பேகம், உனக்கு யோகம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 339 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மும்தாஜ் பேகம் ஒன்பது வயதுச் சிறுமி. கோவை பெரிய கடை வீதி பாத்திமா கான்வென்டில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறாள்.

செலவுக்குக் கொடுத்த காசை சேமித்துவைத்தாள். ”ஈ மொய்த்த பண்டத்தை வாங்கிய ஈஸ்வரனை கண்டித்தாள். அம்மா தந்த காசு, அப்பா தந்த காசு, மாமா தந்த காசு… அனைத்தையும் சேர்த்து வைத்து தமிழக லாட்டரிச் சீட்டு ஒன்று வாங்கினாள். ‘உண்ணாமத் தின்னாம லாட்டரிச் சீட்டு வாங்குவாங்களாக்கும்” என்று அவள் தோழி கேட்டாள். பேகம் சொன்னாள்: “விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு, தமிழக அரசின் தர்ம காரியத்தில் என் பங்கும் இருக்கட்டுமே” என்றாள்.

ஆம் அவளுக்குத்தான் அடித்தது யோகம், ஒரு லட்சம் ரூபாய். பேகம் வாங்கிய 102ஆவது குலுக்கல் எல் எல் வரிசை. 607944 என்ற எண்ணுக்கு ஒரு லட்சம் பரிசு கிடைத்தது.

சிறு வயதில் சேர்த்துவைக்கும் சேமிப்பு குடும்பத்தை நடத்தும் காப்பு நிதியாயிற்று.

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை கொள்ளக்கூடாது. ஆனாலும் உன் சிறுசேமிப்பு உன்னையும் உன் குடும்பத்தை யும் வாழவைத்தது.

சிறுக விதைத்து பெறுக அறுத்த சிறுமியே நீ வாழ்க!

”பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்” – [பிரசங்கி 10:19]

– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *