நல்லோர் வழி நடக்கும் நாயகன் இருப்பே இவள்

ஆசுபத்திரிக்கு வாசுகிவந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது வீட்டிலே அனாதைகளாகிப் போன குழந்தைகள் வேறு. அவர்கள் இபோது அனாதைகளில்லை. அவர்களை ஒரு தாய் போலப் பார்த்துக் கொள்ள, அருமை மச்சாள் இந்திரா வந்து வாய்த்தது, அவள் செய்த தவம் பக்கத்திலே தான் அவள் இருக்கிறாள் அம்மா வீடும் பக்கத்திலே தான் அங்குதான் அவளின் வாசம் சின்னண்னன் குமாரின் அன்பு மனைவி தான் அவள். அண்ணனை மட்டுமல்ல. உலகையே நேசிக்கத் தெரிந்த மகா உத்தம அவள் . அவள் புது மருமகளாய் அண்ணனைக் கரம் பிடித்து முதன் முதலாக வீட்டிற்கு வந்த சமயம் நேரில் லட்சுமியே வந்து விட்டாற், போல், வீடு முழுவதும் அதீத களை பரவிற்று.
ஆகவே குழந்தைகள் குறித்து எழுந்த கவலையைப் போக்கும் விதமாகவே சிறிதும் பிசிறற்ற அவளின் அன்பு வழிபாட்டு நடத்தைகள், குறித்து, தங்கை பாமா அவளைக் கண்டு, நலம் விசாரிக்க வந்த போது, அவளிடம் சொன்ன நற்செய்தி இது.
எத்தனை நாள் வழி, பார்த்திருந்தும் ஆனந்தன் அவள் கணவன், வராமல், போனது. பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. அவனுக்கு எப்பவும் அவள் புறம் போக்குத் தான் வேற்று மனுஷி தீண்டத்தகாதவள்அவள் என்பது ஒரு நினைப்பு அவனுக்கு. எப்படி மனம் உனர்வுகள் ஒட்டாமல், போனாலும் பிள்ளைப் பேறு மட்டும் தவறாது நடக்கும் இதிலே நலிந்து உருக்குலைந்து சாவது , யாரென்றால், அவள் தானென்பதே நிதர்ஸனமான உண்மை.
இது ஐந்தாவதாக நேர்ந்த மூர்க்கமான தொடுதலின் விளைவு. இதன விளைவுகளை விரிவுபடுத்தி சொல்லப் போனால், வெறும் உடல் வாழ்க்கையான காம சூத்திரமே மிஞ்சும் அநேக ஆண்களின் நிலைமையே இது தான்.
இதற்குப் பரிகார சித்தியாக ஒன்றே ஒன்று தான் செய்ய முடிந்தது அவளால். அன்பு வழிபாடு செய்வதொன்றைத் தவிரவேறு வக்கிர நினைவுகளில் அவள் சிக்கிக் கொளவதில்லை. இதை ஒரு தவமாக, நிகழ்த்திக் காட்டவே அங்கு அவளின் வருகையும் கூட இருந்தது.
எதற்கு இந்த வருகை. மீண்டும் புதிதாய் ஒன்றை பெற்றுப் போடாவா?அப்படி பெற்று பெற்றே அவள் களைத்துப் போனாள். இனி ஒன்று வேண்டாமென்பதே, கடவுள் சித்தம். அதற்கேற்ப அபார்ஷனுமாயிற்று. வீட்டிலிருந்து வரும் போதே, இரத்த வெள்ளம் பாய்ந்தது. அடிக்கடி துணி மாற்ற வேண்டியதாயிற்று.
மயக்க நிலை தான் . நிறைய குளூக்கோசும் இரத்தமும் ஏற்றியபிறகு தான் நினைவு திரும்பியது. எழுந்து நடமாட முடியாமல், போனதால், உதவிக்கு ஒரு பெண் இருந்தாள் இரவும் பகலும் அவள் துணையோடுதான் பொழுது கழிந்தது.
இடையில் ஒருநாள் ஆனந்தன் வந்திருந்தான். அவளை சுகம் விசாரித்து போகவல்ல உதவிக்கு நிற்கும் வேலைக்காரியின் கணக்கு தீர்ப்பதற்காக வாசுகியின் பதக்கத்தை, அடகு வைத்து அவன் காசு கொண்டு வந்த, பின்னும் நீண்ட நேரமாக அதைக் கொடுக்க மனம் வராமல், போக்குக் காட்டியபடியே, அவன் இருக்கையில் அவளுக்கு சந்தேகம் தட்டிற்று. தன் சம்பளத்தையே, கொடுக்க மனம் வராமல், இழுத்தடிப்பவன் அல்லது அப்படியே செலவழித்து விட்டு, வெறும் கையை விரிப்பவன், இதிலும் மாசுபட நிற்கிறான். அதிலும் எனது பணம் என் சொத்து. என் வாழ்க்கை . நிழல் நெருப்பாகவே சுடும் போது, அமைதித் தவம் காத்தது போதும் அதைக் கொடுப்பதில் கூடவா, வக்கிர புத்தி கொண்டு வம்புக்கு இழுக்கிறான்.
நலிந்த துரும்பாய் ஒட்டிப் போன கன்னங்களுடன் கட்டிலில் அவள், வீழ்ந்து கிடக்கையில், எதிர்ப்புறம் அவள். அந்த வேலைக்காரி, அசடு வழிய சிரித்துக் கொண்டே, அவள் முகம் பார்த்துக் குனிந்த போது, அவனுக்குப் பயப்படாமல், உண்மை ஒரு வேதவாக்காக. அவளைக் கேளாமலே அவள் வாய் சதுக்கத்திலிருந்து பூத் தூவலாய் கொட்டிற்று. அதை அவள் இந்த வாசுகி மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்.
நம்ப முடியேலை. உங்களைப் போலை இவர் நல்லவரில்லை.என்றாளே பார்க்கலாம். அவனுக்கும் இது கேட்டிருக்க வேண்டும் இருந்தாலும் அவன் மந்தையாகவே இருந்தான். ஆனால் வாசுகியோ மறு துருவம் மிகவும் நல்லவள் அன்பானவள் அருட் பெரும் சோதியாய் அவளைக் கணிப்பதற்கு, இந்தப் பாமரப் பெண்ணுக்கும் முடிந்திருக்கிறேயென்றால்,உள் வியாபகமான வாசுகியின் உண்மை ஒளி இருப்பின் தேஜசுக்கு முன்னால் துரும்பு போல், ஒடுங்கி மறைந்து விட்ட இருளினுள் புதைந்து போன அவன் முகம் ஒரு வெற்றுச் சங்கதியாகவே அவள் கண்களில் தெறித்தது. அவன் அப்படி வெற்றிடமாகிப் போன நிழலைக் கண்டு, வாய் விட்டு அழ. மனம் வராமல் தனக்குளேயே மனம் குமுறி அழுது தீர்த்தாள் ஒரு நிழலுக்காகவா ஒரு யுகம் தாண்டிவந்து என்னையே நான் இழக்க நேர்ந்தது. அதுவும் வெறும் உடலுக்காக வெற்றுச் சங்கதிகளுக்காக ஒரு வெறும் மனிதனுக்காக என் பூரண இருப்பையே காலி செய்து விட்ட பாவத்துக்காக இவனை .நொந்து பலனில்லை எல்லாம் என் பாவக் கணக்கின் பரகார சித்தியின் பொருட்டே இதுவும் நேர்ந்ததாய், அவள் ஆழ் மன இருக்கையில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவாறே,தூங்கிப் போனதைக் கண்டு, கொள்ளாமலே அவன் அங்கிருந்து போய் வெகு நேரமாகிறது. இதை ஒரு வேடிக்கை போல பார்ப்பதற்கு, புதிதாய் தோன்றிய அவள் மட்டுமே இப்போது அங்கிருந்தாள் கைநழுவிப் போன காசை விட இதுவே முக்கிய உறுத்தலாய் மனதை வருத்த, மனிதம் போனத்துக்காக மட்டுமே அவளுக்குஅழ வேண்டும் போல் தோன்றியது. சாகக்கிடக்கும் மனைவியை விட காசிலே முகம் மறைந்து போன அவன் மனிதனல்ல மிருகம் தான் என்று, அவளுக்குப் பட்டது.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |