திருடர்கள் நால்வரில் ஒருவன் மற்றவரை மோசஞ்செய்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2025
பார்வையிட்டோர்: 1,099 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான்குபேர் திருடர் ஒரு பட்டணத்தில் ஒரு கிழவி யின் வீட்டிலிறங்கித் தாங்கள் திருடிப் பொதுவில் வைத் திருந்த உடமைகளையும் பணங்களையும் ஒரு தவலையிலே போட்டு மேலே முத்திரையிட்டு, “நாங்கள் நாலுபேருமாக வந்து கேட்கும்போது இதைக்கொடு. அதுவரைக்கும் பத்திர மாகப் புதைத்துவை” என்று கொடுத்துச் சிலநாள் அவள் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். 

ஒருநாள் அந்த நாலுபேரும் எதிர்வீட்டுத் திண்ணை யில் பேசிக்கொண்டிருக்கையில் மோர் வாங்குதற்கு அந்தக் கிழவி வீட்டிலே போய்த் தோண்டியெடுத்துக் கொண்டு வாவென்று தங்களுள் ஒருவனையனுப்பினார்கள். அவன் போய்த் தோண்டி எடுத்துக்கொண்டு வரச்சொன்னாரென்று சொன்னான். 

அதற்கவள் புதைத்துவைத்திருக்கிற தவலையைத் தோண்டி எடுத்துவரச் சொன்னதாக நினைத்துக்கொண்டு தெருவில் வந்து அவனைத் தோண்டியெடுத்துவரச் சொன் னீராவென்று கேட்க அவர்களாமென்று சொல்லுதலால் உள்ளே போய்க் கட்டப்பாரையைக் கொடுத்துச் சுகமாகத் தாண்டி எடுத்துக்கொண்டு போவென்று சொன்னாள். 

அவன் அதிக சந்தோஷத்துடனே சீக்கிரத்திலே தோண்டித் தவலையை எடுத்துக்கொண்டு புழக்கடை வழியே ஓட்டம்பிடித்தான். மற்ற மூன்றுபேரும் ஒரு நாழிகை வரைக்கும் பார்த்து அவனைக் காணாமையாலே உள்ளே போய் நடந்த மோசத்தையறிந்து கிழவியின்மேலே சோழ ராசனிடத்திலிருந்த நியாயாதிபதியிடத்திலே பிரியா து செய்தார். அவன் கிழவியை அழைப்பித்து விசாரணை செய்து அவ்வுட மையைக் கிழவி கொடுக்கும்படியாகத் தீர்ப்புச்செய்தான். அந்தக்கிழவி நான் என்னசெய்வேன் தெய்வமே!” என்று அழுதுகொண்டு வருகையில் நடுவழி யிலே சிறுபிள்ளைகளுடன் கெச்சக்காயாடிக்கொண்டிருந்த மிகுந்த புத்திசாலியான ராமன், “ஏன் பாட்டி அழுகிறாய்” என்றான். அதற்கு அவள் நடந்த சங்கதியை எல்லாஞ் சொன்னாள். அதைக்கேட்டு, “இந்த அனியாயத் தீர்ப்பைச் செய்பவன் வாயிலே மண்விழுந்தது போலே இதுகள் குழி யிலே விழக்கடவது” என்று, தன் கையிலிருந்த கெச்சைக் காய்களை விட்டெறிந்தான். 

அதைக் கேட்டுக்கொண்டிருந்த சிலர்போய் அரச னுடனே சொல்ல அரசனானவன், அந்த ராமனை அழைப்பித்து, “நியாயாதிபதி செய்த தீர்ப்பை அநியாயத் தீர்ப் பென்று சொன்னாயே. நீ நியாயமாகத் தீர்ப்புச் செய்” என்று சொன்னான். 

உடனே அந்த ராமன் உடமைக்காரரையும் கிழவியை யும் அழைப்பித்து விசாரணை செய்து உடமைக்காரரைப் பார்த்து. உங்கள் வாக்குமூலப்படியே நீங்கள் மூன்றுபேர் மாத்திரம் கேட்டால் கொடுக்கக்கூடாது. நாலு பேரும் வந்து கேட்டால் அப்போது உங்கள் பொருளைக் கொடுப் பாள் என்று கிழவிபட்சம் தீர்ப்புச் செய்தான். 

பொருள் போனவழியே துக்கம்போம் என்கிறபடியே கிழவிக்கு உண்டாகிய துக்கம் போய்விட்டது. அதுகேட்டு இராசா சந்தோஷித்து அவனுக்கு மரியாதைராமன் என்று பெயரிட்டு நியாயாதிபதியாய் ஏற்படுத்திச் சகல வெகுமான முஞ்செய்து தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். 

*இம் முதற்கதை சரசுவதி மகால் நூலக ‘மரியாதைராமன் கதைகள்’ சுவடியில் இடம்பெறவில்லை. இக்கதையே பதிப்பு கள் அனைத்திலும் முதற்கதையாக இடம்பெறுகின்றமையைக் கருதி, “கதாசிந்தாமணி யென்று வழங்கிய மரியாதைராமன் கதை ” எனும் பழம்பதிப்பு நூலிலிருந்து (1904) இக்கதை இவண் எடுத்து அளிக்கப்பெறுகின்றது. 

– மரியாதைராமன் கதைகள் (ஆய்வுப் பதிப்பு), இரண்டாம் பதிப்பு: மே 2001, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரசுவதி மகால் நூலகம் வெளியீடு, தஞ்சாவூர்.

பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்)  மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும்.  புகழ்மிகு கதையிலக்கியங்கள் :  விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *