பசுவும் கன்றும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 107 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காந்திமதிபுரம் பண்ணையார் ஒரு கலைப்பித்தர். அவர் இந்த உலகத்தைவிட்டுப் பிரிந்தபொழுது ஒரு பெரிய கலைக்களஞ்சியத்தை வைத்துவிட்டுப் போனார். அவர் வீட்டுப் பட்டாசாலை’ தான் அந்தக் களஞ்சியம். 

அர்த்தமற்றவைபோல் தோன்றுகின்ற – ஆனால் அர்த்த புஷ்டியுள்ள – வடதேசத்துச் சித்திரங்கள் அறையின் வடக்குச் சுவரை அலங்கரிக்கின்றன. ‘நமது செல்வத்’தின் வளத்தை மிகவும் துலாம்பர மாய் எடுத்துக் காட்டும் தென்னாட்டுச் சித்திரங்கள் தெற்குச் சுவருக்கு அழகு தருகின்றன. வேடிக்கை யான மேல் நாட்டுச் சித்திரங்கள் மேலச் சுவரிலும், விசித்திரமான சீனச் சித்திரங்கள் கீழச் சுவரிலும் தொங்குகின்றன. 

இவை தவிர, கணக்கற்ற ஆண்டுகளாகச் சிற்பி களின் உள்ளத்தில் மறைபட்டுக் கிடந்த சிந்தனைகள் உருவெடுத்தனவாகப் பல விக்கிரங்கள், பளிங்கு போன்ற கல்லிலும் மரத்திலும் திறம்படக் கடைந் தெடுக்கப்பட்டவை, அறையில் அங்கங்கே அழகாக வைக்கப்பட்டுள்ளன. 

உயர்ந்த ஜாதி ‘வெப்பாலை’ மரத்தில் கடையப் பட்ட பல பொம்மைகளுக்குள் என்னை மிகவும் கவர் வது ஒரு பசுதான். தும்பைச் சுற்றிக்கொண்டுவந்து, கன்று மிகப் பதற்றத்தோடு மடியை முட்டிப் பால் குடிக்கிறது. பசு தன் கழுத்தை வளைத்துச் சாய்த் துக் கொண்டு கன்றைப் பரிவோடு நக்கிக் கொடுக் கிறது. இந்த அருமையான காட்சியைத்தான் மரத் தச்சன் அழகான உருவத்தில் வடித்திருக்கிறான். 

இந்த அற்புதமான பொம்மையைப் பார்க்கும் நண்பர்கள் எல்லாரும், அதை மிகவும் வியந்து ரசிப் பார்கள். எனக்கும் இதைக் காணும்போதெல்லாம் ஒரு சிந்தனை ஓடும். ‘பசுவும் கன்றும் போலத்தான் கலைஞன் உள்ளமும், ரசிகன் உள்ளமும். கன்றுக் குப் பால் எவ்வளவு ருசியோ, அவ்வளவு ருசி ரசிக உள்ளத்துக்குக் கலா அமுதம். உண்மையில் கன்றை நோக்கிப் பால் சுரக்கும் பசுவைப் போலத் தான், ரசிகனை நோக்கிச் சிந்தனை அமுதை வழங்கு கிறது கலைஞன் உள்ளம். பாலைக் குடித்துக் கன்று வளர்வதுபோல், கலா அமுதை அருந்திப் பண்படுகிறது ரசிக உள்ளம் என்றெல்லாம் பலவாறு எண்ணமிடுவேன். 

ஒரு நாள், பண்ணையாரிடம் கேட்டேன் “இந்த பொம்மையை எப்படி என்ன விலைக்கு வாங்கினீர் கள்?” என்று. அவர் அந்தக் கதையை விவரமாகச் சொன்னார். 

2

வடிவேலன் ஒரு கைதேர்ந்த மரத் தச்சன். அவ னுடைய தொழில் நாற்காலியும் மேஜையும் செய்வ தன்று. அவன் ஒரு கலைஞன். 

ஒரு சாதாரண மரத் தச்சனா யிருந்திருந்தால் வாழ்க்கை கஷ்டமில்லாமல் நடந்திருக்கலாம். ஆனால், அவன் அப்படியில்லையே! 

அவனுடைய மனைவி கோமதி “ஏதாவது சம்பாதித்து வா” என்று அடிக்கடி மிகவும் தொந்திரவு செய்வாள். கலையைப்பற்றி அவளுக்கென்ன? கத்தரிக்காய் இல்லையே என்றுதான் கவலை! “நாற்காலி மேஜை செய்தாலும் ஏதாவது கிடைக் கும். இந்தப் பாழாய்ப்போன தொழிலில் தம்பிடி பிரயோஜன முண்டா?” என்று மிகவும் மனம் புழுங்கிக் கூறுவாள். வடிவேலுக்கும் இது தெரியாமலில்லை. ஆனாலும், அவன் உள்ளம் வெறும் நாற்காலி மேஜைகள் செய்வதில் ஈடுபடவே மறுத் தது. அப்படி அவன் செய்தாலும் அவை கலைப் பொருள்களாகவே அமைந்தன: உபயோகப்படக் கூடிய விதத்தில் மலிவான வெறும் மேஜை நாற் காலிகளாக அமையவில்லை! 

பொம்மைகள் செய்வான். எங்கெல்லாமோ அலைந்து சிரமப்பட்டு விற்க முயல்வான். மிகக் குறைந்த விலைக்குத்தான் போகும். அந்தப் பணத் தைக் கொண்டுதான் ஜீவனம்! 

3

ஒருநாள் வடிவேலனுடைய வீட்டுக்கு நாலைந்து விருந்தாளிகள் வந்து விட்டார்கள். வடிவேலனால் என்ன செய்ய முடியும்? எங்கு போய்ப் பணம் சம்பாதிப்பான்? விற்பதற்கோ கையில் வெகு நாளாகப் பாடு பட்டுச் செய்த அந்தப் பசு ஒன்று தான் இருந்தது. ஒருதரம் அவன் ஒரு தாயின் வாஞ்சையையும் குழந்தையின் அவசரத்தையும் கண்டு அதை உருவகமாக்க முயன்றதன் விளைவு அது. அந்தத் தாயின் ஞாபகம் அவனுக்கு வர வேறு பல காரணங்களும் இருந்தன. ஆனால் அது வேறு கதை. 

“இதை விற்றுவிட்டு வாயேன்” என்று கோமதி சொன்னாள். அவ்வளவுதான். வடிவேலன் அவளை அடிக்கவே வந்துவிட்டான். “இதன் அர்த்தம் உனக்கென்ன தெரியும்?நான் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறேன் இதற்கு என்று, உனக்குத் தெரியுமா? உயிர் போனாலும், இதைக் கொடுக்கவே மாட்டேன். இந்தப் பசு நம் வீட்டை விட்டுப் போனால், வீட்டிலுள்ள லக்ஷ்மியே போய்விட்ட மாதிரி” என்று மிக்க ஆத்திரத்தோடு வடிவேலன் சொன்னான். 

“ஆமாம்; இப்பொழுது, நம் வீட்டில் லக்ஷ்மி கொலுவிருக்கிறாளாக்கும்” என்றாள் கோமதி. இதைக் கேட்டதும் வடிவேலன் கண்கள் சிவந்து விட்டன. கோமதி பேசாது போய்விட்டாள். 

எப்படியும், விருந்தாளிகளிடம் மதிப்பை விட்டுக்கொடாமல் நடந்து கொள்ள வேண்டு மென்றாள் கோமதி. “கடைக்காரனிடம் கடன் சொல்லி ஏதாவது வாங்கி வருகிறேன்” என்று வடிவேலன் கடைத்தெருவுக்குச் சென்றான். 

அவனுக்கு ஒருவரும் கடன் கொடுக்கமாட் டார்கள் என்று கோமதிக்கு நன்றாய்த் தெரியும். ‘அவர் பாட்டுக்கு என்ன வேண்டுமானாலும் சொல் லிக்கொள்ளட்டும். நாம் எங்காவதுபோய் இதை விற்றுவிட்டு வருவோம். அப்படிச் செய்தால்தான் இன்றையப் பாடு கழியும்’ என்று கருதி, கோமதி அந்தப் பொம்மையை எடுத்துக்கொண்டு ரத வீதி சென்றாள். 

