?நீங்க வந்தாச்சுனு எப்பிடி தெரிஞ்சிப்பேன்?
அதானே..காலேஜ் இருந்தாலாவது குறிப்பிட்ட எடத்துல நிப்பே..நீங்க காலேஜ்லேந்து திரும்புபோது பாக்கலாம்.இப்ப அதுக்கும் வழியில்ல..
தினமு சாயந்திரமானா நாம வழக்கமா சந்திக்கிற பார்க்குக்கு வந்துவந்து பாக்கமுடியுமா?ஆத்துல என்ன காரணத்த சொல்லிட்டு தெனமு வரது?
கவலையாய் இருந்தது இருவருக்குமே.
பேசாம ஒங்காத்து அட்ரஸுக்கு லெட்டர் போட்ருவா?ஒங்கம்மாவும் அப்பாவும் ஆபீஸ் போயிடுவா..நீங்க மட்டும்தானே ஒங்காத்ல இருக்கப்போறது?
அய்யய்யோ..யாராவது ஒருத்தர் எதிர்பாக்காம லீவு போட்டுட்டு ஆத்ல இருந்தா?
ஃப்ரெண்டு லெட்டர் போட்ருக்கறதா சொல்லி சமாளிக்க வேண்டிதுதா.
நா வேண்ணா ஃப்ரம் அட்ரஸ்ல பொண்ணுபேர எழுதவா?
அப்டியே ஒங்கம்மாவோ அப்பாவோ பிரிச்சு படிச்சாலும்..டீ சாரு நா ஊர்லேந்து வந்தாச்சு. பார்க்குக்குவரியா?இன்னும் ரெண்டுமூணு பொண்ணு பேர குறிப்பிட்டு எழுதி அவாளும் வரேன்னா..
நீ வரியான்னு கேட்டு எழுதி பொம்பளமாரி கையெழுத்து போட்டு அனுப்பவா?ஒங்க ப்ரெண்டுங்க பேர் நாலஞ்ச சொல்லுங்க..பேரக் குறிப்பிட..சிரித்தான்.
இப்பிடிப்பண்ணா சந்தேகமே வராது.வேற எதுவும் எழுதமாட்டேன்..அவா கண்டுபுடிச்சிர்றாப்ல..
அட கிரிமினல்..ஃபோர்ஜரி சிரித்தாள் சாரு.
வேறு வழியில்லை. அப்படியே செய்வதென்று தீர்மானமாயிற்று.
அவன் தன் மாயவரம் வீட்டு முகவரியை சாருவிடமும்.. இவள் இப்போதிருக்கும் தன் வீட்டு முகவரியை முரளியிடமும் கொடுத்துக்
கொண்டார்கள்.
சாரு மணி மூணுதா ஆகப் போறது.நீங்க வீட்டுக்கு எப்ப போணும்?
ஏழு மணிக்கு.
அப்ப மறுபடியும் வழக்கமா
சந்திக்கிற பார்க்குக்குக் போவமா?கொஞ்ச நாழி பேசிண்ருக்லாமில்ல..
ம்..சரி.
பார்க்.
முரளி..நீங்க தாத்தாவப்பாக்க போணும்தா..ஆனா..
என்னாச்சு சாரு..வழக்கமா போறதுதானே.
இல்ல..இந்தமொற நீங்க ஏம் போறேள்னு தோணுது முரளி.
சிரித்தான் முரளி..அட என்னாச்சு சாருவுக்கு?நாலுநாள்ள திரும்பி வந்துடப்போறேன்.எப்பவு இப்பிடித்தானே?
என்னமோ தெரீல முரளி மனசு அமைதியில்லாம அல்லாடறாப்ல இருக்கு..
ஏ..சாரு எந்தாத்தாக்கு எதாவது ஆயிடுமோன்னு தோணுதா?
இல்ல..
அப்ப எனக்கு எதாவது ஆகிடுமோன்னு..
முரளீ..
அப்பறம்?இப்பிடியா பயப்படுறது?..
போய்ட்டு நம்ம கல்யாணத்துக்கு தாத்தா வோட சம்மதத்தோட ஒங்கள சந்திப்பே.. காத்துக்கிட்டே இருங்க..
ம்..ஏனோ சாருவின் கண்களில் கண்ணீர் தளும்பியது.அதைமறைக்க முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு கண்ணீரை தோளில் படர்ந்திருந்த துப்பட்டாவில்
ஒற்றித் துடைத்தாள்.
சாரு என்னச்சுப்பா.. அழறீங்களா? இப்டீல்லாம் எமோஷனல் ஆகமாட்டீங்க?
வழக்கமா போய்ட்டு வரதுதானே?இப்பமட்டும் என்னாச்சு சாருவுக்கு..
திரும்புங்க..திரும்புங்க..
இல்லாட்ட நானே மொகத்தத்
தொட்டு எம்பக்கம் திருப்புவே..அப்பறம் சிலம்பேந்திய கண்ணகியா என்ன வார்தையால வறுத்தெடுக்கக்கூடாது.
சட்டென அவன் பக்கம் திரும்பிச்சிரித்தாள் சாரு..
சிரிப்பும் அழுகையும் சேர்ந்த கலவை.தவித்துப்போனான் முரளி.
எப்பவும் இப்பிடி நடந்துக் கவே மாட்டாங்க சாரு..ஏ இன்னிக்கு இப்பிடி?
சாருவின் தவிப்பும் அழுகையும் அவனயும் தொற்றிக்கொண்டதோ..
அவன் கண்களும் கலங்கிப்போயின.
சாரு என்றான்..குரல் கரகரத்தது..நா போகல..
இணைந்த இவ்விரு இதயங்களையும் பிரித்து ஆட்டம்காட்டி சந்தோஷப்பட கொடும் விதிகூட கொஞ்சம் தவித்துதான் போகும்.
ஆனாலும் இவர்களைப் பிரிக்கத்தான் வேண்டும் வேண்டும் என்ற விதி.. விதிக்கு விதிக்கப்பட்டிருக் கும்போது விதியால் என்ன செய்யமுடியும்?
இதுதான் தாங்கள் சந்திக்கும் கடைசி சந்திப்பா? இல்லை தங்களின் வாழ்க்கையில் மீண்டும் என்றாவது சந்திப்போமா? விதி என்ன செய்யக் காத்திருக்கிறது?அது நடத்தப்போகும் காரியங்கள் எப்படியாய் இருக்கப்போகிற தென்றெல்லாம் முரளியும் சாருவும் எப்படி அறிவார்கள்?
ம்ஹும்..ம்ஹும்..முரளி நீங்க தாத்தாவப்பாக்க போய்ட்டு வாங்க..போகாமல்லா இருக்கவேண்டா..பாவம் தாத்தா..என்றாள் சாரு செயற்கையான புன்னகை யுடன்.
ஹோய்..சாரு பொய்யா சிரிக்கிறாங்க..பொய்யா சிரிக்கிறாங்க..இது நெஜமான புன்னகையில்ல..
சாரூ..அடுத்தவாரம் நாம ரெண்டுபேரும் இதே நேரம் இதே பார்க்ல சந்திக்கிறோம்.
சரியா?
வரும்போது மாயவரத்து லேந்து மெட்ராஸ் வந்து மெட்ராஸ்லேந்து ஃப்ளைட்ல பம்பாய் வந்துடறேன். ரெண்டுநாள்தா தாத்தா வோட..சரியா?
கிளம்புற அன்னிக்கு மாயவரத்துலயே லெட்டரெழுதி போஸ்ட் பண்ணீர்றேன்.சரியா? எங்க
சிரிங்க..அழுத மூஞ்சியா ஒங்களப் பாத்துட்டுப்போனா
எனக்கு மனசே சரியாயிருக் காது சாரு..எங்க சிரிங்க ப்ளீஸ்.
பளிச்சென்று பற்கள் தெரிய சிரித்தாள் சாரு..
இதா..எ சாரு..சட்டென அவள் தோள்தட்டி அவளின் தலை தொட்டு தலையைச் செல்லமாய் அப்படியும் இப்படியும் ஆட்டினான் முரளி.
ஹோய்..என்ன இது?என்றாள் சாரு பொய்யாய்.. கோபப்படுபவள்போல்.
சட்டென கைகளைத் தன் கன்னங்களில் வைத்துக் கொண்டு..அம்மணி.. அம்மணி கோச்சுக்காதிங்க
அம்மணி என்றான் முரளி பயந்தவன் போல்.
பக்கென்று சிரித்துவிட்டாள் சாரு.
அப்பாடி சாரு சிரிச்சிட்டாங் கப்பா..நிம்மதிப்பா என்றான் சந்தோஷமாய்.
கிளம்புவமா சாரு.இப்ப கிளம்பினாதா நீங்க ஆத்துக்கு ஏழுமணிக்குப் போகலாம்.
இருவரும் எழுந்தார்கள்.
பார்க்கைவிட்டு வெளிவரும் வரை மௌனமாகவே நடந்தார்கள்.
இருவரும் அவரவர் வண்டியில் ஏறும்வரை அமைதியே ஆட்சி செய்தது.
சாரு..சீக்கிரமே தாத்தாவோட சம்மதத்தோட ஒங்களப்பாக்க வந்துடுவேன்.எனக்காக எ சாரு காத்துண்ருப்பாங்க தானே?
நிச்சயமா முரளி..எ முரளியோட வருகைக்காக நா காத்துண்டே இருப்பேன்.
பை..சாரு..
பை..பை..முரளி..
வண்டிகள் இரண்டும் பிரிந்து
எதிரெதிர் திசையில் சென்றன.
வண்டிகள் மட்டுமா?அவர்கள் வாழ்க்கையையும் விதி வெவ்வேறு திசைகளில் கொண்டு செல்லுமா?
– தொடரும்…
![]() |
பெயர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன். ஊர்: காஞ்சிபுரம். காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் எனும் நான் ஓர் பெண். தங்கமணி எனும் பெயர் ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்துவதால் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். அதனால் தான் விளக்கம் தந்துள்ளேன். நிறைய சிறுகதைகள், தொடர்கதைகள், ஆன்மிகக் கதைகள், சிறார்களுக்கான கதைகள், கவிதைகள் வாராந்திர அச்சு ஊடகங்கள், மின்னிதழ்களில் காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்..தற்போதும் எழுதிவருகிறேன். கதைகள்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மிஸ்டர் எஸ்.கே.முத்து
நாஞ்சில்நாடன்
November 13, 2026
பரிதியைக் கண்ட பனி
சிங்கை மா.இளங்கண்ணன்
November 13, 2026
வாசல் தேடி வந்த வசந்தம்
கல்பனா ராஜகோபால்
November 13, 2026
