குழந்தைகளை வளர்ப்பது எப்படி?
கதையாசிரியர்: வசுமதி ராமசாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2026
பார்வையிட்டோர்: 148
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புக்குரிய சகோதரி சுஜாதா,
குழந்தைகளை நல்ல முறையில் எப்படி வளர்ப்பது? இந்தக் காலத்துப் பெண்கள் குழந்தை பிறந்தவுடன் வளர்க்கத் தெரியாமல் தவிக்கிறார்களே யெனக் கேட்டிருக்கிறாய்.
நீ சொல்வதில் ஓரளவு உண்மை யிருக்கிறது. படித்துப் பட்டம் பெற்ற சில பெண்கள் குழந்தையை வளர்க்கத் தெரியாமல் தவிக்கிறதையும் இன்னும் சில பெண்கள் நன்றாக வளர்த்து வருவதையும் பார்த்திருக்கிறேன்.
ஒரு குழந்தையை நன்றாக வளர்க்க, தாய்க்குத் தேவையானது அளவற்ற பொறுமைதான். என் வீட்டுக்கருகில் ஒரு சின்னப் பெண் முதல் குழந்தையுடன் குடும்பம் நடத்த வந்திருந்தாள். ஒரு நாள் நான் அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கும் பொழுது குழந்தை கையில் நிற்காமல் அழுது கொண்டிருந்தது. அந்தப் பெண்ணும் செய்வதறியாமல் தானும் அழுது கொண்டிருந்தான். குழந்தையைக் கையில் வாங்கிப் பார்த்தேன். இடுப்பில் அழகுக்காக மணிகள் கோத்துக் கட்டியிருக்கிறாள். குழந்தை வளர்ந்து மணிகள் இடுப்பை இறுக்கிப் புண்ணாக்கி யிருக்கின்றன. வலி தாங்காமல் குழந்தை அமுதிருக்கிறது. அதை நீக்கிவிட்டு மருந்து போட்டதும் குழந்தை நிம்மதியாகத் தூங்கியது. அந்தப் பெண் நல்ல புத்திசாலி தான். படித்தவள். ஆனால் அனுபவம் ஒவ்வொன்றுக்கும் தேவை. சில சமயம் காதில் எறும்பு புகுந்து கொண்டு அந்த வலி தாங்காமல் குழந்தை அழும். குழந்தைகளுக்கு எதைச் சொல்ல வேண்டுமானாலும் அழுகைதான். அதற்கு இயற்கை அறிவு அதிகம். தனக்கு வேண்டாததை உடனே தெரிவித்து விடும். எழுந்து விளையாடி விஷமம் செய்யும் பருவம் இன்னும் கஷ்டமான நிலை. அந்த வயதில் அவர்களுக்கு ஒவ்வொன்றையும் ஆராயும் மனப்பான்மை அதிகம். எரியும் அடுப்பு, ஸ்டௌவ், கத்தி இவைகளெல்லாம் குழந்தையின் கைக்கு எட்டாமல் வைக்க வேண்டும். சில இளம் பெண்கள் குழந்தைகள் அழுதால் செய்வதென்ன வென்று அறியாமல் செய்து விடுகிறார்கள். ஒரு பெண், குழந்தை அழுவதைக் கண்டு அவசரமாகக் கொதிக்கும் பாலைப் புகட்டி ஆபத்தாகி விட்டது.
என்னுடைய சிநேகிதி சுமதியை நீ அறிவாயல்லவா? அவள் பேசும் போது கையை ஆட்டி முகத்தை வலித்துக் கொண்டு தான் பேசுவாள். அவளுடைய நான்கு வயதுப் பெண் ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அது மற்றக் குழந்தைகளிடம் தான் அம்மாவாக இருக்கிறேனென்று சொல்லிக் கொண்டு சுமதியைப் போலவே கையை ஆட்டி முகத்தை வலித்துப் பேசியது. நல்ல பழக்க வழக்கங்களோ கெட்ட பழக்கங்களோ அவர்கள் இளம் மனத்தில் உறுதியாகப் பதிந்து விடுகின்றன.
சுபாஷிணி வீட்டுக்குக் குழந்தை பிறந்த நாளைக்குப் போயிருந்தேன். சுபாஷிணியின் பெரிய பெண் நளினி படு சுட்டி. அதற்கு ஐந்து வயது தான். பர்வதம் மாமி வந்து கொண்டிருந்தாள். ‘கோவில் யானை மாமி வருகிறார்’ என்று அந்தக் குழந்தை கத்தியது. பர்வதம் பருமனாக இருப்பதற்காக வீட்டில் குழந்தையின் எதிரில் தாய் இப்படிச் சொல்லி இருக்க வேண்டும். கள்ளம் கபட மற்ற அந்தக் குழந்தை அதைக் கத்திச் சொல்லி விட்டது; அது விபரீதமாகி விட்டது.
குழந்தைகளிடம் அன்பைச் சொரிந்து அன்பைப் பெற வேண்டியவள் தாய். மேல் நாடுகளில் குழந்தைகளுக்கு அதிகக் கௌரவம் கொடுக்கிறார்கள்; வருங்காலச் செல்வம், வளரும் நிதி, எதிர்கால தேச மக்கன் என்றெல்லாம் குழந்தைகளைக் கருதுகிறார்கள். அவர்கள் பருவத்திற்கேற்ப இலக்கியங்கள், விழாக்கள் விளையாட்டுப் பந்தயங்கள், பரிசுகள் எல்லாம் வைக்கிறார்கள். அற்ப விஷயத்தில் கூடப் பொறுப்புணர்ச்சியுடன் வாழுகிறார்கள். அந் நாட்டில் நான்கு குழந்தைகளைப் பெற்று நன்றாக வளர்த்திடும் தாய்க்கு டாக்டர் பட்டம் அளித்திருக்கிறார்கள். நம் நாட்டில் குழந்தைகளைக் கௌரவிப்பது குறைவுதான். வயது சென்றவர்களை மிகவும் மதிக்கின்றோம். அது விரும்பத்தக்கதுதான். ஆனால் குழந்தைகளை அலட்சியம் செய்ய வேண்டிய அவசியமில்லையே.
இன்று குழந்தைகளுக்காகச் சில பேசும் படங்கள், இலக்கியம் இவை மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் அந்த முயற்சிகள் பெருக வேண்டும். சுஜாதா! இவைகளை யெல்லாம் நீ ஏற்றுக் கொள்வா யெனக் கருதுகிறேன்.
பூமாதேவி.
– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.
![]() |
ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம். வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர்.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கடைசி பேருந்து
புஷ்பராஜ் கந்தசாமி
October 3, 2026
சுகந்தம்
பொ.கருணாகரமூர்த்தி
October 3, 2026
கோணங்கள்
ரேவதி பாலு
October 3, 2026
