ஜிபிடி-4யை புரோக்கர் ஆக்கினவன்





வழக்கமாய் ஆஞ்சநேயரை வழிபடும் கோகுல கிருஷ்ண ராமன் அன்று அதிகாலையிலேயே முருகனை வணங்கினான். அவருக்கு தேனும் தினையும் வைத்தான் கந்த சஷ்டியை கத்தி பாடினான்.
”ஏன்டா படிக்குறதும்…சாமி கும்பிடுறதும் மௌனமாக செய்ய வேண்டும்டா அம்மாவின் குரல்.
”சரிம்மா… சாரிம்மா” என்றான்.
”இந்த பொண்ணுங்க ஏகப்பட்ட கண்டிஷன் அப்ளைய்ட் ன்னு சீன் காட்டுறாங்களே… நேர்ல போனா நமக்கு இன்டர்வியூ ஆதனால… இந்த ஏஐ-ஜிடிபி-4 ன்னு சொல்றாங்களே.. அதுல டிரை செய்து பார்ப்போமே! என ஒரு அதிகாலை சுபவேளை ஓலை வந்தது அப்போது எப்.எம்மில் பாட்டு ஒலித்தது. நல்ல சகுனம் தான் உட்கார்ந்தான் எலியைப் பிடித்தவாறே..(அதாங்க கம்ப்யூட்டர் மவுஸ்)
”ஏன்டா டேய்” குரல்
திரும்பி பார்த்தால் கல்யாண புரோக்கர் கல்யாண சுந்தரம் நின்று கொண்டிருந்தார் அவருக்கு கமிஷன் போச்சேன்னு வருத்தம் இருக்கத்தானே செய்யும்.. இதுவரை நாற்பது போட்டோவைக் காண்பித்து நாற்பதாயிரம் கறந்தவர் அவர்தானே.
அவரை வழியனுப்பி வைத்து விட்டு…. தொடர்ந்தான்.
”யூ ஆர் வெல்கம் ” மாப்ளே என வரவேற்றது ஜிபிடி-4
ஷாக் ஆனான். ஒரு வேளை கனாவில்…பினாத்தினது அதற்கு தெரிந்து இருக்குமோ… மோட்டுவளையைப் பார்த்தான். அங்கே இருந்த ஒரு எலி வேலையைப் பாருடா என்பது போல கீச்சியது.
அந்த எலியை விட்டு விட்டு மவுஸ் எலியைப் பற்றினான்.
எஸ்…. யுவர் நீட் – அண்ட் என்டர் என்றது ஜிபிடி-4
”எனக்கு கல்யாணம் செய்துக்க ஒரு பொண்ணு வேணும்….”
”எந்த மாதிரி ?”
”ராஷ்மிகா மந்தனா மாதிரி!?
“ஷட்அப் யூ ஆர் ஃஆப் மெண்டல் ” என கத்தியது.
”இல்லேன்னா சமந்தா மாதிரி”.
”டேய் ஃபூலிஷ் அவங்க இப்ப சிக்குன்னு இல்லே ”சீக்கா கீறாங்கோ” நடுவில் மெட்ராஸ் பாஷையை அள்ளி விட்டது.
”நயன்தாரா மாதிரி… ஓ.கே”
”நயன்தாரா புருஷன் விக்னேஷ் சிவன் கோவிச்சுக்குவாரே!”
”தமண்ணா மாதிரி”
”டேய் ஒனக்கு நடிகைகளைத் தவிர வேற யாரையுமே தெரியாதா?” அதட்டியது.
”கோவிச்சுக்காதே டியர் ஜிடிபி-4″
”இட்ஸ் ஆல் ரைட் இரு… இரு.. ஒனக்கு செவ்வாய் தோஷம் இருக்குறா மாதிரி தெரியுதே!”
”இல்லையே என் குடும்ப ஆஸ்தான ஜோதிடர் ஆனந்தராம அடிகள் அப்படி சொல்ல்லையே”
”டேய் கோகுல கண்ணா…. பேரில் உள்ள கிருஷ்ணனையும் ராமனையும் மறந்து விட்டதோ என்னவோ.
நீ காலேஜ் படிக்கும் போது லிப்ஸ்டிக் போட்ட பொண்ணுங்களா பார்த்து முத்தம் கொடுத்தே உண்மையா இல்லையா?”
“ஆமாம் உண்மைதான்”.
“இப்ப அதுதான் செவ்-வாய் தோஷமா ஒன்னைப் படுத்துது”.
“ஐயோ, ஒனக்கு அதெல்லாம் தெரிஞ்சுடுச்சா.”
“சரி..சரி..வேற பொண்ணைப் பார்க்கட்டுமா”
”ஏதோ ஒண்ணு …தேன்மொழி…கனிமொழி-ன்னு பாருடா!”
”என்னது ‘டா’வா? ”கிவ் ரெஸ்பெக்ட், டேக் ரெஸ்பெக்ட்”என்றது ஜிபிடி-4
”வருமாவா? வந்தா எச்.ராஜா ரேஞ்சுக்கு கத்திடுவேன் தெரியுமா?”
”கூல்…கூல்… ஐயம் ஸாரி!”
‘”தேங்க்ஸ், மன்னிப்போம், மறப்போம். கடமை முக்கியம் மேலே சொல்லு!”
”எனக்கு கல்யாணம் தேவை”
“அவங்க சைட்ல கல்யாணமே தேவையில்லைன்னு போராட்டம் பண்றாங்களே. விஜய் டி.வி பார்க்லையா நீ. கோபிநாத்தே மிரண்டுட்டாரே!”
“நீ விஜய் டி.விலாம் பார்ப்பீயா?”
”ஓ மிட் நைட் மசாலா படம் கூட பார்ப்பேன்.”
”சரி..சரி ஒன் புராணம் வேணாம். எனக்கு ஒரு வழி சொல்லு”
“கண்டிஷன் நிறைய இருக்கே. நீதான் அவங்க வீட்டுக்கு போகணும். காபி போடணும, மாவு அரைக்கணும். தோசை சுடணும், துணி துவைக்கணும்.
”அவங்க என்ன செய்வாங்களாம்”
”மைண்ட் யுவர் நன் ஆப் பிசினஸ் அத நீ கேட்கப்படாது.”
“அப்புறம் ஒன் அப்பா, அம்மாவை மறந்துடணும். தங்கச்சி இருந்தா ஒன் கட்சியில சேர்க்கவே கூடாது. பிரதர்ஸ் இருந்தா வானத்தைப் போல விஜயகாந்த் மாதிரி இருக்க கூடாது
இன்னொரு கண்டிஷன் பிள்ளைய பெத்துக்க மாட்டாங்க. நீ செரகஸிக்கு ஒத்துகிட்டா ஓ.கே. அப்படியே ஒத்துகிட்டாலும் அதற்கு உயிரே..தயிரே –ன்னு தான் பேர் வைக்கணும.”
“எல்லாமே ஓ.கே. தான்”
”அப்படியே தரையில சாஷ்டாங்கமா விழுந்து வணங்கு”
”யாரை?
”என்னைத்தான்”
”கும்பிடுறேன் சாமீ”
“அப்படி வா வழிக்கு”
”இந்த பொண்ணு பாரு”
”அட இது என் மாமா பொண்ணு ஆச்சே!
”ஸ்கவுண்டரல்…. மாமா பொண்ணுக்கு ஆசைக் காண்பித்து ஏரிக்கரை, பார்க் ன்னு சுத்திட்டு… ஏரியில மீனைப் பிடிச்சு சுட்டு ரெண்டு பேரும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டதெல்லாம் மறந்து போச்சா? ஒனக்கு அதையும் மறந்து அவளையும் மறந்துட்டு பொண்ணு தேடுறானாம் ஆயோக்கிய ஸ்கவுண்டரல்”
”அவ்வளவு டிடெயில்ஸ் இருக்கா ஒன்கிட்ட இருக்கா?
”இருக்கு நீ செய்த லீலையெல்லாம் ஏற்கனவே ஸ்டிங் ஆபரேஷன்ல அண்ணாமலை மாதிரி சேகரிச்சு வைச்சிருக்கேன். சொன்னா அசிங்கமாயிடும் பராவாயில்லையா?” கேட்டது ஜிபிடி-4
”ஜிபிடியே சரணம்…சரணம்…சரணம்..
”ஓ.கே நாளைக்கு அவங்க குடும்பத்தோட ஒன்னை மாப்பிள்ளைப் பார்க்க வருவாங்க. ஒழுங்கா அடக்க ஒடுக்கமா இரு… பொண்ணுகிட்ட ஆட தெரியுமா? பாட தெரியுமா? சமைக்க தெரியுமான்னு பூமர் அங்கிள் மாதிரி கேள்வியெல்லாம் கேட்க கூடாது.”
“தேங்க்ஸ் ..ஜிடிபி-4 சார்”
”இருக்கட்டும்…இருக்கட்டும். என் பீஸ் ஏழாயிரத்து ஐநூறு ஜீபே பண்ணீடு ஓ.கே ஆல் தி பெஸ்ட். அப்புறம் ஒன்ன மாதிரி பசங்களுக்கு என்னைப் பத்தி சொன்னீன்னா நான் ஒனக்கு கமிஷன் கூட தாரேன். பை..பை.”
“அது சரி…. அதென்ன? ஏழாயிரத்து ஐநூறு .”
”மடையா! அதுதான்டா ஏழரைச் சனிடா”. என்று சொல்லி விட்டு அதுவாகவே ஷட் டவுன் ஆகியது ஜிபிடி-4.
![]() |
இயற் பெயர்: கே.அசோகன் (அசோகன் குப்புசாமி)தந்தை பெயர்: த.குப்புசாமிபிறந்த நாள்: 13 Decemberதொழில்: தமிழக அரசு பணி (2013 பணி நிறைவு)நிரந்தர இருப்பிடம்: மனை எண்-சி-374 என்.ஜி.ஜி.ஓ நகர், சேலை, திருவள்ளுர் 631 203தற்காலிக முகவரி: சி-20 சம்பக், ஐ.டி.சி குடியிருப்பு, சாரபாக்கா கிராமம், கம்மம் மாவட்டம், தெலுங்கானா மாநிலம் பின் -507 208தொடர்பு எண்: 9047896065மனைவி பெயர்: அ. சகுந்தலை –குடும்ப தலைவிமகன் பெயர்: அ.ராஜ்மோகன் இலக்கிய பணி:தாய்மண்…மேலும் படிக்க... |
என் நகைச்சுவை கதையினை இத்தளத்தில் சேர்த்து என்னை ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி