உந்தன் நிழலாய் நானடி தோழி…
கதையாசிரியர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
இணைய வெளியீடு: November 16, 2026 முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 1,014
அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27
அத்தியாயம் – 22

லோச்சு.. சாரு வந்தாச்சு
பாரு..கிச்சனைப் பார்த்து குரல் கொடுத்தார் தியாகு.
அதா.. மணி ஏழாகப் போறதே..இன்னும் சாருவ காணுமேன்னு இப்பதா நெனச்சே..கரெக்ட்டா..டாண்ணு வந்துட்டா பாருங்கோ..
அதா சாரு செல்லம்..என்றார் லோச்சனி.
அப்பா..என்னப்பா..சாருவ
இன்னும் காணும்னு கவலப்பட்டுண்டு ஒக்காந்திருக்கேளா?
அதெதெல்லாம் ஒன்னு மில்ல சாரும்மா.. இன்னும் ஒரு வாரம் பத்து நாள்ள எம்பிபிஎஸ் டிகிரி வாங்கி டாக்டராகப்போறா
எம்பொண்ணு..அவுளுக்குத்தெரியாதான்ன வெளீல போனா ஆத்துக்குத் திரும்ப..
ம்..அதென்ன எம் பொண்ணுனு மட்டும் சொல்றது?எங்க பொண்ணுனுனா சொல்லணும்..கணவரை பொய்யாய் மிரட்டிக் கொண்டே ஹாலுக்கு வந்தார் லோச்சனி.
அருகருகே நிற்கும் லோச்சனியையும் தியாகு வையும் அவர்களுக்குப் பின்புறமாய் போய் நடுவில் நின்று அவர்கள் இருவரின் கழுத்தையும் கட்டிக் கொண்டாள் சாரு.
எ தியாகுப்பா..எ லோச்சம்மா என்றாள் பாசத்துடன்.
சாரு காபி டீ போர்ன்விடா எதாவது?
என்ன லோச்சு வேணுமானு கேக்கற..குடு..குடு.. கொழந்தைக்கு..
ரொம்ப சிபாரிசாருக்கு.. அப்பதா தனக்கும் அரடம்ளர் கெடைக்கும்னா?கணவரைக் கிண்டலடித்தார் லோச்சனி.
மூவரும் சிரித்தனர்.
அம்மா என்ன பண்றேள்ம்மா கிச்சன்லேந்து வாசனையா வருது?மூச்சை ஹும்ஹும் மென்று இழுத்து வாசனை பிடித்தாள் சாரு.
க்கும்..பிரமாதமா ஒன்னும் பண்ணல..சப்பாத்தி பண் றேன்.தொட்டுக்க க்ரேவி சப்ஜி..
ஹை..எனக்கு அப்ப அரை டஜன் சாப்பாத்தி தேவப் படும்மா..க்ரேவி சப்ஜில்ல..
யாருக்கு? ஒனக்கு?.. அரடஜன் சப்பாத்தி?..
சொல்லிட்டில்ல.. நீமட்டும் ஆறுசப்பாத்திய திங்கல..
சப்பாத்திய தலேல வெச்சு கட்டிடுவே..
ஹையோ.. சிரித்துக் கொண்டே தன் அறையை நோக்கி சாய்ந்து சாய்ந்து வேகமாய் நடந்தாள் சாரு.
ஹாஸ்டல் வாசலில் போய் வண்டியை நிறுத்திவிட்டு கிரில் கேட்டில் கட்டியிருந்த போஸ்ட் பாக்ஸைத் திறந்தான் முரளி.
ஏழெட்டு தபால்களுக்கு இடையே தனக்கு வந்திருந்த தாத்தாவின் கடிதம் இருப்பதைப் பார்த்து எடுத்துக் கொண்டான்.
அவசர அவசரமாய் அங்கேயே அந்த இன்லேண்டு கடிதத்தைப் பிரித்தான்.
இந்த லெட்டரை தந்திபோல் பாவித்து உடனே கிளம்பி வா.. இப்படிக்குத் தாத்தா..
வேறு ஒரு வார்த்தைகூட கடிதத்தில் இல்லை.
அறைக்குச் செல்லாமலேயே மீண்டும் வண்டியில் ஏறி தந்தி அலுவலகம் சென்று கிளம்பிவிட்டதாய் தாத்தாவுக்கு தந்திச்செய்தி அனுப்பிவிட்டு அறைக்கு வந்தவனுக்கு..
தாத்தாவுக்கு எதாவது ஆகியிருக்குமோ
என்ற பயம் நெஞ்சை அடைத்தது.மனம் தவித்தது.
தானாய்க் கண்களில் கண்ணீர் வந்து தேங்கியது.
தாத்தா என்று புலம்பின உதடுகள்.
மீடியம் சைஸ் ட்ராவல் பேக்கில் தோன்றிய ட்ரெஸ்களை எடுத்து அடைத்துக் கொண்டான்.
பணம் கையில் கணிசமாக இருந்தது.மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டான்.
ஹாஸ்டலில் தெரிந்த இரண்டுமூன்று பேரிடம் ஊருக்குச் செல்வதாய் சொல்லிவிட்டு.. ஆட்டோவில் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றான்.
ஸ்டேஷன் கேண்டீனில் சாப்பிட்டதாய்ப்பேர் பண்ணி விட்டு ஒன்பதரை மணிக்கு வரவேண்டிய ட்ரெயின் பத்தேகாலுக்குவந்து நிற்க..
ரிசர்வேஷன் செய்யாத நிலையில் கூட்டம் நிரம்பிவழிந்த பெட்டியொன் றில் ஏறினான். உட்கார இடமில்லை.
கண்களை மூடிமூடித் திறந்தாள்.புரண்டு புரண்டு படுத்தாள் சாரு.
சற்றைக்கொருதரம் படுக்கையில் எழுந்து எழுந்து அமர்ந்து.. தலை மாட்டில் வைத்திருந்த தானும் முரளியும் காலையில் பூட்ஹவுஸில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை.. அறையின் மின்விளக்கைப் போடாமல் நைட்லேம்ப்பில் பார்த்துப்பார்த்து ரசித்தாள்.
சிரித்துக்கொண்டாள்.
மீண்டும் படுத்தவள் கண்களை மூடிக் கொண்டாள்..ரேவி என்றாள்.
ரேவி தூங்கிட்டியா?அதுக்குள்ள தூங்கிருக் கமாட்ட..தூங்கலீல்ல?..
நா அன்னியன்னிக்கு நடந்ததெல்லாம் ஒங்கிட்ட சொல்லுவேன்ல..நீ கேட்டுட்டுதானே தூங்குவ..
இன்னிக்கு நடந்தத சொல்றே கேளேன்..
ரேவி நா இன்னிக்கு அவரோட..அதா முரளிகிருஷ்ணாவோட ..
என்று ஆரம்பித்து போட்டோ எடுத்துக்கொண்டது..
ஹோட்டலில் சாப்பிட்டது..
முரளி தன் தோளைத்தட்டி தலையில் கைவைத்து இப்படியும் ஆட்டியது..தான் அவனிடம் பொய்யாய்க் கோபித்தது..முரளி மாயவரம் போய் தன் தாத்தாவைப் பார்த்துவிட்டு தங்களின் திருமணத்துக்கு சம்மதம் வாங்கிவரப்போவதாய் சொன்னது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தாள்.
ரேவி முரளிகிருஷ்ணா ரொம்ப நல்லவர்டி..அவர நா ரொம்ப நேசிக்கிரேண்டி ரேவி.. அவரும் என்ன உயிரா நேசிக்கிறார்டி ரேவி.அவர
நீ பாத்தேன்னு வெச்சுக்கோ..
சாரு நீ ரொம்ப லக்கீடி..
அப்டீம்ப..
எ முரளி எல்லாத்துலயும் பெஸ்ட்டுடி ரேவி.
அவரில்லாத ஒரு வாழ்க்கைய என்னால நெனச்சுகூட பாக்க முடியாதுடி ரேவி.
நா என்னோட காலப்பத்தி வருத்தப்பட்டா அவருக்கு கோவம் வந்துடும்..சாரு அது கொறையே இல்ல..நீங்க வருங்கால டாக்டர்..நீங்களே அத பெரிசா நெனச்சு வருத்தப்படலாமா?நா சாருவோட மனச..இதயத்ததா நேசிக்கிறேன் அப்டீம்பார்டி..
இப்பெல்லாம் எங்காலப்பத்தி நா நெனைக்கிறதே இல்ல தெரியுமா?
அதுக்குக்காரணம் எ லோச்சு அம்மாவும் தியாகு அப்பாவும் முரளி கிருஷ்ணாவும் தந்த ஆறுதலும் அட்வைஸும்தா.
நா இப்ப சந்தோஷமா இருக்கே ரேவி..ஆனா ஒன்ன பாக்கமுடியலயேங்கிற வருத்தம்மட்டும் அப்டியேதா இருக்கும்டி ரேவி.
என்னிக்கிடி நாம பாத்துப்போம்?
நீதாண்டி நா..நாதாண்டி நீ ரேவி..கண்களின் ஓரத்தில் கண்ணீர் கோடு போட்டு இறங்கி தலையணையை நனைத்தது.என்ன நட்பு இது?
நடுக்கூடத்தில் அப்பா கணேசன் அம்மா மங்களத்தின் மாலை போடப்பட்ட போட்டோக்களின் முன்பு சுருண்டு படுத்துக் கிடந்தாள் ரேவதி.
அழுவதற்கு இனி சொட்டுக்கூட கண்ணீர் இல்லை என்ற நிலையில் அழுதழது கண்கள் வரண்டு இடுங்கிப் போய்போயிருந் தன.
எண்ணையே இல்லாமலும் சீவப்படாமலும் தலைமுடி சிடுக்காகிக் கிடந்தது.
சாப்பிட்டே ஒருமாதமாகி யிருக்கும்போல் கழுத் தெலும்பு தெரியுமளவுக்கு இளைத்துப்போய்க் கிடந்தாள் ரேவதி.
அம்மா..அப்பா என்று சொல்லி அழக்கூட திராணி யில்லாதவளாய்க்கிடக்கும் ரேவதிக்கு ஆறுதல் சொல்ல அவளருகே யாருமில்லை.
கணேசனும் மங்களமும் கார்மோதிய விபத்தில் ஸ்பாட்டிலேயே இறந்து போய் இருத்திரெண்டு நாட்கள் ஆகிவிட்டது.
சொந்த பந்தங்களெல்லாம் வந்து விசாரித்து மூக்கை சிந்தி அழுதுவிட்டு செத்தவீட்ல சொல்லீண்டு போக்குடாதும்பா..
என்ன பாவமோ..மங்களமு கணேசனு இப்பிடி துர் மரணமடையவேண்டா..
மங்களத்தோட உசிரு போய் பத்து நிமிஷங்கழிச்சுதா கணேச உசிரு போச்சுனு பேசிண்டா..போனதுதா பொனா மங்களம் சுமங்கலி யாவாவது போய்ச் சேந்தாளே..அந்தமட்டுக்கும் மங்களம் புண்ணியஞ் செஞ்சவதான்.
ஆளாளுக்கு ஏதேதோ சொன்னார்கள்.சொல்லாமல் கிளம்பிப் போனார்கள்.
யாரும் ரேவதியின் இனிமேலான நிலைபற்றிப் பேசவில்லை.
ஒரு பெண்ணை பாதுகாக்கும் பொறுப்பை யார்தான் ஏற்பார்கள்?
பெண்ணைப்பாதுகாப்பதும் அவளுக்குத் திருமணம் செய்துவைத்து நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும் யார்தான் முன்வருவார்கள்?பொறுப் பேற்பார்கள்?
தனியாகிப்போனாள் ரேவதி.
சாரு..நீ எங்கடி இருக்க? சாரு
ஒ ரேவியோட நெலம இப்ப எப்பிடி இருக்குனு தெரியுமா?
அப்பாவும் அம்மாவும் கார்ல அடிபட்டு செத்துப்பேட்டாடி சாரு..நா அனாதையாயிட் டேண்டி சாரு.
அழாதன்னு சொல்லக்கூட யாருமில்லடி சாரு.
தெனந்தெனம் அன்னியன்னிக்கு நடந்ததெல்லாம் ராத்திரி தூங்கரதுக்கு முன்னாடி ஒன்ட்ட சொல்லிட்டுதாண்டி சாரு தூங்குவே..
அப்பாவும் அம்மாவும் செத்துப்போனத சொல்லமுடீலடி..எதுவுமே நெனைக்கத்தெரீல.. பேசத்தெரீல.. புத்திக்கு எதுவுமே புரீலடி சாரு.
எந்தக் குடிகாரப்பாவியோ எ அப்பாவயும் அம்மாவையும் காரமோதி கொன்னுட்டாண்டி சாரு..நா என்னடி பண்ணுவே..அனாதயாயிட்டேண்டி சாரு..எனக்குனு யாருமே இல்லடி.. பயமாருக் குடி சாரு..
பேசாம நம்ம ஊர்லயே இருந்திருந்தா எ அப்பாவும் அம்மாவும் செத்ருக்க மாட்டாங்களோன்னு தோணுதுடி சாரு..இந்த மாயவத்துக்கு வந்து இப்ப அப்பாம்மாவ எழந்துட் டேனேடி சாரு..அழக்கூடத் தெம்பின்றி அழுதாள் ரேவதி.
நீயாவது எம் பக்கத்துல இருக்கக்கூடாது.பாழும்விதி ஒன்னததா எங்கிட்டேந்து பிரிச்சுதுன்னா..என்னப் பெத்தவங்களையும் எங்கிட்டேந்து பிரிச்சிடுத்தேடி சாரு..
நா ஒன்னப்பாக்கணும்டி சாரு..நா சீக்கிரம் செத்துப்போயிடனும்.நா செத்துப்போறதுக்குள்ள ஒன்ன ஒருதடவ..ஒரே ஒரு தடவயாவது பாத்துடணும்டி சாரு.
நா செத்தாலும் ஒ நெழலா இருக்கணும்டி சாரு.
சாரூ..நீதாண்டி நா..நாதாண்டி நீ..
கேவினாள் ரேவதி.கேவல் கதறலாக மாறியது.
கையில் ஒரு தூக்கோடு உள்ளே நுழைந்தார் காமாக்ஷிப் பாட்டி.
கொழந்த…அழாத கண்ணு..
ப்ச்..அழாதன்னா..அழாத எப்பிடி இருக்கமுடியும்?
பாவி..குடிச்சிட்டு கண்ணுமண்ணுதெரியாம கார ஓட்டி ஆம்படையா பொண்டாட்டி ரெண்டு பேரையும் சாகடிச்சி வயசுப்பொண்ண அனாத யாக்கிட்டானே..நாசமா போறவ..
அந்தப்பாவியோட அப்பங்கார வயசான கெழவர்..
புள்ளக்கார செஞ்ச பாவத்த எப்பிடித் தீப்பேன்னு கதறரார்..நல்லாருந்த மனுஷ படுத்த படுக்கையா ஆகிட்டார்..
அம்மாடி கொழந்த..அந்தக் கெழவர்தா ஒனக்கு சாப்பாடு குடுத்துட்டுவரச் சொன்னார்..ஒனக்குத் தொணையா என்ன இருங்கோ மாமின்னு அனுப்பி வெச்சார்..
தம்புள்ள பண்ண பாவத்த நெனச்சு நெனச்சு தவிச்சு தண்ணியா உருகிப்போறார். நெஞ்சுவலி நெஞ்சு வலிங்கறார்.
நாசப்போற குடிகாரப்பாவி..
எப்பேர்பட்ட அப்பா அந்த கெழவர்? அவுருக்குப்போயி இப்பேர்ப்பட்ட குடிகாரப் புள்ள..எல்லா விதி.. யாரச்சொல்றது?
வயசு எண்பத்தஞ்சாருது எனக்கு.எ வயசுக்கு எத்தனையோ பாத்தாச்சு.
சாப்புடு கொழந்த.. தீக்கமுடியாத.. ஆறுதல் சொல்ல முடியாத துக்கந்தா..
ஆனா பட்டினி கெடந்தா என்னவாறது?எது மாறிப் போகும்?
வயசுபொண்ணு இன்னும் வாழ்க்க இருக்கே?..
அருகே வந்தமர்ந்து புலம்பும் அந்தப்பாட்டியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை ரேவதி.
காலம் என்ன செய்யப் போகிறது ரேவதிக்கு?
தொடர் இருமலால் தவித்துப் போனார் கிருஷ்ணமூர்த்தி.
மூஞ்சுவாங்கியது.உடல் முற்றிலும் தளர்ந்துபோய் இருந்தது.கண்களை மூடிமூடித் திறந்தார். இதயம் வேகவேகமாகத் துடித்தது.
ராணுவத்தில் பணிபுரிந்த தால் உடல் நல்ல திடகாத்திர மாய்தான் இருந்தவர்.
ஆனாலும் மனிதனுக்கு மனம் அமைதியாய் நிம்மதியாய் இருக்க வேண்டும். அந்த அமைதியும் நிம்மதியும் அவருக்குக் கிடைக்கவே இல்லை பெற்ற மகனால்.
அதுவே அவரின் உடலை உருக்குலைத்து விட்டது.
பேரன் முரளிகிருஷ்ணாதான் அவரின் ஒரே ஆறுதல்.
பேரனை நினைக்கும்போதே கண்களில் கண்ணீர் சுரந்தது.முரளி கண்ணா என்றார் பாசத்தோடு.
முரளி..கெட்டுச் சீரழிந்த ஓ அப்ப.. அதா எம்புள்ள அந்தப்பாவி..கண்ணுமண்ணுதெரியாத அளவு குடிச்சிட்டு கார ஓட்டி புருஷ பொண்டாட்டி ரெண்டுபேர் மேல காரமோதி..காரமோதி..
அய்யோ ஸ்பாட்லயே அந்த ரெண்டுபேரும் போய்ட்டாடா..
அவாளோட ஒரே பொண்ணு..
அனாதயாகிப்போயி நிக்கருதுடா..
அந்தக்கொழந்த கதறர கதறல்..அய்யோ..
அந்த பாவம் இன்னும் ஏழு தலமொறைக்கு நம்ம குடும்பத்த சுத்திசுத்தி வரும்டா முரளி..
முடியல.. என்னால முடியல..
ஓ அப்பனுக்கு ஜாமீன் கீமீன்னுலா நா போகல.. போப்போறதில்ல..
வக்கீல் வெச்சு வாதாடப் போறதில்ல..அவ கொலகார.. ரெட்டக்கொல செஞ்சவ..
அவ இருக்க வேண்டிய எட ஜெயில்தா..அங்கயே கெடந்து அந்தபடுபாவி சாகட்டும்..
ஆனா அந்தப்பொண்ணோட நெலம?பாவம்..பாவம்..பாவம் அந்தப்பொண்ணு..
அதுனால..அதுனால..நா..நா ஒரு முடிவுக்கு வந்துட்டே..
தொடர்ந்து இருமல் வந்தது கிழவருக்கு..இருமி இருமி மூச்சுவாங்கியது.
சாவு என்ன நெருங்கிடுத்து.
சாகரதுக்குள்ள நெனச்சத நடத்திடனும்..ரொம்ப அவசரம்..அவசியம்..மனம் தீர்மானித்தது.
கையிலிருந்த பேரன் முரளியின் தந்தியை மீண்டும் படித்தார் கிழவர்.
வா முரளி..என் பேரா என்றார் ஒரு முடிவோடு.
விதி முரளி… சாரு.. ரேவதி மூவரையும் முக்கோணம் போட்டு மூன்று புள்ளியில் நிறுத்தியது.
அது ஆடப்போகும் ஆட்டத்தை யார்தான் அறிவார்?
அத்தியாயம் – 23
முழுவதுமாய் இரண்டு நாட்கள் தொடர் ரயில் பயணம் முடிந்து சென்னையில் ரெயில் நிலையத்தில் கால்வைத்து இறங்கினான் முரளி.
கலைந்த தலையும் கசங்கிய பேன்ட் ஷர்ட்டும் தூக்கமின்றி சிவந்தபோன கண்களூம்..
சரியான சாப்பாடின்றி ஏகத்துக்கும் களைத்துப் போன உடலுமாய் ப்ளாட்ஃபாரத்தில் நடந்தவ னுக்கு மாயவரத்துக்கு பஸ்லெல்லாம் போமுடியாது. ரொம்ப டயர்டா இருக்கு.
தாத்தாவ சீக்கிரம் போய்ப்பாக்கணும்.தாத்தாக்கு என்னாச்சோ ஏதாச்சோ தெரியல..கார்ல போறதுதா சரி என்று தோன்றியவனாய் ஸ்டேஷன் காபி ஸ்டாலில் ஒருபாட்டில் தண்ணீர் வாங்கி வாய் கொப்பளித்து முகம் கழுவினான்.
ஜில்லென்ற தண்ணீர் முகத்தில் பட்டதும் கொஞ்சம் அம்மாடி என்றிருந்தது.
தலையைக் கோதிவிட்டுக் கொண்டான்.
ஸ்டாலில் சூடாய்க்காபி வாங்கிக்குடித்தான்.
வயிற்றில் இறங்கிய காபி கொஞ்சம் தெம்பாய் உணரவைத்தது.
சாரு மெட்ராஸ் வந்துட்டே..
மெதுவாய் சொல்லிக் கொண்டான்.
க்கும்..மணி விடிகால மூணாகுது..சாரு தூங்கிட்ருப் பாங்க..சிரித்துக்கொண்டான்
விடிகால.. மணி மூனுன்னா.. இப்ப கார்ல ஏறினா எட்டு மணிக்குள்ள மாயவரம் போய் ஆத்துக்குப் போய்டலாம்.தாத்தாவ பாக்கணும்ப்பா..
ஸ்டேஷனைவிட்டு வெளியே வந்தான்.
கார் ஸ்டாண்டு நோக்கி நடந்தவனை..சார்..சார்..
கார்வேணுமா சார்..எங்க சார் போகணும்..
காருக்குள்ளிருந்து இறங்கி..
கேட்டபடியே இவனை நோக்கி வேகமாய் நடந்துவந்தார் காரிலிருத்து இறங்கியவர்.
மாயவரம் போணும்.
போலாசார்.. போலாசார்.
கார்ல ஏறுங்க சார்..
நீண்டபயணம்.துட்டு நிறைய கிடைக்குமென்ற சந்தோஷம் கார்காரருக்கு.
மாயவரம் போக எவ்ள நாழியாகும்?
மணி மூனுபத்தாவுது.. எட்டேகால் எட்ரக்குள்ளார மாயரம் போயில்லா சார்.காலநேரம் டிராபிக் இருக்காது சார்.ஏறி குந்துங்க சார்.எங்க சார் ஒக்கார்றீங்க?
முன்னாடியா பின்னாடியா?
பின் சீட்டில் அமர்ந்து கொண்டான் முரளி.
அதிகமாய் டிராபிக் இல்லாததால் தடையின்றி நெடுஞ்சாலையில் பறந்தது கார்.
மணி ஆறு. தரையில் படுத்துக்கிடந்த ரேவதி மெள்ள எழுந்து அமர்ந்தாள்.
இரவு முழுவதும் தூக்கமில்லாததும்.. அழுததும்..ஃபேன் கூட போட்டுக்கொள்ளாமவ் படுத்திருந்ததும்..அதனால் வியர்த்துப்போன கசகசப் பும்..கொசுக்கடியால் ஏற்பட்ட அரிப்பும்..
ஙொய்யென்று ஏதோ போல் இருந்தது உடம்பு.
குளிச்சிட்டுனா வருவமா?
தோன்றியது.குளித்தாள்.
புடவையணிந்தாள். கொஞ்சம் பளிச்சென்றி ருந்தது புடவை.
கைதலையைக்கோதிவிட்டபோது வரண்டு..சிடுக்காய் இருப்பது தெரிந்தது.
இயந்திரத்தனமாய் தலையில் தேங்காண்ணை தடவி சீப்பால் வாரி பின்னாமல் ரப்பர்பேண்ட் போட்டுக்கொண்டாள்.
பவுடர் பூசாமல் சிகப்பு ஸ்டிக்கர் பொட்டை கண்ணாடி பார்க்காமல் நெற்றியில் வைத்துக் கொண்டாள்.
கண்ணாடி பார்த்தால் தான் எந்த அளவுக்கு மோசமாய்த் தெரிவோம் என்று அவளுக்கே தோன்றியது.
காலண்டர் பார்த்தாள்.அம்மா அப்பா கார்மோதி இறந்த அன்று கிழிக்கப்பட்ட தேதி.
பக்கென்று கண்ணில் கண்ணீர் வந்தது.
ஊஹும்..இனிமே தேதியே கிழிக்க வேண்டாம்.இந்த தேதியோடவே நிக்கட்டும்.
காலண்டரைத்திருப்பிப் போட்டாள்.
மேஜைமீதிருந்த அப்பாவின் வாட்சில் தேதிபார்த்தாள்.
25 Wed..எனக்காட்டியது வாட்ச்.
இன்னும் ஆறுநாள் இருக்கு..
அடுத்த மாசம்..1ம் தேதி அப்பா வேலபாத்த கெமிகல் கம்பெனி வேலைக்கு வரச் சொல்லிருக்கு.. என்ன வேலன்னு தெரியல.. சம்பளம் கொறசசல்தா..
பாவப்பட்டு வேல குடுக்கறது அந்தக் கம்பெனி.
ஆனா என்னமோ ஒன்னும் புடிக்கில..ஒண்டியாருக்க பயமாருக்கு..பாதுகாப்பே இல்லமாரி தோன்றது.
ஒறவெல்லாம் எப்பிடீன்னு இப்பதா தெரியறது.
என்ன பண்ணப்போறே நா?
நெனைக்கவே பயமா ருக்கே..யார நம்பறது?
பட்பட்பட் வாசக்கதவு தட்டப்படும் சப்தம்.காமாக்ஷி பாட்டியான்ன?
எதுக்கு இப்ப வந்து கதவத் தட்றா?
அதா காபி சாப்பாடு எதுவும் அந்தக் கொலகாரப் பாவியாத்துலேந்து வேண்டாம்னுட்டேனே?
எ அப்பாவயும் அம்மாவையும் கொன்னவனாத்துலேந்து வாங்கி சாப்ட்டா எ அம்மா அப்பாவ அசிங்கப் படுத்தறாப்ல ஆகாது?
என்ன துணிச்சல் அந்த கெழவருக்கு?காபியும் சாப்பாடும் குடுத்தா ..எ அம்மா அப்பாவ திரும்பக் குடுத்தாப்ல ஆகிடுமா?
யாரு?கதவருகே சென்று கேட்டாள்.
கொழந்தே..நாதா காமாக்ஷி பாட்டி..கொஞ்சம் கதவத்தொறடிம்மா கொழந்த..
பட்டென்று கதவைத் திறந்தாள் ரேவதி.
பாட்டீ.. காபிகீபி கொண்டு வல்லியே..எத்தன தடவ சொல்றது அவாத்துலேந்து
எதுவும் கொண்டு வராதேள்னு.
இல்லடி கொழந்த..ஒன்னும் கொண்டுவல்ல..
ஆனா அந்த கெழவர் இழுத்துண்டு கெடக்கார்.
நெனவு போய்ப்போய் வருது.புடிவாதமா டாக்டரண்ட வரமாட்டேங்கிறார்.
சாகரத்துக்குள்ள ஒன்ன ஒருதடவ பாக்கணுமா..
ஒன்னண்ட என்னமோ சொல்லணுமா..கெஞ்சரார் ஒன்ன அழச்சுண்டு வரச்சொல்லி..கையெடுத்து கையெடுத்துக் கும்புடறார்.
அழறார்.
தொடர்ந்து விடாம இருமறார்.. மேமூச்சு கீழ்மூச்சு வாங்கறது..
எதிரியாவே இருந்தாலும்.. சாகரத்துக்கு முன்னாடி பாக்கணும்னு கெஞ்சினா
அந்த நேரம் மனசில ஒன்னும் வெச்சுக்காம போய் பாக்கணும்டி கொழந்த..
அந்த ஜீவன் தவிக்கறது ஒன்ன பாக்கணும்னு.
அவரோட புள்ள செஞ்ச தப்புக்கு.. பாவத்துக்கு அந்த கெழவர் என்னடி கொழந்த செய்வார்?சொல்லு?
அவர்ரொம்ப நல்ல மனுஷர்..
கடைசியா கெஞ்சறார்.
போய்ப் பாக்காம இருக்காத..
செத்துட்டா அவர் ஆத்மா அமைதியில்லாம தவிக்கும்.
வயசானவ சொல்லிட்டேன்..
அப்பறம் ஓ இஷ்டம்.
எது நடக்கணும்னு இருக்கோ அதா நடக்கும்.எதையும் நாம தடுக்கவும் முடியாது..மாத்தி செய்யவும் இயலாது.
எல்லாமே விதிச்ச விதிப் படிதா நடக்கும்.நா வரே..
காமாக்ஷி பாட்டி போய் விட்டார்.
அஞ்சு நிமிஷம் நின்ற இடத்திலேயே சிலைபோல் நின்றாள் ரேவதி.
சாகக்கெடக்கரவா என்னதா பொல்லாதவாளா..புடிக்காதவாளா..விரோதியா இருந்தா லும் ஒரு எட்டு போய்ப் பாத்துட்டு வரணும்..
அடிக்கடி அம்மா சொல்லும் அதே வார்த்தையை காமாக்ஷி பாட்டியும் சொன்னது ரேவதியை யோசிக்க வைத்தது.
கொலகாரன் வீடு.அப்பா அம்மாவக்கொன்னவ வீட்டு வாசப்படிய யாராவது மிதிப்பாளா?
நா போறே..ஏ..தெரியல..
சாகக்கெடக்கரவா பாக்க ஆசப்பட்டா போணுமாம்..
எதுக்கு ஆசப்படணும்? வேறெதுக்கு? புள்ளய மன்னிச்சிடுனு கேட்டுக்க..
ஒங்காத்துல ஆயிர ரெண்டாயிரம் பணத்த எம்புள்ள திருடிட்டா..
திருடினது தப்புதா.. மன்னிச்சுக்கணும்னா.. சாகப்போறவர் மன்னிக்கச் சொல்லி கெஞ்சறார்.. போனாப்போறதுன்னு மன்னிச்சுடலாம்.
மன்னிக்க இது பணவிஷயமா?
எ அப்பா அம்மாவ வாரிக்குடுத்துருக்கேன் வாரி..மன்னிச்சுடுன்னா மன்னிச்சுடுவேனா?பாவிகளா..
வீட்டுக்குள் நுழையவே பிடிக்காமல் நுழைந்தாள்.
கண்களை மூடி ஈஸிசேரில் சாய்ந்து கிடந்தார் கிருஷ்ணமுர்த்தி.
அடுத்த தெரு என்றாலும்.. கோவில் காவேரி கடைத் தெரு என்று ஏற்கனவே அவரை பலமுறை பார்த்திருக்கிறாள் ரேவதி.
ஆனால் குடும்பம் பற்றியெல்லாம் கொஞ்சமும் தெரியாது.
அய்யர்வாள் நமஸ்காரம் என்றபடி பலரும் அவருக்கு வணக்கம் சொல்வதைப் பார்த்திருக்கிறான்.
மில்ட்ரி மேன் என்ற ஹோதாவில் கனகம்பீரமான உடலமைப்போடு இருந்த அவர் கிழித்தநாராய் ஈஸிசேரில் சாய்ந்து கிடப்பது அதிர்ச்சியாய் இருந்தது ரேவதிக்கு.
என்னது நம்ம அப்பா அம்மாவோட ஆக்ஸிடெண்ட் நடந்து இருபத்திரெண்டு நாளுக்குள்ள இவர் இப்பிடியாயிட்டார்.போன மாசம்கூட திடமாதானே இருந்தார்.
மார்பு வேகவேகமாய் மேலும் கீழும் போய்போய் வந்து கொண்டிருந்தது.
பிரஞ்ஞ இருக்கா இல்லையா தெரியலயே..
க்கும்..என்று மெதுவாய்க் கனைத்தாள் ரேவதி.
கனைப்புச் சத்தம் கேட்டதோ என்னவோ மெள்ளக் கண்களைத் திறந்து.. தலையை நிமிர்த்தி நொடிநேரம் ரேவதியைப் பார்த்தார்.
அதற்குமேல் முடியவில் லையோ என்னவோ மீண்டும் தலையை அதிருந்த பழைய நிலையிலேயே வைத்து கண்களை மூடிக்கொண்டார்.
கைகளிரண்டும் நடுங்கிய படியே மெல்ல ஒன்றை யொன்று நெருங்கி கும்பிட்டன.
வாம்மா..வார்தையை உச்சரிப்பதற்குள் மூச்சு வாங்கியது.
நா..ரேவதி..கார்மோதி செத்துப்போனவா பொண்ணு..நறுக்கென்று சொன்னாள்.
லேசான விம்மல் சத்தம் வந்தது கிழவரிடமிருந்து.
கொழந்த..மன்னிச்சிக்கோனு சொல்லி மன்னிப்புல்லாம் கேக்கமாட்டே..மன்னிக்கிற விஷயமில்ல இது.
எம்புள்ள செஞ்சபாவத்துக்கு எந்த பிராயசித்தமு ஈடாகாது.
பிராயசித்தம் செஞ்சு தீக்கக்கூடிய காரியமில்ல இது.
நா அவனப்பெத்தது நா செஞ்சபாவம்..அவ ஒ பெத்தவாள சாகடிச்சது மன்னிக்குமுடியாத குத்தம்னுலா வாய்வார்த்த சொல்றதால ஓ பழைய நெலம திரும்பி வந்துடப் போறதில்ல..
எ வயத்துல பொறந்த பாவி.. பண்ணின பாவத்துக்கு அவ ஜெயிலுக் குப் போய்ட்டதாலோ..
நா ஒன்னண்ட மன்னிப்புக் கேட்ட நிம்மதில செத்துப் போறதாலோ..எம் பாவம் தீந்துடாது.
பெத்தவங்கள எழந்து நிர்கதியாய் நிக்கிற ஒனக்கு..
ஒரு நல்ல பாதுகாப்ப ஏற்படுத்தித்தராம நா செத்துப்போனா..அந்த நரகத்துலகூட எனக்கு எடம் கெடைக்தும்மா..எ ஆத்மாவுக்கு சாந்தி கெடைக்காதும்மா..
மூச்சு வாங்கியது கிழவருக்கு..
நா ராணுவ வீரனா இருந்தவ..தாய்நாட்டப் பாதுகாக்கற புனிதமான பணிய செஞ்சவ..
நாட்டுக்கு விஸ்வாசமான வேலக்காரனா இருந்தவ..
துரோகம்னா என்னனு எனக்குத்தெரியாது.அத நாட்டுக்கு நா செஞ்சதில்ல..
அதுனால அந்த துரோகத்த நா யாருக்குமே செய்ய மாட்டே..
கொழந்த.. நிச்சயமா நா இன்னும் சில மணிநேரத்துல இறந்துடுவே..அதுக்குள்ள ஒன்னே ஒன்னு வேண்டிக் கேட்டுக்கறேன்.நா கேட்டுகறதுக்கு சம்மதிப்பியாம்மா? கெஞ்சறேம்மா..
மூச்சு வாங்கியது.. தொடர்ந்து அடுகடுக்காய் இருமினார்.மூச்சிழுக்கும் போது ஒரு மாதிரி சப்தம் வந்தது.
பயமாயிருந்ததுரேவதிக்கு.
ஆனாலும்..வேறென்ன நஷ்ட்ட ஈடா கொஞ்சம் பணம்தரே.. வாங்கிக்கோ வெச்சுக்கோன்னு சொல்லப் போறார்.பணக்காரத் திமிரு.
இவர் குடுக்குற பணம் என்னப்பெத்தவங்களுக்கு ஈடாகுமா?என்று எழுந்த எண்ணம் அதீத கோபத்தை உண்டாக்கியது ரேவதிக்கு.
ச்சீ..பணம்தானே?யாருக்கு வேணும் ஒங்க பணம்?
நீங்க குடுக்குற பணம் எனக்கு எ அம்மா அப்பாவையும் அவா தர்ர பாதுகாப்பையும் தந்துடுமா?
வெகு கோபத்தோடு கேட்டாள்.
கொழந்த நீ கேக்கறது ரொம்பசரி..ஒ அம்மா அப்பாவையும் அவாதர்ர பாதுகாப்பயும் மீண்டும் தரவேமுடியாது.அந்த எடத்த யாரும் இட்டு நெரப்ப முடியாது.
ஆனா இனிமே தொடரப் போகும் ஒன்னோட வாழ்க்க பூராவும் ஒன்னோடவே சேந்து நடக்க ஒரு தொணைய குடுத்தா ஏத்துப்பியாம்மா..
என்ன சொல்றார் இவர்?
குழம்பிப் போனாள் ரேவதி.
புரியல..
கொழந்த என் பேரன..பேரன கல்யாணம்பண்ணிக்க சம்மதிப்பியா?
தாத்தா..த்தூ..ஒங்க பேரணும் ஒங்க புள்ளையாட்டம்தானே இருப்பார்?யாருக்கு வேணும் ஒங்க அக்கறையும் அனுதாபமும்?கத்தினாள்.
இல்லம்மா..இல்லம்மா..
சத்தியமா சொல்றே..எம்பேர முரளிகிருஷ்ணா..அவ அப்பாமாதிரி..ஆதாவது எம்புள்ளமாதிரி கெட்டழியும் பைய இல்ல..எம்பேர என்னமாதிரி…அவ அவனோட அப்பாட்ட பேசவே மாட்டா..அவுனுக்கு அவ அப்பாவ கண்டாலே புடிக்காது.
எம் பேரன் ஒரு ஜெம்.
எம்பிபிஎஸ் முடிச்சிட்டு எம்டிபண்றான்.பம்பாய்ல டாக்டரா இருக்கா..இருவத்தெட்டு வயசாருது.நா கிழிச்ச கோட்டத் தாண்டாமாட்டா.
எந்தவிதமான கெட்டபழக்கமு கெடையாது.
எம்பேரனப்பத்தி நா சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் உண்ம.. சத்தியம்.
சாகரத்துக்கு முன்னாடி குற்றவாளிகூட பொய் சொல்லமாட்டான்.
இன்னும் கொஞ்ச நாழில சாகப்போற நா சொல்றது அத்தனையும் உண்மை. கடவுள் மீது சத்தியம்.என்ன நம்புமா..மறுபடி மறுபடி சொல்றே..நா சொன்ன அத்தனையும் உண்ம.. உண்ம..சத்தியம் சத்தியம்.
தாங்க முடியாத இருமலால் தவித்துப்போனார் கிழவர்.
வியர்த்துக் கொட்டியது.
கொழந்த நா சொன்னதுல ஒனக்கு நம்பிக்க ஏற்பட்டிருந்தா..ஒனக்கு சம்மதமிருந்தா நீ அதோ இருக்குற கிச்சன்ல போய்நில்லு.அப்பிடிநீ போய்நின்னா ஒனக்கு எ பேச்சுல நம்பிக்க இருக்கு..
ஒனக்கு சம்ம்மதமிருக்குனு நெனச்சுக்கிறே..
அப்பிடியில்லேன்னா நீ..நீ..
ஆத்துக்குப்போகலாம்மா..
அதீத களைப்பில் கண்களை மூடிக்கொண்டார் கிழவர்.
செய்வதறியாது சிலையாகி நின்றாள் ரேவதி.
இதனை நான் செய்தே னென்று சொல்லிக் கொள்வதோ..நீ செய்தா யென்று பிறரை சுட்டிக் காட்டவோ முடியாது. யாரும் விதியைத்தாண்டி எதுவும் செய்து விட முடியாது.
எல்லாமே விதியின் கையில்தான்.எல்லோரும் விதியின் பிடியில்தான்.
ரேவதி மட்டும் விதிவிலக்கா என்ன?
விதி ரேவதியை கிச்சனை நோக்கி நடக்க வைத்தது.
அத்தியாயம் – 24
கிச்சனை நோக்கி மெல்ல நடந்தாள் ரேவதி.
பிரம்மாண்டமான கிச்சன். கிச்சனில் கால்வைத்ததுமே கிச்சனுக்குள்ளேயே இருந்த சுவாமி அலமாரி கண்ணில் பட்டது.
அலமாரியின் முன்பு போய் நின்றாள்.நிறைய தஞ்சாவூர் ஆர்ட் சுவாமி படங்கள்.
மெஷினைப் போல் கையெடுத்து கும்பிட்டாள். பயமும் கவலைகளும் இன்னதென்று புரியாத உணர்வுகளும் நிரம்பியிருக் கும் மனதில் சுவாமி படங்களைப் பார்த்ததுமே பக்தி சுரந்துவிடுகிறதா என்ன? பழக்க தோஷம் கைகள் குவிந்தன.
மனக்குழப்பங்கள் ரேவதியை சிந்திக்கவே விடவில்லை.எதற்காக பெரியவர் தன்னை கிச்சனில் போய் நிற்கச் சொன்னார் என்பதை சிந்திக்கத் தோன்ற வில்லை. தேமேனென்று அலமாரிமுன் நின்றிருந் தாள்.
ஒருவேளை அரைமணி நேரம் நிற்கவேண்டியிருந் திருந்தால் சிந்திக்கத் தோன்றியிருக்குமோ என்னவோ?
வாசலில் வந்து நின்றது கார்.
கதவை திறந்துகொண்டு பேக்கைத் தோளில் மாட்டிக்கொண்டு கீழே இறங்கிய முரளி..
ஏற்கெனவே காருக்குள் ளேயே.. இறங்குவதற்கு முன்பாகவே கார்காரரிடம்
காருக்கான வாடகையைக் கொடுத்துவிட்டதால்.. மறக்காமல் கார்காரருக்கு நன்றி சொல்லிவிட்டு ..
படாரென்று கார்க்கதவை அறைந்து சாத்திவிட்டு வீட்டுக்குள் ஓடினான்.
ரேழியில் கால் செருப்பு களை கால்களை உதறி தூர வீசினான்.
தாத்தா காத்திக்கொண்டே..
ஈஸிசேரில் மார்பு வேகவேகமாய் ஏறியிறங்க வித்தியாசமாய்ப் மூச்சுவிட்டபடி கண்களை மூடிப்படுத்திருக்கும் தாத்தாவை நோக்கி ஓடினான். ஓடும்போதே கையிலிருந்த பேக்கை சுவர்நோக்கி தூக்கி யெறிந்தான்.
கிச்சனில் நின்றிருந்த ரேவதிக்குத் திக்கென்றது..
தாத்தானு கூப்டுண்டே வரது யார்?இந்த கிழவரோட பேரனா?பேரனப்பத்தி சொன்னாரே யொழிய பேரன் இன்னிக்கு வரப்போறதா சொல்லலியே?
பேரன் வரப்போரது கிழவருக்குத்தெரியும்னா.. என்ன எதுக்கு கிச்சன்ல போயி நின்னுன்னார்?
அதுவரை யோசனை செய்யும் திறனின்றி இருந்த புத்தி விழித்துக்கொண்டு கேள்விகேட்டது.
கிச்சனில் நிற்பது முள்மேல் நிற்பதுபோல் இருந்தது.
தாத்தாவின் முகத்தருகே சென்று குனிந்து குரலை மெதுவாக்கித் தாத்தா என்றான்.
அவனொரு டாக்டர் என்ற முறையில் தாத்தாவின் கன்டிஷன் மோசமாக இருப்பதாகப்பட்டது.
கண்கள் கலங்கிப் போயின.நெஞ்சுக்குள் பந்தாய் ஏதோவொன்று அடைப்பதுபோல் இருந்தது.
பயம் மனதைக் கவ்வியது. வயிறு சங்கடம் செய்தது.
மீண்டும் தாத்தா..நா முரளி வந்திருக்கேன்.ஒங்க பேரன்.
நா முரளி வந்திருக்கேன். கிழவரிடம் சொல்வது கிழவரின் பேரன்தான் என்பது உறுதியானது ரேவதிக்கு.
பேரன்பேரு முரளி கிருஷ்ணான்னுதானே சொன்னார் கிழவர்.
கடவுளே..நா இங்க இருக்கறது தப்பில்ல?..
எதாவது எடுக்க கிழவரோட பேரன்.. இங்க கிச்சனுக்கு வந்தா?நா இருக்கறத பாத்தா?
கேவலமில்ல..தவிப்பா யிருந்தது ரேவதிக்கு.
ஹாலில் முரளி பேசும் பேச்சு காதில் விழுந்தது.
கண்ணமுழிச்சிபாருங்கோ தாத்தா..சொல்லிக்கொண்டே தாத்தாவின் கை மணிக் கட்டைப்பிடித்து பல்ஸ் பார்த்தான்.
கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
இவன் கைகள் பட்டதும்.. மெல்லக்கண் திறந்தார் கிழவர்.
முரளி கண்ணா.. வந்துட்டியா?நீ வருவன்னு தெரியும்.
தாத்தா ஏந்தாத்தா என்னாச்சு உங்குளுக்கு? ரெண்டுமாசம் முன்னாடி வந்தப்ப நீங்க இப்பிடி இல்லையே தாத்தா?
முரளிகண்ணா..இந்த ஒருமாசத்துல ஏதேதோ நடந்துபோச்சு..மூச்சு வாங்கியது..
அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்.மொதல்ல ஹாஸ்பிடல் போவம் தாத்தா..
பரப்பாய் கத்தினான் முரளி.
முரளி கண்ணா..நீ ஒரு டாக்டர். எ நெலம எப்பிடியிருக்குனு ஒனக்கு நன்னா தெரியும்.
நா பத்தேகால் மணியோட முடிஞ்சிபேடுவேன்.
தாத்தா..அப்பிடி சொல்லா திங்கோ தாத்தா..அழுதான் முரளி.
முரளி கண்ணா அழாத..
எதா நடந்தாலும் ஏத்துக்கணும்..வேற எதையும் பேச நேரமில்ல..
முக்கியமானத பேசவே டைமிருக்குமா தெரியல.. ஒன்னப்பாக்கணும்னுதா உசிர புடிச்சி வெச்சிண் ருக்கே..இப்ப சொல்லாட்டா இனிமே எப்பவும் சொல்ல முடியாது கண்ணு.
தாத்தா..
முரளிகண்ணா அழாத செல்லம்..நா சொல்லப் போறத கேளு..நா பேசமுடியாம பேசறேன். தொடர்ந்து இருமினார்.
தாத்தா என்றபடி தாத்தாவின் நெஞ்சை இதமாகத் தடவிவிட்டான் முரளி.
அப்பறம் பேசலாம் தாத்தா..
பந்தே காலுக்குமேல பேச நா இருக்க மாட்டேங்கண்ணு..
இப்பவே பேசிடறேன்.
தாத்தா..
நடக்கக்கூடாத ஒன்னு நடந்துபோச்சு.
தாத்தா என்ன சொல்றேள்?
என்ன நடந்துபோச்சு..அந்த மொடாக்குடியன் குடிச்சிட்டுக் கூத்தடிச்சானா..வீட்டுக்கே பொம்பளய கூப்டுண்டு..
நாசமாப்போக..அப்பன்னு சொல்லவே அவமானமா இருக்கு..கேவலம் புடிச்ச ஆளு.ஒங்குளுக்குப்போய் இந்தாளுமாரி ஒருபுள்ள..
ஒங்க பேரனுக்கு இந்த மாரியொரு அசிங்கம் புடிச்ச அப்பா..கடவுளே இப்பிடியொரு அப்பனுக்குப் பொறக்க என்ன பாவம் செஞ்சேனோ?
அந்தாளுமாரி ஒரு புள்ளைய பெக்க நீங்க என்ன பாவம் செஞ்சேளோ?அம்மா சாகும்போது என்னையும் அழச்சுண்டு போயிருக் கலாம்.
முரளி பேசிய பேச்சுக்கள் அப்படியே பிசிறில்லாமல் காதில் விழுந்தது ரேவதிக்கு.
கிழவர் சொன்னாப்ல அவரோட பேரன் நல்லவர்தா போலருக்கு..
குடிகார அப்பாவ இவ்ளவு வெறுத்துப்பேசராரர்னா..அவருக்கு அந்த பழக்கம்லா இல்லேன்னு தானே அர்த்தம்?
மேற்கொண்டு அவர்களின் பேச்சைக் கூர்ந்து கவனித்தாள் ரேவதி.
முரளீ..எப்டீடா சொல்லு வேன்.நா பெத்த அந்தபாவி
குடிச்சிட்டு கண்ணு மண்ணு தெரியாம கார ஓட்டி..
ஆம்படையா..பொண்டாட்டி ரெண்டுபேர்மேலயு மோதி..
மோதி.. ரெண்டுபேரு ஸ்பாட் அவுட்டுடா..
அவாளுக்கு கல்யாண வயசுல ஒரு பொண்ணு..ஒரே பொண்ணு..இப்ப பெத்தவாள பறிகுடுத்துட்டு அநாதையா நிக்கருதுடா அந்தப்பொண்ணு..
இந்த பாவத்த நா எங்கடா கொண்டுபோய் தொலைப்பே..
அந்தப் பொண்ணு விடுற கண்ணீர் ஏழுதலமுறைய தாக்கும்டா முரளீ..
பேசமுடியால் பேசினார் கிழவர்.
தாத்தா.. கத்திவிட்டான் முரளி..
அடப்பாவி..குடிகாரப்பாவி..
அந்தாளு ஜெயில்ல கெடந்து சாகட்டும் தாத்தா..
அய்யோ..கேக்கவே தாங்கமுடியலயே..
இது எப்பதாத்தா நடந்துது?
இருவத்தி மூணுநாள் முன்னாடி.
அந்தப்பாவி மொகத்தகூட நாம்பாக்கல..தப்பிக்கவே முடியாத குற்றச்சாட்டு.. ரெட்டக்கொல.. பாவி..பாவி..
நா ஜாமீனுக்கோ.. வக்கீல் வெச்சுலா வாதாடவோ போகல..அப்டியே தொலை யட்டம்னு விட்டுட்டேன்.
தொலையட்டும் குடிகாரப் பாவி..தூக்குல போடணும்.
அந்தப் பொண்ணு பாவம் தாத்தா..அந்தப்பொண்ணுக்கு நாம எதாவது செய்யணும்.
இரும ஆரம்பித்தார் கிழவர்.
ஈனஸ்வரத்தில் பேசினார்.
முரளி அந்த பொண்ணுக்கு என்ன செய்யலாம்கிற..
ஆ..நெஞ்சைப்பிடித்துக் கொண்டார்.
தாத்தா..அப்றம் பேசலாம் தாத்தா..தாத்தாவின் நிலைமை நன்றாகப்புரிந்தது முரளிக்கு.
இல்ல..இனிமே நேரமில்ல பேச..அந்த பொண்ணுக்கு என்ன செய்யலாம்கிற?
இந்த வீடு நெலம் தோப்பு தொறவு எல்லாத்தையும் அந்த பொண்ணுக்கு எழுதித் தந்துடலாம் தாத்தா..
அத்தனையும் குடுத்தா அந்தப்பொண்ணோட அப்பா அம்மாக்கு ஈடாயிடுமா முரளி கண்ணா?
அந்த சொத்துதா பெத்தவங்க குடுக்குற பாசத்தையும்.. பாதுகாப் பையும் தந்துடுமா? சொல்லு.
ஒரு வயசுப்பொண்ணு இந்த ஒலகத்துல தனியா வாழ்ந்துட முடியுமா முரளி?
முடியாது தாத்தா..
அப்ப என்ன செய்யலாங்கற?
ம்ஹ்ம்..மூச்சை கஷ்ட்டபட்டு
உள்ளே இழுத்து வெளியே விட்டார்.சுவாசிப்பதள்கு தாத்தா அல்லாடுவது புரிந்தது முரளிக்கு.
நல்ல படிச்ச வேலபாக்குற..
வசதியான பையனா பாத்து அந்த பொண்ணுக்குக் கல்யாணம்னா பண்ணி வெச்சுடலாமா தாத்தா நல்ல பாதுகாப்பு கெடைக்கும்.
முரளி நீ நல்லா படிச்சவ.. டாக்டர்..மருத்துவத்தொழில் பண்ற..வசதியான குடும்பம்.
எல்லாத்தியும் தாண்டி நீ எந்த கெட்டபழக்கமு இல்லாதவ.. நல்லபைய..நீயே அந்த பொண்ண கல்யாணம் பண்ணிண்டா..அத விட அந்த பொண்ணுக்குப் பாதுகாப்பு வேற என்ன இருக்கமுடியும்?
அதிர்துபோனான் முரளி..
தாத்தா நானா?அந்தப் பொண்ண நானா? கத்தினான்..
கத்தாத முரளி..நீ எம்மேல வெச்சுருக்குற அன்பும் பாசமும் மரியாதையும் உண்மையானா..நா நெஜமான பாசத்தையே ஒன்மீது காட்டினேன்னு நீ நம்பினா.அந்தப்பொண்ணு கழுத்துல தாலிகட்டு..
இது என்னோட கடசி ஆச..
நா அந்தப்பொண்ணுக்கு வாழ்க்ககுடுன்னு ஒன்னக் கேக்கல..கெஞ்சல..அப்பிடி கேட்டா கெஞ்சினா..அது அந்தப் பொண்ணையும் அந்தபொண்ணப் பெத்தவாளயும் சிறும படுத்தறதா ஆகும்.
நீ அந்தப்பொண்ண கல்யாணம் பண்ணிண்டு மனைவிங்குற அந்தஸ்த்த குடுக்கணும்..நல்ல கணவனா நடந்துக்கணும்..
இப்பிடி செஞ்சாலொழிய ஓ அப்பன்..இந்தப்பாவி பெத்த மகாபாவி.. செஞ்ச மகாபாவத்துக்கு பிராய சித்தம் வேறேதுமில்ல..
மூச்சு வேகாவேகாமா இறைக்க ஆரம்பித்தது. கண்களை முடிமூடித் திறந்தார்.
அதிர்ச்சியில் உறைந்து நின்ற முரளி..வேண்டா தாத்தா..நா..நா..என்று சொல்லவந்ததை சொல்லமுடியாமல் தவித்தான்.
தாத்தாவின் உயிர் சிலநிமிடங்களில் பிரிந்துவிடுமென்று அவனுக்குப் புரிந்தது.
தாத்தா நா சாருங்கிற பொண்ண விரும்ப றேனென்று சொல்ல முடியாமல் மனம் முடங்கியது.
விக்கித்துப் போய் நின்றான்.
முரளி..அதோ அதோ தர்மராஜான் பாசக்கயித்த சொழட்டிண்டு நிக்கறான்.
எம்மேல வீசவேண்டிதுதா பாக்கி..
அந்தப்பொண்ணு கழுத்துல தாலிய கட்டு..எ வார்த்தைய புறக்கணிக்காத..மறுத்து எதுவும் சொல்லாத.. சாகப்போற என்னோட கடைசி வேண்டுகோள நிறைவேத்து முரளி..ஒ தாத்தா கும்பிட்டுக் கேட்டுக்கறே..
மணி பத்து பத்து..இன்னும் அஞ்சே நிமிஷம் தா..நா அடங்கிடுவேன்.பேசநேர மில்ல..
ரேவதீ கொழந்த இங்க வா….அணையப்போகும் தீபம் கடைசியாய் பளிச்சென்று எரிந்து ஒளி வீசுவதுபோல்..சப்தமாய் ரேவதியின் பெயரை உச்சரித்தார்.
கிச்சனிலிருந்து மெதுவாய் நடந்துவந்து எதிரில் நின்றாள் ரேவதி. உடல் நடுங்கியது.
கிழவர் நடுங்கும் கரங்காளால் அணிந்திருந்த ஷர்டின் உள்பக்கப் பாக்கெட்டிலிருந்து திருமாங்கால்யம் கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிரையும் குங்குமப் பொட்ட லத்தையும் வெளியே எடுத்தார்.
முரளியிடம் மஞ்சள் கயிற்றை கைநடுங்க நீட்டினார்.
இந்தப்பொண்ணுதா ரேவதி.
ஓ அப்பங்காரனால..நாம் பெத்த பாவியால.. பெத்த வாள எழந்து நிர்கதியா நிக்கற பொண்ணு..
யோசிக்க நேரமில்ல.. தாலியக்கட்டு..
தாத்தா..சாரு தாத்தா.. மனம் கதறுவதை சொல்லிக் கத்தமுடியாமல் தாலியைக் கையில் வாங்கினான் முரளி.
கைகள் நடுங்கின.நெஞ்சம் சாரூ.சாரூ என்று கதறியது..
எதிரில் நிற்கும் பெண்.. கருப்பா சிகப்பா உயரமா குள்ளமா அழகா குரூபியா ஊமையா பேச்சுவருமா
எதையும் சிந்திக்கும் திறனற்றுப்போனது மனது.
நிமிர்ந்து ரேவதியைப் பார்த்தான்.அந்த நிலையிலும் அவனின் பண்பாடு மரத்துப் போகவில்லை.
இந்தத் திருமணத்துல ஒங்குளுக்கு சம்மதமா எனக்கேட்டான் மெதுவான குரலில்.
ம்..லேசாக.. சம்மதமென்ற அர்த்தம் தருவதுபோல் தலையாட்டினாள் ரேவதி.
நடுங்கும் கரங்களால்.. கைநீட்டி..மனம் சாரூ என்று அலறிக்கதற.. ரேவதியின் கழுத்தில் மஞ்சள்கயிற்றை.. தாலிக்கயிற்றைக் கட்டினான் முரளி.
பொட்டலத்திலிருந்து குங்குமமெடுத்து ரேவதியின் நெற்றியில் வைத்தான்.
யாரோடு யாரை இணைக்க வேண்டுமென தீர்மானிக்கும் விதி..முரளியைச் சாருவிட மிருந்து விலக்கி..சாருவின் உயிர்த்தோழியோடு இணைத்து..
என்ன?என்ன?என்ன விளையாட்டு நிகழ்த்துகிறது விதி? இதென்ன கண்ணா மூச்சி விளையாட்டு?இதோடு
விளையாட்டை நிறுத்திக் கொள்ளுமா?ஆசைதீர இன்னும் விளையாடுமா?
யாரறிவார் விதியின் விருப்பத்தையும் விளையாட்டையும்?
ரேழி வாசல்படியில் வந்து நின்ற காமாக்ஷி பாட்டியின் கண்களில் முரளி ரேவதியின் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டுவது விழுந்தது.கொழாந்தேள் நன்னாருக்கட்டும்.கிழவர் எப்பேர்ப்பட்ட நல்லவர்.
புள்ள செஞ்சபாவத்துக்கு பேரனால ப்ராயசித்தம்னா பண்ணீட்டார்.சிலாகித்தது பாட்டியின் மனம்.
தாலியைக்கட்டிவிட்டு கண்ணீரால் நிரம்பியிருந்த கண்களோடு மெல்லத திரும்பி தாத்தாவைப் பார்த்தான் முரளி.
கிழவரின் உடல் ஒருமுறை விலுக்கென்று சுண்டியிழுத் தது.கண்கள் தாமாக மூடிக் கொண்டன.மணி பத்தேகால்.
தாத்தா..கத்தினான் முரளி.
– தொடரும்…
![]() |
பெயர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன். ஊர்: காஞ்சிபுரம். காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் எனும் நான் ஓர் பெண். தங்கமணி எனும் பெயர் ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்துவதால் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். அதனால் தான் விளக்கம் தந்துள்ளேன். நிறைய சிறுகதைகள், தொடர்கதைகள், ஆன்மிகக் கதைகள், சிறார்களுக்கான கதைகள், கவிதைகள் வாராந்திர அச்சு ஊடகங்கள், மின்னிதழ்களில் காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்..தற்போதும் எழுதிவருகிறேன். கதைகள்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
காயமே இது பொய்யடா!
சிங்கை மா.இளங்கண்ணன்
November 16, 2026
வாசல் தேடி வந்த வசந்தம்
கல்பனா ராஜகோபால்
November 16, 2026
சொல்லாமலே யார் பார்த்தது?!
இரஜகை நிலவன்
November 16, 2026