அநேக ரசிக சிகாமணிகள்’ அந்தப் பொம்மை யின் வாடையே ஒத்துக்கொள்ளாது என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாகக் கோமதிபண்ணை முதலாளி வீட்டிற்கு வந்து “பொம்மை விலைக்கு வேண்டுமா?” என்று கேட்டாள். அப்பொழுது பண்ணை முதலாளி எங்கோ வெளியேபோயிருந்தார். உள்ளே கை ஜோலியாயிருந்த அம்மாள் “வேண் டாம்” என்று சொல்லிக்கொண்டே பொம்மையைப் பார்வையிட வந்தாள். இதற்குள் பண்ணை வீட்டுக் குழந்தைகளும் ‘நான் நீ என்று பொம்மையை மொய்த்துவிட்டன. பண்ணை எஜமானிக்கும் பொம் மையைப் பார்த்ததுமே ‘நவராத்திரி இன்னும் இரண்டு மாதத்தில் வந்துவிடுமே; அப்போது காலுவில் வைப்பதற்கு ஒரே ஒரு பசுமாடுதானே இருக்கிறது; ஜோடியாக வைக்கலாமே!’ என்று ஆசை உண்டாயிற்று. 

“என்ன விலை?” என்று கேட்டாள். 

கோமதி “ஆறு பணம்” என்று சொன்னாள். அவளுக்கு என்ன தெரியும் அந்தப் பொம்மையின் மதிப்பு? 

‘நாலு பணத்திற்குத்தருகிறாயா!” என்று சாவதானமாகக் கேட்டாள் அம்மாள். கோமதிக்கு அந்தப் பொம்மை நாலு பணம்கூடப்பெறாது என்று நினைப்பு. எனவே, குதூகலத்தோடு பொம்மையைக் கொடுத்துவிட்டு நாலு பணம் வாங்கிக் கொண்டு விரைவாக வீடு திரும்பினாள். 

4

“கடன் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான் கடைக்காரன்” என்று முனகிக்கொண்டே வடிவேலன் வீட்டிற்கு வந்தான். “விருந்து சமைத் தாய் விட்டது” என்றாள் கோமதி. 

வடிவேலன் திடுக்கிட்டுப் போனான். கோமதி நடந்த விஷயத்தைச் சொல்லவே, அவனுக்கு அசாத் யக் கோபம் வந்துவிட்டது. “பண்ணை முதலாளி நாலு கோடிப் பவுன் தந்தாலும், நான் அதைக் கொடுத்திருக்கமாட்டேனே!” என்று கோபித்துக் கொண்டான். அவன் திண்ணையில் நின்று கொண்டு இப்படி இரைந்த வார்த்தைகள், அப்பொழுது வீதி வழியே போய்க்கொண்டிருந்த பண்ணையாரின் காதில் விழுந்தன. 

உடனே பண்ணையார் வீட்டிற்கு விரைவாக வந்து தன் காதில் விழுந்ததைத் தம் மனைவியிடம் சொன்னார். பொம்மையைப் பார்த்துவிட்டு “அவன் இவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்ததை இந்த விலைக்கு வாங்கியது மிகவும் பாவம்” என்று கோபித்துக் கொண்டார். 

5

“வடிவேலா! இதோ உன் பொம்மை. நீ இவ்வளவு சிரமப்படும்படியாக இதை என் மனைவி நாலு பணம் கொடுத்து ‘விலைக்கு’ வாங்கிவிட்டது தவறு. இந்தா இதை நீயே வைத்துக்கொள். உனக்கு ஏதா வது பணம் தேவையானால் சொல்லு. நான் தருகிறேன்” என்று சொல்லிப் பொம்மையை வடிவேலனிடம் கொடுத்தார். 

வடிவேலனுக்குப் பண்ணையார் தன் குடிசைக்கு வந்ததும் இப்படி வார்த்தைகள் சொன்னதும் ஆச் சரியமாயிருந்தன. தன்னுடைய பொம்மையை எவ் வளவு அநுபவத்திருந்தால் அந்த ரசிகர் அப்படிச் சொல்லுவார்-வடிவேலனுக்குப் பரவசத்தினால் கண் கலங்கியது. 

“இந்தப் பொம்மை உங்களிடமே இருக்கட்டும்…” என்றான் வடிவேலள் மெதுவாக. இதைப் பிரிய மனமில்லாததால் நீயே வைத்துக் கொள்” என்றார் பண்ணையார். உடனே வடிவேலன் பதில் பேசாது அந்த பொம்மையைப் பண்ணையா ரிடம் கொடுத்துவிட்டுச் சொல்லுவான்: 

“நீங்கள் விலைக்கு வாங்கிய பொம்மையை நான் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டேன். இப் பொழுது இதை என்னுடைய அன்பின் அறிகுறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் மதிப்பு தங்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதற்கு உரியவர் தாங்கள் தான்!” 

– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *